Mobile Specs
ஓவியம் வரைய ஆசை உள்ளவர்கள் இந்த டேப்லேட் வாங்கலாம்.. குறைந்த விலையில் அறிமுகம் ஆன ரெட் மீ டேப்லேட்..
ஆன்லைன் வகுப்பில் படிப்பதில் துவங்கி பல விஷயங்களுக்கு டேப்லேட் என்பது பயனுள்ள ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஓவியம் வரைவதற்கும் கூட டேப்லேட் அதிகமாக பயன்படுகிறது. நிறைய நிறுவனங்கள் டேப் வெளியிட்டாலும் வரையும் அம்சத்தை கணக்கில் கொண்டு அவை வெளியிடுவதில்லை.
அந்த வகையில் ரெட்மீ தொடர்ந்து அது வெளியிடும் டேப்களில் வரையும் அம்சங்களையும் கணக்கில் கொண்டு டேப்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் மிக குறைந்த விலையில் 13999 க்கு சிறப்பான டேப் ஒன்றை வெளியிட்டுள்ளது ரெட்மீ.
வை ஃபை மற்றும் சிம் போடும் வசதியுடன் வந்துள்ள இந்த டேப் ஓவியம் வரைவதற்கு கற்றுக்கொள்பவர்களுக்கும் டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் உதவிடும் வகையில் வெளியாகியுள்ளது.
2.5 K டிஸ்ப்ளே ரிஷலேஷன் கொண்டு வந்துள்ள இந்த டேப் 1.07 Billion colors ஐ கண்டறியும் திறன் கொண்டுள்ளது.
மூவி எக்ஸ்ப்ரீயன்ஸ்காக 4 ஸ்பீக்கர்களை கொண்டு இது வருகிறது. 9000MHz பேட்டரியுடன் வரும் இந்த டேப் மற்ற டேப்களை போலவே குறைவான கேமிரா அம்சத்தையே கொண்டுள்ளது.
ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது பொருத்தமான டேப்லேட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
