விஜய் நடிக்கவே கூடாதுன்னு இந்த வேலைகளை பார்த்தேன்… ஓப்பன் டாக் கொடுத்த எஸ்.ஏ.சி!.

தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வந்தப்போது நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனால் அவருக்கு திரைப்படங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தது.

ஆனால் அதே சமயம் அவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அதனால்தான் இத்தனை பேர் அவரை கேலி செய்து பேசியும் கூட அவர் ஒரு அடி கூட பின் வாங்கவில்லை. எல்லா காலத்திலும் கேலி செய்பவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சாதனை படைத்த விஜய்:

Social Media Bar

ஆனால் அவர்களை தாண்டி வந்து சாதனை படைப்பவர்களே விஜய் மாதிரியான பெரிய இடத்தை பிடிக்கின்றனர். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வருவதில் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு அவ்வளவாக விருப்பமில்லை.

ஆனால் விஜய் விடாபிடியாக இருந்தார். விஜய் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் அவர் இயக்கிய ஒரு படத்தில் விஜய்க்கு கதாபாத்திரம் ஒன்றை வைத்திருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.

அப்பா செய்த வேலை:

அந்த காட்சியில் விஜய் இனி சினிமா பக்கம் வரவே பயப்பட வேண்டும் எனும் அளவில் பெரிய வசனம் ஒன்றை வைப்பதற்கு முடிவு செய்தார் எஸ்.ஏ சந்திரசேகர். அதில் ராதாரவி அவர் மனைவியை அடித்து கொண்டிருக்கும்போது அவரை தடுத்து விஜய் வசனம் பேச வேண்டும்.

அந்த பெரிய வசனத்தை ஒரே டேக்கில் சரியாக பேசினார் விஜய். அதை பார்த்த எஸ்.ஏ சி அவரது மனைவியிடம் வந்து இந்த படம் பெரும் வெற்றி பெறுமா தெரியவில்லை. ஆனால் உன் மகன் பெரிய இடத்தை தொடுவான் என கூறியுள்ளார். இதனை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.