Connect with us

தில்லு முல்லு படத்தின்போதுதான் என் வாழ்க்கையில் வசந்தம் வீசியது!.. ரஜினிகாந்திற்கு நடந்த சம்பவம்!..

rajinikanth thillu mullu

Cinema History

தில்லு முல்லு படத்தின்போதுதான் என் வாழ்க்கையில் வசந்தம் வீசியது!.. ரஜினிகாந்திற்கு நடந்த சம்பவம்!..

Social Media Bar

Rajinikanth Thillu mullu movie : தமிழ் சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவரும் அதிக வரவேற்பு பெற்றவருமாக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் பொதுவாக ஐம்பது வயதை கடந்த பின்னர் ஒரு நடிகர் கதாநாயகனாக நடிப்பது என்பது கடினமான விஷயம் என்று இருந்தது.

ஆனால் அந்த ஒரு விஷயத்தை உடைத்து எறிந்தது ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தான். சொல்லப்போனால் திரைத்துறையில் இத்தனை வருடங்கள் இவர்கள் இருவரைப் போல் வேறு எந்த ஒரு நடிகரும் கதாநாயகனாக நடித்தது கிடையாது.

ரஜினிகாந்துக்கு இளம் வயது முதலே நிறைய காதல் கதைகள் உண்டு. ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது பள்ளி பருவத்திலேயே ஒரு பெண்ணை காதலித்ததாகவும் கூறி இருக்கிறார். அப்படியாக அவரது திருமணமும் ஒரு காதல் திருமணமாகத்தான் அமைந்தது. அவரது மனைவியான லதா ரஜினிகாந்த்தை திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார்.

தில்லுமுல்லு திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான் முதன் முதலில் ரஜினிகாந்தை பேட்டி எடுப்பதற்காக லதா வந்திருந்தார். முதல் அறிமுகத்திலேயே ரஜினிகாந்துக்கு லதாவை மிகவும் பிடித்து விட்டது அதன்பிறகு அடிக்கடி இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டிருந்தனர்.

ஒருமுறை ரஜினிகாந்திடம் லதா எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என கேட்கும் பொழுது குடும்ப பெண்ணாக இருக்க வேண்டும். உதாரணமாக உங்களைப் போல இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படியாக வளர்ந்த காதல் பிறகு திருமணத்தில் முடிந்திருக்கிறது ஒரு முறை பேட்டியில் ரஜினிகாந்த் இதை குறித்து கூறும் பொழுது தில்லுமுல்லு திரைப்படத்தில்தான் என் வாழ்க்கையின் உண்மையான வசந்தம் வீசியது அப்பொழுது மட்டும் லதா என்னிடம் பேட்டி எடுக்க வரவில்லை என்றால் இப்படி ஒரு அருமையான மனைவியை தவறவிட்டிருப்பேன் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

To Top