Cinema History
ரஜினியின் மாமா அம்பேத்கரின் தளபதியா..? உண்மையை மறைத்தது ஏன்?
தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய சிவாஜி கெய்க்வாட் சினிமாவில் நுழைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறிய சம்பவம் உலகம் அறிந்த கதை. ஆனால் பலரும் அறியாத ஒரு பின்புலமும் ரஜினிகாந்துக்கு உள்ளது.
கோச்சடையான், லிங்கா என வரிசையாக ரஜினியின் படங்கள் தோல்வியை தழுவி வந்த சமயம். அதுவரை சங்கர், கே எஸ் ரவிக்குமார் என பழக்கமான முதிர்ந்த இயக்குனர்களோடு மட்டுமே படம் செய்து வந்த ரஜினிகாந்த் முதன்முறையாக இளம் இயக்குனர்களோடு கைக்கோர்க்க தொடங்கினார். அப்படியாகதான் பா.ரஞ்சித் இயக்கத்தில் “கபாலி” படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். கபாலியின் வெற்றியை தொடர்ந்து ‘காலா’ படமும் பா.ரஞ்சித் – ரஜினிகாந்த் கூட்டணியில் அமைந்தது.
காலா படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பையில் நடைபெற்ற சமயம் மஹார் சமூக மக்கள் சிலர் கொடுத்த ஒரு போட்டோவை பா.ரஞ்சித் ரஜினியிடம் காட்டியுள்ளார். அதை பார்த்த ரஜினி ஆச்சர்யம் அடைந்தாராம். ஏனெனில் அந்த புகைப்படத்தில் பாபாசாகேப் அம்பேத்கருடன் வேறு சில நபர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரை சுட்டிக்காட்டிய நடிகர் ரஜினிகாந்த் அவர் தனது தாய் மாமன் என்று கூறியுள்ளார்.
சமீப காலமாக ரஜினிகாந்தின் ஆன்மீக கொள்கைகள், யோகி காலில் விழுந்தது போன்ற செயல்களுக்காக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவரது தாய் மாமன் அம்பேத்கருக்கு தளபதியாக செயல்பட்டவர் என்ற செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
