சிவகார்த்திக்கேயனை விட விஜய் சேதுபதியோட நடிப்பது என் நீண்ட நாள் ஆசை –  மனம் திறந்த சமந்தா

சிவகார்த்திக்கேயனை விடவும் விஜய் சேதுபதியுடன் நடிப்பதை தனது நீண்ட நாள் ஆசையாக கொண்டுள்ளதாக சமந்தா கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவராக உள்ளார். தற்சமயம் சமந்தா, விஜய் சேதுபதி, நயன்தாரா மூவரும் சேர்ந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகியுள்ளது.

Social Media Bar

இந்நிலையில் அவர் அஞ்சான் படம் வெளியானபோது பிகைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறிய சில விஷயங்கள் இப்போது ட்ரெண்டாகி உள்ளது. அந்த பேட்டியில் தமிழ் சினிமா குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வருகிறார்.

எஸ்கேப் ஆன சூர்யா; அஜித்தை குறி வைக்கும் சிறுத்தை?

அப்போது சிவகார்த்திகேயன் அல்லது விஜய் சேதுபதி இருவரில் யார் கூட நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என சமந்தாவை கேட்கின்றனர். அதற்கு அவர் விஜய் சேதுபதியுடன் நடிக்கவே ஆசைப்படுகிறேன். பீட்சா படத்தில் அவரது நடிப்பை பார்த்ததுமே அவருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது என கூறியுள்ளார்.

https://www.instagram.com/tv/Cc4hB52hUMd/?utm_source=ig_web_copy_link

ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தாலும் அதில் அவர் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடிக்கவில்லை. தற்சமயம் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துவிட்டார். எனவே இந்த சமயத்தில் பிகைண்ட் வுட்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த பேட்டி வீடியோவை ஷேர் செய்துள்ளது.