News
செட்டில் பிரபுதேவா செஞ்ச வேலை.. கதறி அழுத சாய்ப்பல்லவி.. இதுதான் விஷயமா?
பிரேமம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் நடிகை சாய் பல்லவியும் ஒருவர். பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்கிற அவரது கதாபாத்திரம் வெகுவாக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க துவங்கின.
தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் அதற்கு பிறகு வாய்ப்புகளை பெற்றார் நடிகை சாய்பல்லவி. அந்த வகையில் தமிழில் மாரி 2 திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
சிறப்பான நடன கலைஞர்:
பொதுவாகவே சாய் பல்லவி சிறப்பாக நடனமாட கூடியவர் மிக கடினமான நடனங்களை கூட அவரால் நடனமாட முடியும். இந்த நிலையில் ரவுடி பேபி என்கிற பாடலில் அவர் சிறப்பாக ஆடியிருப்பதை பார்க்க முடியும். தனுஷிற்கு ஈடு கொடுத்து அந்த பாடலில் ஆடியிருப்பார் சாய் பல்லவி.

அந்த படத்தில் நடந்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சாய்ப்பல்லவி. மாரி 2 திரைப்படத்தில் ஆட்டோ ஆனந்தி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வேறு திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
அதற்கு பிறகு தமிழின் முக்கியமான நடிகையாக மாறினார். ஆனால் மாரி 2 படத்தின் பாடல் படப்பிடிப்பில் அவர் கண்ணீர் விடும் வகையில் பிரச்சனைகள் நடந்துள்ளன.
மாரி 2 படப்பிடிப்பு:

சாய்பல்லவி எந்த ஒரு நடனத்தையும் படப்பிடிப்பில் ஆடுவதற்கு முன்பே பலமுறை முயற்சி செய்துவிட்டுதான் பிறகு வந்து நடனமாடுவார். மாரி 2 திரைப்படத்தில் பிரபுதேவாதான் டான்ஸ் மாஸ்டராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சாய் பல்லவி ஏற்கனவே ப்ராக்டிஸ் செய்துவிட்டு நடனமாட வந்துள்ளார். ஆனால் பிரபுதேவா அப்படி ஆட வேண்டாம் என அப்போது புதிதாக ஒரு நடனத்தை சொல்லி கொடுத்துள்ளார்.
இதனால் பலமுறை அங்கு தவறாக நடனமாடியுள்ளார் சாய் பல்லவி. பிறகு அதனால் மனம் உடைந்து அழ துவங்கியுள்ளார். அதனை பார்த்த பிரபுதேவா அடுத்த டேக்கில் அந்த பாடலை ஓ.கே சொல்லிவிட்டாராம். இதனை சாய் பல்லவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
