Connect with us

உலக சினிமா கான்சப்ட்டை வைத்து மணிரத்தினம், கமல்ஹாசன் இருவருமே எடுத்த படம்..! ரெண்டுமே ஒரே வருடத்தில் வந்துச்சு..! தெரியவே இல்லையே…

kamal manirathnam

Cinema History

உலக சினிமா கான்சப்ட்டை வைத்து மணிரத்தினம், கமல்ஹாசன் இருவருமே எடுத்த படம்..! ரெண்டுமே ஒரே வருடத்தில் வந்துச்சு..! தெரியவே இல்லையே…

Social Media Bar

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என நினைக்கும் இயக்குனர்கள் பலர் உண்டு. அப்படியானவர்களில் கமல்ஹாசன் மணிரத்தினம் இருவருமே முக்கியமானவர்கள் என கூறலாம்.

இருவருமே போட்டி போட்டு எடுத்த வெவ்வேறு திரைப்படம் ஒரே வருடத்தில் வெளியான சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. அகிரா குரசவா என்னும் இயக்குனர் இயக்கத்தில் 1950 இல் ஜப்பானில் வெளியான திரைப்படம் ரஷோமான்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு ரஷோமான் எஃபக்ட் என்கிற விஷயம் பிரபலமாக துவங்கியது. அதாவது ஒரு நிகழ்வை பல கதாபாத்திரங்களின் பார்வையில் இருந்து மாற்றி மாற்றி காட்டுவது என்பதுதான் ரஷோமான் எஃபக்ட். ஒரு கதாபாத்திரத்தில் படம் வேறு மாதிரி செல்லும்.

அதே இன்னொரு கதாபாத்திரத்தின் பார்வையில் பார்க்கும்போது கதையில் மாற்றங்கள் இருக்கும். இந்த நிலையில் இதே முறையில் ஒரு படத்தை இயக்க கமல்ஹாசன் திட்டமிட்டார். அதற்கான கதைகளையும் எழுதினார். ஆனால் அப்போதைய சமயத்தில் அதே ரஷோமான் எஃபக்ட் முறையில் ஆய்த எழுத்து என்கிற திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கி வந்தார்.

கதையும் கூட மணிரத்தினம் எழுதியிருக்கும் கதையும் கமல்ஹாசன் எழுதிய கதையும் ஒரே மாதிரியே இருந்ததால் கமல் தன்னுடைய படத்தின் கதையை மாற்றினார். விருமாண்டி என்கிற பெயரில் அந்த கதை படமாக்கப்பட்டது.

மணிரத்தினத்திற்கு பிறகு படப்பிடிப்பை துவங்கிய கமல்ஹாசன் அவருக்கு முன்பே ஜனவரி 2004 இல் படத்தை வெளியிட்டார். அதே 2004 ஜூன் மாதம்தான் ஆய்த எழுத்து வெளியானது. இப்படி போட்டி போட்டு இருவரும் உலக தரத்திலான இரு திரைப்படங்களை 2004 ஆம் ஆண்டு கொடுத்துள்ளனர்.

To Top