News
புஷ்கர் காயத்ரி வதந்தியில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா! – உறுதி செய்த அமேசான்!
தமிழில் இயக்குனராகவும், நடிகராகவும்.. தற்போது வில்லனாகவும் கூட பிரபலமாக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா.

தமிழின் ஸ்டார் நடிகர்களான விஜய், அஜித் போன்றவர்களை வைத்து குஷி, வாலி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் பின்னர் “இசை” உள்ளிட்ட படங்களில் தானே இயக்கி, நடித்து, இசையமைத்தும் அசத்தினார்.
ரஜினி கெரியரையே க்ளோஸ் பண்ணிய படங்கள்! – ஏன் ஓடலை தெரியுமா?
எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம் உள்ள சூழலில் தற்போது முழு நேரமாக நடிப்பை தொடர்ந்து வருகிறார். மாநாடு படத்தில் இவர் நடித்த தனுஷ்கோடி கதாப்பாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது.

தற்போது, விக்ரம் வேதா உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய புஷ்கர் – காயத்ரியின் புதிய வெப் சிரிஸில் நடிக்க உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்த வெப் சிரிஸிற்கு “வதந்தி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தயாரித்து வெளியிடுகிறது.
