Bigg Boss Tamil
ரவீனா விக்ரம் மீது குவியும் வன்மங்கள்!.. அடுத்த எலிமினேஷன் யார்!..
பிக்பாஸ் நிகழ்வு துவங்கி கிட்டத்தட்ட 80 நாட்களை தொட போகிறது. 100 ஆவது நாள் மொத்தமே வீட்டில் 3 பேர்தான் இருக்க வேண்டும். ஆனால் அநியாயத்திற்கு இந்த முறை 10 பேருக்கும் அதிகமாக உள்ளனர். எனவே வாரம் இருவரை எலிமினேஷன் செய்யலாம் என திட்டமிடப்பட்டது.
ஆனால் அப்படியும் கூட இருக்கும் நபர்களை வெளியேற்ற முடியாது. எனவே வாரம் 4 நபர்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்து எலிமினேஷன் ஆகும் 2 நபர்களை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களே தேர்வு செய்யலாம்.

ஓட்டுகளில் உள்ள பெரும்பான்மையை அடிப்படையாக கொண்டு அதிக ஓட்டு வாங்கிய இருவர் பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆவார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் ரவீனா மற்றும் விக்ரமிற்குதான் பெரும்பாலான ஓட்டுக்கள் போடப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் முதல் இடத்தில் ரவீனதான் இருக்கிறார் என தெரிகிறது. எனவே ரவீனாவும் விக்ரமும் எலிமினேட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
