Tamil Cinema News
ஜன்னல் சீட்டு கேட்டது ஒரு குத்தாமாயா?.. முதியவரிடம் சிக்கி மானத்தை இழந்த ரஜினிகாந்த்.. இந்த சம்பவம் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். கடந்த 50 வருடங்களாக ரஜினிகாந்த் தொடர்ந்து ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.
என்னதான் நடிகர்கள் பெரிய பிரபலங்களாக இருந்தாலும் கூட சினிமாவே தெரியாத மக்கள் மத்தியில் அவர்கள் சாதாரண நபர்களாகதான் பார்க்கப்படுவார்கள் அப்படியாக நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது எனக்கும் எனது மனைவிக்கும் எப்பொழுதும் ஜன்னல் சீட்டில் பயணம் செய்வதுதான் பிடிக்கும். ஏரோபிளேன் பயணம் செய்யும்பொழுது ஜன்னல் சீட்டு பெற்றுக்கொண்டு தான் பயணம் செய்வோம்.
ரஜினிகாந்த் செய்த செயல்:
அப்படியாக ஒருமுறை நான் ஜன்னல் சீட்டில் வந்து அமர்ந்த பொழுது எனக்கு அருகில் 65 வயது முதியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். அவருக்கு நான் யார் என்றே தெரியவில்லை. என்னிடம் ஜன்னல் சீட்டை கேட்டார் ஆனால் நான் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன்.
அதனால் என்னை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார் பிறகு என்னிடம் நான் யாரென்று கேட்டார். நான் தான் ரஜினிகாந்தின் என்று கூறினேன் அது நீங்கதானா என்று சகஜமாக கேட்டுவிட்டு அவர் பாட்டுக்கு சிகரெட் பிடிக்க துவங்கிவிட்டார்.
நானும் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தேன். பிறகு தொடர்ந்து அவர் எனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். உங்கள் தலையில் உள்ள முடியெல்லாம் கருப்பாக இருக்கிறது தாடி மட்டும் ஏன் வெள்ளையாக இருக்கிறது என்று கேட்டார்.
இப்படி தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் விமானம் விட்டு இறங்கும் பொழுது என்னுடைய முகவரியை வேறு கேட்டார் நான் எனக்கு பிடிக்காத எதிரி ஒருவரின் முதல் வரியை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து வந்தேன் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்
