News
விவாகரத்து பிரச்சனையில் சான்ஸை பயன்படுத்திய சிம்பு.. ரஜினி கூட அந்த இடத்துல தனுஷ் இருந்திருக்கணும்.!
வயதானாலும் கூட தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
இன்னும் நிறைய திரைப்படங்களில் அவர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. கூலி திரைப்படத்திற்கு ரஜினியிடம் பேச சென்ற பொழுது அவர் ஐந்து படத்திற்கு அதிகமாக கமிட்டாகி இருந்தார் என்று கூறுகிறார் லோகேஷ் கனகராஜ்.
அந்த அளவிற்கு ரஜினிக்கு இன்னும் மார்க்கெட் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியோடு சேர்ந்து நடிகர் சிம்பு அடுத்து அவர் படத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
ரஜினி கூட கூட்டணி
ஆனால் கண்டிப்பாக ரஜினிக்கு இணையான ஒரு கதாபாத்திரம் சிம்புவிற்கு இருக்காது என்கின்றனர் நெட்டிசன்கள். ஆனால் லால்சலாம் திரைப்படத்திலேயே கதாநாயகர்களுக்கு தனியிடம் கொடுத்து ரஜினி நடித்திருந்தார்.
எனவே அதே போலவே அவர் சிம்பு படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதே சமயம் சும்மா ஒரு கேமியோவில் கூட சிம்பு வந்துவிட்டு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
ஆனால் ஒருவேளை தனுஷிற்கு தனது மனைவியுடன் விவாகரத்து ஆகாமல் இருந்திருந்தால் இந்த படத்தில் தனுஷ்தான் நடித்திருப்பார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஒரு பிரபல மலையாள இயக்குனர் தான் இந்த திரைப்படத்தை இயக்க போவதாகவும் பேசப்படுகிறது.
