வடிவேலு வரலையே தவிர நிச்சயமா விஜயகாந்திற்கு அழுதிருப்பார்!.. காரணத்தை கூறிய சரத்குமார்!..

Vijayakanth : விஜயகாந்த் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பொழுது அவருடன் சேர்ந்து வாய்ப்பு தேடி வந்தவர் நடிகர் சரத்குமார். சரத்குமார் சத்யராஜ் விஜயகாந்த் மூவரும் இணைந்து தான் அப்பொழுது சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தனர்.

அதன் பிறகு மூவருக்குமே கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆரம்பத்தில் சரத்குமாருக்கு வில்லனாக நடிக்கதான் வாய்ப்பு கிடைத்தது. அதனை அடுத்து விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை திரைப்படத்தில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்திருப்பார் சரத்குமார்.

ஆனால் அதே சரத்குமார் அடுத்து வந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் விஜயகாந்தின் நண்பனாக நடித்திருப்பார். இதனால் விஜயகாந்துக்கும் சரத்குமாருக்குமான நட்பு ரொம்ப காலமாக இருந்து வந்தது.

vijayakanth
vijayakanth
Social Media Bar

 தற்சமயம் விஜயகாந்தின் இறப்பு குறித்து மேடையில் பேசிய சரத்குமார் கூறும் பொழுது எப்படி எங்களுக்குள் ஆழமான நட்பு இருக்கிறதோ அதே போல வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. அவர் இறப்பிற்கு வரவில்லையே தவிர கண்டிப்பாக அவர் தனது வீட்டில் அழுது கொண்டிருப்பார்.

அவ்வளவுக்கு விஜயகாந்த் அவருக்கு நிறைய நன்மைகளை செய்திருக்கிறார் ஆனால் நேரில் வந்தால் அதனால் ஏதாவது பிரச்சனை வருமோ என்று பயந்துதான் வடிவேலு வராமல் இருந்திருப்பார். கண்டிப்பாக அவரது வீட்டில் அவர் அழுதிருப்பார் என்று கூறியிருக்கிறார் சரத்குமார்.