Cinema History
இன்னும் நீ திருந்தலையாடா!.. சந்தானத்தையே படுத்தி எடுத்த நண்பர்.. அட பாவமே!..
திரைப்படங்கள், இலக்கியங்கள் போன்ற கலை சார்ந்த துறையில் எப்போதுமே சாதரண மனித வாழ்க்கையின் தாக்கத்தை அதிகமாக பார்க்க முடியும். ஒரு இயக்குனருக்கும் எழுத்தாளருக்கும் தன்னை சுற்றி உள்ள மனிதர்கள் சம்பவங்களை அடிப்படையாக கொண்டே கதை உருவாகிறது.
இது நகைச்சுவை நடிகர்களுக்கும் பொருந்தும். நகைச்சுவை நடிகர்களின் பல விதமான நகைச்சுவை காட்சிகளை பார்த்திருப்போம். முக்கியமாக வடிவேலு போன்ற நடிகர்கள் பல விதமான நகைச்சுவைகளை செய்துள்ளனர். இயல்பு வாழ்க்கையில் அவர்கள் பார்த்த நபர்களை வைத்தே இந்த நகைச்சுவை காட்சிகளை உருவாக்குகின்றனர்.
இதுக்குறித்து நடிகர் வடிவேலு கூட ஒருமுறை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதே போல சந்தானத்திற்கும் ஒரு அனுபவம் நடந்துள்ளது. சந்தானத்திற்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் தற்புகழ்ச்சி செய்துக்கொண்டு அதிக ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி கொண்டு இருப்பார்.
பிறகு திரை உலகிற்கு வந்த பிறகு அந்த கதாபாத்திரத்தை கிண்டல் செய்யும் வகையில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் பார்த்தா என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார் சந்தானம். அதன் பிறகு வெகுநாட்கள் கழித்து மீண்டும் அந்த நண்பரை சந்தித்தாராம் சந்தானம்.
அப்போதும் அந்த நண்பர் அதே போல பேசிக்கொண்டு சந்தானம் உன் ஜோக்குக்கு எல்லாம் சிரிப்பே வர மாட்டேங்குதுடா என கூறினாராம். இதுக்குறித்து சந்தானம் கூறும்போது அவனை கலாய்ச்சி ஒரு படமே நடிச்சிட்டேன். ஆனால் அவன் மட்டும் திருந்தல என கூறியுள்ளார்.
