Connect with us

நீங்க ஹீரோவானா சிறப்பா இருக்கும்!.. சும்மா இருந்த இயக்குனரை கிளப்பி விட்ட சூப்பர் ஸ்டார்!..

rajinikanth aran

News

நீங்க ஹீரோவானா சிறப்பா இருக்கும்!.. சும்மா இருந்த இயக்குனரை கிளப்பி விட்ட சூப்பர் ஸ்டார்!..

Social Media Bar

Actor Rajinikanth : தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களுக்கான காலியிடங்கள் என்பது எப்போதுமே அதிகமாகிக்கொண்டே போகிறது. முன்பெல்லாம் ஒரு படத்திற்கு ஐந்து பேர் உதவி இயக்குனராக இருப்பதே பெரிய விஷயம் என கூறலாம்.

பெரும் இயக்குனர்கள் மட்டுமே தங்களுக்கு நிறைய உதவி இயக்குனர்களை வைத்துக் கொள்வார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் 15 அல்லது 20 என்று உதவி இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. உதவி இயக்குனர்கள் எவ்வளவு அதிகரிக்கிறார்களோ அவ்வளவுக்கு இயக்குனருக்கு வேலை குறையும் என்பதால் இயக்குனர்களும் தொடர்ந்து உதவி இயக்குனர்களை அதிகமாக வேலைக்கு எடுக்கின்றனர்.

பெரிதாக சினிமாவை பற்றி புரிதல் இல்லாதவர்கள் கூட உதவி இயக்குனராகம் நிலை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் 2.0 திரைப்படத்தை இயக்குனர் சங்கர் எடுக்கும் பொழுது நிறைய உதவி இயக்குனர்களை வைத்திருந்தார்.

rajinikanth
rajinikanth

அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நடிகரை கண்காணிக்க வைத்திருந்தார். அந்த வகையில் உதவி இயக்குனர் அரண் ரஜினிகாந்தை பார்த்துக் கொள்பவராக இருந்தார். ரஜினிக்கான காட்சிகள் உடைகள் போன்ற விஷயங்களை இவர் பார்த்துக் கொள்வார் இப்படி இருக்கும் பொழுது ரஜினியுடன் தொடர்ந்து இவர் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் ரஜினி உங்களது எதிர்கால ஆசை என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அரண் எனக்கு இயக்குனராக வேண்டும் என்றுதான் ஆசை என்று கூறி இருக்கிறார். ஆனால் ரஜினி கூறும் பொழுது நீங்கள் கதாநாயகனாகவே நடிக்கலாம் உங்களுக்கு அதற்கான திறமை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து தற்சமயம் இயக்குனர் அரண் ஜிகிரி தோஸ்த் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார் .ரஜினிகாந்தின் தூண்டுதலால் கதாநாயகனான இவர் வரவேற்பை பெறுவாரா என்பது தற்சமயம் கேள்வியாக இருக்கிறது.

To Top