சமீபத்தில் நடிகை நயன்தாரா ஒரு பேட்டியில் பேசும் பொழுது யூ ட்யூப்பில் பிரபலமாக இருக்கும் வலைப்பேச்சு என்கிற சேனலை சுட்டிக்காட்டி எதிர்மறையாக பேசி இருந்தார்.
சினிமா திரையில் பல வருடங்களாக பத்திரிகையாளர்களாக இருந்த மூவர் நடத்தும் சேனல்தான் வலைப்பேச்சு. இந்த நிலையில் அதில் பேசிய விஷயங்களுக்கு நயன்தாரா எதிர்வினை ஆற்றி இருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த மூன்று பத்திரிகையாளர்களில் ஒருவரான அந்தணன் பேட்டியில் கூறும்பொழுது நிறைய விஷயங்களை நயன்தாரா குறித்து கூறியிருக்கிறார்.
இதில் அவர் கூறும் பொழுது நயன்தாரா என்பவர் சினிமாவில் ஒரு மிகப்பெரிய நடிகையாக இருப்பதால்தான் நாங்கள் அவரைப் பற்றி பேசுகிறோம் எங்களது சேனல் தொடர்ந்து சினிமா குறித்த செய்திகளை பேசக்கூடிய ஒரு சேனல். அப்படி இருக்கும் பொழுது சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையைப் பற்றி நாங்கள் பேசாமல் இருக்க முடியாது.
நாகரிகமாக பேசிட்டு இருக்கோம்.

அப்படி நாங்கள் பேசக்கூடாது என்றால் அவர் தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கவே கூடாது. அதுவும் இருக்கும் சேனல்களிலேயே நாங்கள் மிகவும் நாகரிகமாக பேசக்கூடிய சேனல்களாக இருக்கிறோம். மற்ற சேனல்கள் போல பிரபலங்கள் வீட்டிற்குள் புகுந்து அந்தரங்கத்தை பேசக்கூடியவர்கள் அல்ல.
மிக நாகரீகமாக தான் பேசுகிறோம். தனுஷ் நயன்தாரா பிரச்சனையில் நயன்தாரா செய்த விஷயங்களை வெளிச்சம் போட்டு பேசியது நயன்தாராவிற்கு பிடிக்கவில்லை. அதுதான் இது அனைத்திற்குமே காரணம். இதற்கு முன்பு நாங்கள் நிறைய தடவை நயன்தாராவிற்கு ஆதரவாக கூட பேசி இருக்கிறோம்.
நயன்தாராவின் வாடகை தாய் பிரச்சனை வந்த பொழுது அவருக்கு ஆதரவாக நான் நிறைய யூடியூப் சேனல்களில் பேசி இருக்கிறேன். ஆனால் அதற்கு ஒரு நன்றி கூட நயன்தாரா கூறியது கிடையாது. அப்படிப்பட்ட நயன்தாராவிற்கு எங்களை விமர்சனம் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது என்று தான் தெரியவில்லை.
சினிமா பிரபலங்களை குறித்த செய்திகளை பொறுத்தவரை நாகரீகமான விஷயங்களை மட்டும் தான் நாங்கள் வெளியிடுவோம் அதை தாண்டியும் நிறைய விஷயங்கள் எங்களுக்கு தெரியும். அதையெல்லாம் வெளியிட்டால் பெரிய சர்ச்சைகளை உண்டாகும் என்று கூறியிருக்கிறார் அந்தணன்.