சூப்பர் ஸ்டாரே ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி படத்துக்கு போன சம்பவம்!.. என்னப்பா சொல்றீங்க!..

Rajinikanth : ஆரம்ப கட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டுதான் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்தார். பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் முக்கியமாக சொல்லும் விஷயங்கள் பிளாக்கில் விற்கும் டிக்கெட்டை வாங்கி யாரும் எங்கள் படத்திற்கு வர வேண்டாம் என்று கூறுவார்கள்.

ஆனால் இவ்வளவு பெரிய பிரபலமான ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தை ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி சென்று பார்த்த சம்பவம் நடந்திருக்கிறது. பொதுவாக ரஜினிகாந்த் அவரது திரைப்படங்கள் குறித்து மக்களின் விமர்சனத்தை அறிவதற்காக மாறுவேஷத்தில் திரைப்படங்களுக்கு செல்வார் என்று ஒரு பேச்சுக்கு உண்டு.

ஆனால் இது அப்படியெல்லாம் நடந்த நிகழ்வு அல்ல மாறுவேஷம் எல்லாம் போடாமலே ரஜினி சென்ற ஒரு திரைப்படம் எனக் கூறலாம் அது வேறு எந்த திரைப்படமும் இல்லை அபூர்வ ராகங்கள் திரைப்படம்தான். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினி நடித்த பொழுது அவர் அவ்வளவாக பிரபலம் கிடையாது.

Social Media Bar

அந்த திரைப்படம் வெளியான பிறகு கூட சகஜமாக அவர் சாலைகளில் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த நிலையில் அபூர்வ ராகங்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு ரஜினிகாந்த் சென்ற பொழுது அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. தான் நடித்த படத்தை தானே பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது என வருந்தினார் ரஜினிகாந்த்.

அதேசமயம் தான் நடித்த படத்திற்கு டிக்கெட் முழுமையாகி விட்டதே என்கிற சந்தோசமும் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் அங்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்பது அறிந்து வைத்திருந்த மொத்த காசையும் கொடுத்து அந்த டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்று அந்தப் படத்தை பார்த்து இருக்கிறார் ரஜினிகாந்த் இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.