Cinema History
பால் சாப்பிட மாட்டேன்.. குரு மந்திரம்தான் சொல்லுவேன்!.. டபாய்க்காதீங்க சார்.. கலாய்க்கு உள்ளான ரஜினியின் பேச்சு!..
தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் எக்கச்சக்கமான திரைப்படங்களில் ஹிட் கொடுத்துள்ளார்.
அதனாலேயே இப்போதும் கூட அவர் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது 60 வயதிற்கு மேல் தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான்.
ரஜினிகாந்த் அதிக ஆன்மீக சிந்தனை கொண்டவர். தன்னுடைய இளம் வயது முதலே ஆன்மிகம் மீது அதிக நாட்டம் கொண்டவர். ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது தினமும் எப்படி வாழ வேண்டும் என்பதை குறித்து சில விஷயங்களை கூறியிருப்பார்.
அதில் அவர் கூறும் பொழுது தினமும் ஒரு மணி நேரம் நடப்பேன். பத்து நிமிடம் உடற்பயிற்சி செய்வேன். வெள்ளையாக இருக்கும் எந்த பொருளையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். அவையே உடலுக்கு ஆபத்தானதாகும். மாத்திரை, பால், வெண்ணெய், தயிர் இப்படி எதையுமே எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார்.
மேலும் தினமும் ஒரு முறை குரு மந்திரம் சொல்லுவேன் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள் இந்த வீடியோவின் கமெண்டில் முழுக்க முழுக்க ரஜினியை கலாய்த்து வைத்துள்ளனர்.
ஏனெனில் வெள்ளை நிறத்தில் இருக்கும் உணவுகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஒரு ஆய்வுபூர்வமான ஆதாரமும் கிடையாது. அது ஒரு சிலர் கிளப்பிவிட்ட புரளி மட்டுமே. இப்போது வரை பால் தொடர்பான பொருட்கள்தான் உலகளவில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
