News
வேண்டாம் என சத்யராஜ் மறுத்த திரைப்படம்!.. அவருக்கு போட்டியாகவே வெளியிட்ட கே.எஸ் ரவிக்குமார்!. எந்த படம் தெரியுமா?.
விஜயகாந்த் சரத்குமார் எல்லாம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்த காலக்கட்டத்தில் அதே அளவிற்கு வரவேற்பை பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ்.
விஜயகாந்தை போலவே ஒரே வருடத்தில் எக்கச்சக்கமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் சத்யராஜ். ஆனால் புது நடிகர்கள் வர துவங்கியவுடன் சத்யராஜின் மார்க்கெட் சரிய துவங்கியது.
இந்த நிலையில் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் நானும் கூட ரஜினிகாந்த் மாதிரி இப்போதும் மார்க்கெட் உள்ள நடிகராக இருந்திருப்பேன். திடீரென புகழ் கிடைக்கவும் கண் மூடி தனமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து விட்டேன் என சத்யராஜே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த மாதிரியே கே.எஸ் ரவிக்குமாருடன் ஒரு பேட்டியில் பேசும்போது யானை தன் மேல் தானே மண்ணை வாரி போட்டு கொள்வது போல நானும் கே.எஸ் ரவிக்குமாரின் நல்ல நல்ல படங்களின் வாய்ப்புகளை நிராகரித்துள்ளேன்.
இப்படிதான் கே.எஸ் ரவிக்குமார் ஒரு படத்தில் நடிக்க அழைத்தப்போது நான் அதை மறுத்து வேறொரு திரைப்படத்தில் நடித்தேன். இரண்டு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் வெளியானது. என் படம் இரண்டு வாரங்கள் தான் ஓடியது. ஆனால் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் 25 வாரங்கள் ஓடியது.
எனக்கே வயிற்றெரிச்சலாக போய்விட்டது என்கிறார் சத்யராஜ். அது நாட்டாமை திரைப்படம்தான் என்கின்றனர் ரசிகர்கள்.சத்யராஜ் நடிப்பில் அதே சமயத்தில் தாய் மாமன் திரைப்படம் வெளியானது. ஆனால் நாட்டாமைதான் நல்ல வரவேற்பை பெற்றது என கூறப்படுகிறது.
