Connect with us

எல்.சி.யுனு சொல்லிக்கிட்டு என்கிட்ட கிளம்பி வர வேண்டாம்!.. ரஜினி போட்ட ரூல்ஸால் பிரச்சனையில் சிக்கிய லாரன்ஸ்!..

rajinikanth raghava lawarance1

Cinema History

எல்.சி.யுனு சொல்லிக்கிட்டு என்கிட்ட கிளம்பி வர வேண்டாம்!.. ரஜினி போட்ட ரூல்ஸால் பிரச்சனையில் சிக்கிய லாரன்ஸ்!..

Social Media Bar

Thalaivar 171 Rajinikanth : லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக இருந்தாலே அது எல்.சி.யுவாகதான் இருக்கும் என மக்கள் நினைக்கும் அளவிற்கு தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. ஒவ்வொரு கதாநாயகனையும் எல்.சி.யுவில் சேர்க்கும்போது லோகேஷ் கனகராஜிற்கே அது கடினமான விஷயமாகதான் அமைந்து விடுகிறது.

லியோ திரைப்படத்திலும் கூட விஜய்யை எல்.சி.யுவில் இணைத்திருந்தார். விஜய்க்கு இப்போது இருக்கும் சம்பள நிலவரத்திற்கு அவரை எல்.சி.யுவிற்குள் கொண்டு வரும்போது அது படத்தின் பட்ஜெட்டிலேயே பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த நிலையில் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் எல்.சி.யு என எந்த படத்தையும் கனெக்ட் செய்ய கூடாது என கூறியுள்ளாராம் ரஜினிகாந்த்.

thalaivar 171
thalaivar 171

எனவே மற்ற லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் வந்த எந்த நபர்களும் இதில் நடிக்க கூடாது. ஏனெனில் அப்படி நடித்தால் இது எல்.சி.யு (LCU) திரைப்படம் என மக்கள் நினைத்துவிட கூடும். இதனால் விக்ரம் திரைப்படத்திலும் ரஜினிகாந்தை எதிர்பார்க்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த முடிவை எடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த படங்களில் சிவகார்த்திகேயன் (sivakarthikeyan) மற்றும் ராகவா லாரன்ஸ் இருவருக்கும் வாய்ப்பளித்துள்ளார் ரஜினிகாந்த். இவர்கள் இருவருமே ரஜினிகாந்தின் பெரும் ரசிகர்கள், ரஜினியோடு நடிக்க ஆசைப்பட்டவர்கள்.

ஆனால் ராகவா லாரன்ஸ்தான் கைதி 2 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் உள்ளன. இந்த நிலையில் ரஜினியின் விதிமுறைப்படி அவர் தலைவர் 171 இல் நடிக்க முடியாது. அப்படி அதில் நடித்தால் கைதி 2 வில் நடிக்க முடியாது. எனவே இதை எப்படி ராகவா லாரன்ஸ் (Raghava lawarance) கையாள போகிறார் என பேச்சுக்கள் சென்றுக்கொண்டுள்ளன.

To Top