Actress
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்.. அழகிய லைலா பாடலுக்கு அசத்தும் வீடியோ விட்ட சிவாங்கி!.
sivangi: வெள்ளித்திரையின் மூலம் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களை விட ரியாலிட்டி ஷோ மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமடைந்தவர்கள் அதிகமானவர்கள் உள்ளார்கள். ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தங்களின் உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அவர்களை மிகவும் பிடித்து விடுகிறது.
இதனால் இவர்களுக்கு வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மேலும் பல இடங்களுக்கு செலிபிரிட்டி ஆகவும் செல்கிறார்கள். அந்த அளவிற்கு இவர்களை ரியாலிட்டி ஷோக்களும், சமூக வலைத்தளங்களும் ரசிகர் மத்தியில் கொண்டு சேர்த்து இருக்கிறது.
அந்த வகையில் சமீப காலங்களாக அனைவருக்கும் பிடித்த ஒருவராக சிவாங்கி இருக்கிறார். சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது பதிவிட்டு இருக்கும் வீடியோவானது அவரின் ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவாங்கி கிருஷ்ணகுமார்
சிவாங்கி பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 7 போட்டியாளராக பங்கேற்றார். அப்பொழுது அவர் நார்மலாக பேசும் குரலுக்கும், பாடும் போது உள்ள குரலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. மேலும் அவர் பேசுவது அனைவர் மத்தியிலும் சிவாங்கி மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இது இவ்வாறு இருக்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தோன்றினார். நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கி பெரும் பிரபலமடைந்தார்.

அவரின் குறும்புகளை அவரின் ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் இவரின் பெற்றோர்களும் பாடகர்கள் ஆவார்கள். இவர் குக் வித் கோமாளியின் பிரபலத்தை வைத்து அதன் பிறகு வெள்ளித்திரையில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் பாடகியாக வெள்ளித்திரையில் பல பாடல்களை பாடி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் சிவாங்கி
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிசியாக இருக்கும் சிவாங்கி பல மேடை நிகழ்ச்சிகளில் பாடகியாகவும், வெள்ளித்திரையில் நடிகையாகவும் மிகவும் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் இவர் சமூக வலைத்தளங்களில் பாடல்களை பாடியும், அதற்கு அழகாக நடனமாடியும் பல புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
தற்பொழுது அவர் சமீப காலங்களாக பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்து சிவாங்கியா இது? என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு தற்பொழுது மாடனாகவும், ஸ்டைலாகவும் சிவாங்கி மாறி இருக்கிறார்.
இவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாடலுக்கு ஏற்றவாறு சிவாங்கியும் அழகாக உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்தும் அதனை ஷேர் செய்து வருகிறார்கள்.
