ரஜினி நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து அதிக வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வந்த ஆக்ஷன் திரைப்படங்கள் எல்லாமே பெருமளவில் வசூலை கொடுத்துள்ளன. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமானது மற்ற லோகேஷ் படங்களை விடவுமே சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு தகுந்தாற் போல ஏற்கனவே கூலி படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் படம் குறித்து திருப்தி அடைந்துள்ளார். இந்த நிலையில் படம் பேன் இந்தியா படம் என்பதால் நிறைய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். அவர்களின் சம்பள விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்திற்கு இந்த படத்திற்கான சம்பளமாக 200 கோடி பேசப்பட்டுள்ளது. 150 கோடி ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கி 50 கோடி படத்தின் வெற்றிக்கு பிறகு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூபாய் 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
அதே போல நடிகர் அமீர்கான் இந்த படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். நடிகர் நாகர்ஜுனா 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்
நடிகர் சோபின் 1 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். ஸ்ருதிஹாசன் மற்றும் பூஜா ஹெக்தே ரூபாய் 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளனர். உப்பேந்திரா ராவ் 2 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என பேச்சுக்கள் இருக்கின்றன.