காந்தாரா அடுத்த பாகத்தின் கதை இதுதான்.. லீக் செய்த இயக்குனர்.!

காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரிஷப் ஷெட்டி இயக்கி தற்சமயம் பெரும் வசூலை செய்து வரும் திரைப்படமாக காந்தாரா சாப்டர் ஒன் என்கிற இரண்டாம் பாகம் இருந்து வருகிறது.

இந்த படத்திலும் மூன்றாம் பாகத்திற்கு ஒரு லீட் வைத்து தான் கதை முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காந்தாரா படம் குறித்து ரிஷப் ஷெட்டி பேட்டியில் பேசும்பொழுது பேசிய சில விஷயங்கள் மூன்றாம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்து சில தகவல்களை கொடுத்திருக்கிறது.

முதல் பாகம் எடுக்கும் பொழுது உங்களுக்கு வேறு பாகம் எடுப்பதற்கான யோசனை இருந்ததா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தில் பல பாகங்களுக்கான கதைகள் அதில் ஏற்கனவே இருந்தன.

Social Media Bar

மூன்றாம் பாகத்தின் கதை:

ஆனால் அதன் வெற்றிக்கு பிறகு தான் அந்த கதைகளை தனியாக படமாக்க நாங்கள் முடிவு செய்தோம் என்று ரிஷப் செட்டி கூறினார். மேலும் அவர் கூறும் பொழுது காந்தாரா முதல் பாகத்தில் ஒரு மன்னர் எப்போதும் அமைதி இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பார்.

அவர் ஏன் அமைதி இல்லாமல் இருக்கிறார் என்பதை பெரிதாக நாங்கள் விளக்கவில்லை. அதேபோல கதாநாயகனின் அப்பா எதனால் மறைந்தார் என்கிற விஷயத்தையும் பெரிதாக காட்டவில்லை எனவே அவையெல்லாம் அடுத்து ஒரு பாகமாக எடுப்பதற்கான கதைகள் தான் என்று கூறியிருக்கிறார்.

எனவே காந்தாரா முதல் பாகத்தில் வரும் சிவா எனும் கதாநாயகனின் தந்தையின் கதைதான் காந்தாரா மூன்றாம் பாகத்தின் கதையாக இருக்கும் என்பது ரசிகர்களின் அனுமானமாக இருக்கிறது.