Connect with us

இந்தியாவிற்கு அடுத்து ஒரு ஆஸ்கர்! – விருதை வாங்கி மாஸ் காட்டிய ஆர்.ஆர்.ஆர்

News

இந்தியாவிற்கு அடுத்து ஒரு ஆஸ்கர்! – விருதை வாங்கி மாஸ் காட்டிய ஆர்.ஆர்.ஆர்

Social Media Bar

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் போன வருடம் வெளிவந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்திற்கு உலக அளவில் வரவேற்பு இருந்து வந்தது. இதனை அடுத்து உலக அளவில் இந்த படத்திற்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என முயற்சித்து வந்தார் இயக்குனர் ராஜ மெளலி.

எனவே ஆஸ்காரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை சேர்த்திருந்தார். ஹாலிவுட்டில் மிகவும் மதிக்கப்படும் விருதான ஆஸ்கர் விருதை வாங்குவது என்பது ஒவ்வொரு நடிகர், இயக்குனருக்கும் கனவாக இருக்கும்.

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் வரும் நாட்டுக்கூத்து பாடலுக்கு வழங்கியுள்ளது ஆஸ்கர் குழு.

நாமிநேஷனில் அப்பலாஸ், டாப் கன் மேவ்ரிக், ப்ளாக் பாந்தர் வகாண்டா ஃபார் எவர், எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் ஆகிய படங்களின் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. ஆனாலும் அவற்றை எல்லாம் தாண்டி நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கரை ஜெயித்துள்ளது.

இதனால் படத்தில் நடித்தவர்கள், இயக்குனர் என அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

To Top