Tamil Trailer
மீண்டும் களத்தில் இறங்கிய அமீர் கான்.. இந்த படமும் தமிழில் வருமா?
அமீர் கான் தயாரிப்பில் அவரே நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டிருக்கும். அந்த திரைப்படங்களில் வழக்கமாக உள்ளது போல ஆக்ஷன் காட்சிகள் இருக்காது என்றாலும் கூட சிறப்பான கதை அமைப்பை கொண்டிருக்கும்.
இதற்கு முன்பு அவரது தயாரிப்பில் தங்கல் என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் இரண்டு பெண்களை குஸ்தியில் சாம்பியன் ஆக்கும் தந்தையின் கனவை வைத்து கதை செல்லும்.
அதே போல தாரே சமீன் பர் என்கிற இன்னொரு திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் ஒரு சிறுவனுக்கு படிப்பே வராது. இதனால் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவான். இந்த சமயத்தில் புதிதாக சேரும் பள்ளியில் வாத்தியாராக அமீர்கான் வருகிறார்.
அவர் எப்படி இவனை படிக்க வைக்கிறார் என்பதாக அந்த கதை செல்லும். அதனை தொடர்ந்து சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par) என்கிற இன்னொரு திரைப்படத்தின் ட்ரைலர் வந்துள்ளது. இதில் மாற்று திறனாளிகளாக இருக்கும் நபர்களை கொண்டு ஃபுட் பால் டீம் ஒன்றை உருவாக்குகிறார் அமீர் கான். அதனை வைத்து இந்த படத்தின் கதை செல்கிறது.
தாரே சமீன் பர் திரைப்படத்தை கொஞ்சமாக மாற்றி சூர்யா பசங்க 2 என்கிற திரைப்படமாக எடுத்தார். அதே போல இந்த படமும் தமிழில் வருமா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.
