Tamil Cinema News
ஜெயிலர் 2 படத்தால் வந்த பிரச்சனை- வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்.!
கூலி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. ஜெயிலர் 2 திரைப்படம் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு என்பது இருந்து வருகிறது.
ஏனெனில் ஜெயிலர் முதல் பாகமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் தற்சமயம் கேரளாவில் ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பானது நடந்து வருகிறது.
இந்த வருட இறுதிக்குள் ஜெயிலர் 2 படத்தின் மொத்த படப்பிடிப்புகளும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் சங்கத்தை சேர்ந்த நடிகர்களை நடிக்க வைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் இன்று ஆர் கே செல்வமணி தலைமையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் பொது வேலை நிறுத்தத்தில் இறங்கி இருக்கின்றனர்.
இது குறித்து ஆர் கே செல்வமணி கூறும் பொழுது நிறைய திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு சங்கத்து நபர்களை பயன்படுத்த மாட்டேன் என்கிறார்கள் அதனை எதிர்த்து தான் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
