Actress
அசத்தும் அழகு, அப்படியே நிலவு… சிம்பு பட நடிகையின் அசத்தல் புகைப்படங்கள்!..
தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தில் பிரபலமான பல நடிகைகள் உண்டு அப்படி ஒரே திரைப்படத்தில் பிரபலமான நடிகைகளில் நடிகை சித்தி இத்னானி முக்கியமான நடிகை ஆவார்.

2017 முதலே இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாவதற்காக முயற்சித்து வருகிறார். ஆரம்பக்கட்டத்தில் தெலுங்கு சினிமாவில்தான் தொடர்ந்து நடித்தும் வந்தார்.
பம்ப லக்கிடி பம்பா, ப்ரேமா காதா சித்ரம் போன்ற படங்களில் நடித்தார் சில படங்களில் கொஞ்சம் கவர்ச்சியாக கூட நடித்தார். ஆனாலும் அந்த படங்கள் எதுவுமே அவருக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தி தரவில்லை.

இந்த நிலையில் தமிழில் போன வருடம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் நடிகை சித்தி இதானி. இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. ஒரே படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் சித்தி இத்னானி.

இதனை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சித்தி இதானி. தற்சமயம் ஆர்யா நடித்து முத்தையா இயக்கும் காதர் பாட்ஷா என்னும் முத்துராமலிங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதையடுத்து நூறு கோடி வானவில் என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
