Rajinikanth : தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத ஆளுமையாக வளர்ந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா வரலாற்றில் பெரும்பகுதியை ஆக்கிரமித்த ஒரு பிரபலமாக ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். ஏனெனில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்திலேயே சினிமாவில் இவர் அறிமுகமாகிவிட்டார்.
அப்பொழுது துவங்கி இப்போது வரை சினிமாவில் அவரது இடத்தை இன்னொரு நடிகரால் பிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு சிறப்பான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். முதன் முதலில் நடிக்க ஆசை வந்த பொழுது அவர் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.

பலரும் கூறுவது போல நடத்துனர் வேலை பார்த்தப்போது அவரது ஸ்டைலை பார்த்து பாலச்சந்தர் வாய்ப்பு கொடுத்தார் என்பதெல்லாம் பொய்யான தகவல்கள் ஆகும். சென்னைக்கு வந்து முறையாக நடிப்பு கலையை பயின்ற பிறகே ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடத் துவங்கினார்.
தென்னிந்திய பிலிம் வர்த்தக சபை நடத்தும் நடிப்பு பள்ளியில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த். அதற்குப் பிறகுதான் அவர் சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கினார். அப்போதுதான் பாலச்சந்தருக்கு ரஜினி அறிமுகமானார்.
இது குறித்து ரஜினி ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும் பொழுது பாலச்சந்தர் என்னுடைய கண்ணில் ஏதோ ஒரு நெருப்பு இருக்கிறது என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பார். அதை பார்த்துதான் என்னை அவர் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். தமிழக மக்களும் அந்த நெருப்பை பார்த்துதான் என்னை வரவேற்றனர். என்னை பார்த்து பேசும் பலரும் அந்த விஷயத்தை கூறி இருக்கின்றனர். என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்