Cinema History
சார் அந்த மாதிரி ஒரு க்ளைமேக்ஸ் வைக்கிறோம்!.. ஷங்கர் சொன்ன காட்சியை கேட்டு ஆடிப்போன ரஜினி!..
சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்த்துக்கு ஏற்ப வெகு காலங்களாகவே டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை கடந்தப்பிறகும் கூட இன்னமும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.
தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கி வருகிறார். வருகிற தீபாவளிக்கு இந்த திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்து தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இந்த திரைப்படம் தொடர்பாகதான் தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ரஜினிகாந்தை வைத்து சிறப்பான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் இயக்குனர் ஷங்கரும் முக்கியமானவர்.
ஷங்கருடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் கூறும்போது ஷங்கர் முதலில் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை கூறும்போது அதற்கு நான் பதிலளிக்கவே இல்லை.
இதனால் ஷங்கருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவர் என்னை அழைத்து ஏன் சார் க்ளைமேக்ஸ் பிடிக்கலையா, ஏதாச்சும் மாற்றம் செய்யணுமா? ஏன் எதுவுமே சொல்லாமல் கிளம்பிட்டீங்க என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் க்ளைமேக்ஸ் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால் நீங்கள் சொல்ற மாதிரி எல்லாம் எப்படி காட்சி வைக்க முடியும். அதுதான் யோசனையா இருக்கு என்றார் ரஜினிகாந்த்.
ஆனாலும் சொன்னது போலவே க்ளைமேக்ஸ் காட்சிகளை சிறப்பாக உருவாக்கினார் இயக்குனர் ஷங்கர்.