வயித்தெரிச்சலில் புரளும் இந்தி சினிமா.. வசூலை வாரிய தென்னிந்திய படங்கள்!

சமீபகாலமாக தென்னிந்தியாவில் உருவாகி வரும் படங்கள் இந்திய அளவில் பெருமளவில் வியாபாரம் ஆகும் நிலையில் இந்தி சினிமா வட்டாரம் வயிற்றெரிச்சலில் உள்ளதாம்.

சமீபத்தில் இந்திதான் தேசிய மொழி, இந்தி வேண்டாமென்றால் தென்னிந்திய மொழி படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறீர்கள் என கன்னட நடிகர் கிச்சா சுதீப்பிடம் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த கேள்விக்கு இந்தி மீது உள்ள பாசம் காரணம் இல்லையாம். தென்னிந்திய படங்களின் ஆயிரம் கோடி வியாபாரம்தான் காரணமாம். சமீப காலமாக தெலுங்கு, கன்னட மொழிகளில் புஷ்பா, ஆர்ஆர்ஆர். கேஜிஎஃப் போன்ற பேன் இந்தியா படங்கள் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை நடத்தி வருகின்றன.

சமீபத்தில் ஆர்.ஆர்ஆர் உலக அளவில் 1000 கோடி வசூலித்த நிலையில் அடுத்து வெளியான கேஜிஎஃப் 2ம் 1000 கோடி வசூலை குவித்துள்ளது. இந்த படங்கள் வருகையால் இந்தி படங்களுக்கே மவுசு குறைந்து விட்டதாம். கேஜிஎஃப் படத்துடன் போட்டி போட முடியாது என இந்தி படமான ஜெர்சியையே தள்ளி வைத்தார்கள்.

எஸ்கேப் ஆன சூர்யா; அஜித்தை குறி வைக்கும் சிறுத்தை?

இப்படியாக இந்தி பேசும் வட்டாரத்திலுமே கூட இந்தி படங்களுக்கு மவுசு குறைந்து தென்னிந்திய படங்கள் வசூலை வாரி வருவது பாலிவுட் வட்டாரத்தில் வயிற்றெரிச்சலை கிளப்பியுள்ளதாம். அந்த ஆதங்கத்தின் வெளிபாடுதான் அஜய் தெவ்கனின் இந்த பேச்சு என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Refresh