Connect with us

அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. மீண்டும் மோசமான உடல்நிலை!..

samantha

News

அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. மீண்டும் மோசமான உடல்நிலை!..

Social Media Bar

Actress Samantha : தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான சமந்தா தமிழை விடவும் தெலுங்கில் அதிகமான ரசிக்க பட்டாளத்தை கொண்டிருந்தார்.

தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகளையும் பெற்று வந்தார் இதனால் இவருக்கு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும் ரசிக்கப்பட்டாளம் இருந்து வந்தது. இந்த நிலையில் படங்களில் வெற்றி வாகை சூடி வந்த சமந்தாவிற்கு திடீரென்று உடல் கோளாறு ஏற்பட்டது.

மயோசிடிஸ் என்னும் ஒரு வகை நோய் அவருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது அந்த நோயின் காரணமாக வெகு நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. யசோதா திரைப்படம் நடித்து முடித்த சமயத்தில் அவருக்கு இந்த பிரச்சனை கொஞ்சம் அதிகமானதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வாழ்ந்தார்.

இதனால் வெகு காலங்கள் திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார் பிறகு உடல்நிலை சரியாகி இப்பொழுதுதான் சில திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் தான் சேர்ந்திருப்பதாக தனது சமூக வலைதளம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.

பூக்கள் மிகவும் அழகானவயாக இருந்தாலும் கூட அவை தனக்கு அலர்ஜியாக இருப்பதால் தற்சமயம் அதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top