நீ யாருன்னே எனக்கு தெரியாது.. உன் படத்துல எப்படி நடிக்கிறது!.. பாட்ஷா இயக்குனரை நேரடியாக கேட்ட ரஜினி!..

Actor Rajinikanth: ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களது வாழ்க்கையில் அடையாளமாக சில படங்கள் இருக்கும். நடிகர் ரஜினிகாந்திற்கும் அப்படி நிறைய படங்கள் உண்டு. அதில் முக்கியமான திரைப்படம் பாட்ஷா. எப்போதும் தமிழ் சினிமாவிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி பாட்ஷா மாதிரி இன்னொரு படம் வராது என்றே கூறுவார்கள்.

இதுக்குறித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு முறை கூறும்போது பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பலமுறை ரஜினிகாந்திடம் பேசும்போது அந்த கதைகள் எதுவுமே ரஜினிகாந்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று கூறினார் சுரேஷ் கிருஷ்ணா.

சுரேஷ் கிருஷ்ணா முதன் முதலாக ரஜினிகாந்திடம் அறிமுகமானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. அண்ணாமலை திரைப்படத்தின்போதுதான் இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர். அதற்கு முன்பு கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார் சுரேஷ் கிருஷ்ணா.

rajinikanth raghuvaran batcha
rajinikanth raghuvaran batcha
Social Media Bar

அண்ணாமலை திரைப்படத்தை வேறு இயக்குனர்தான் இயக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர் சில காரணங்களால் படத்தை விட்டு விலகினார். இந்த நிலையில்தான் பாலச்சந்தர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இதுக்குறித்து பேசினார். இந்த படத்தில் கமிட் ஆனப்போது படத்தின் கதை என்ன என்பது கூட சுரேஷ் கிருஷ்ணாவிற்கு தெரியாது.

இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு துவங்கவிருந்த சமயத்தில் அப்போதுதான் படத்தின் கதையையே படிக்க துவங்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. இந்த நிலையில் சுரேஷ் கிருஷ்ணா மாதிரியான புது இயக்குனர் தன்னை இயக்குவதில் ரஜினிகாந்திற்கு உடன்பாடு இல்லை.

ஆனாலும் கே பாலச்சந்தர் சொன்னதால் அவர் நடித்தார். இந்த நிலையில் படப்பிடிப்பு துவங்கி ஒரு வாரம் கழித்து சுரேஷ் கிருஷ்ணாவை சந்தித்த ரஜினிகாந்த், துவக்கத்தில் நீ யார் என்றே தெரியவில்லை உன் படத்தில் எப்படி நடிப்பது என்ற யோசனையில்தான் நடித்தேன்.

ஆனால் கடந்த ஒரு வாரத்தில் நீ எவ்வளவு நல்ல இயக்குனர் என தெரிந்துகொண்டேன் என கூறியுள்ளார். இந்த நிகழ்வை சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.