Tamil Cinema News
எஸ்.கேவுடன் இணையும் ஏ.கே.. மாஸ் காம்போவில் அடுத்த படம்..!
விஜய், அஜித், சூர்யா போலவே தொடர்ந்து கமர்ஷியலாக திரைப்படம் கொடுக்கும் ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். நடுவில் சில படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தாலும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை கொடுத்துள்ளன.
இந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்றே கூற வேண்டும்.
அதுவரை வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகனாக மாறியுள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மார்க்கெட் இப்போது உயர்ந்துள்ளது. முக்கியமாக அமரன் திரைப்படத்திற்கு ஹிந்தி சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து ஹிந்தியிலும் இப்போது எஸ்.கேவுக்கு வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது ஹிந்தியில் படம் நடித்தால் அதை நான் தான் தயாரிப்பேன் என அமீர் கான் என்னிடம் கூறினார் என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
மேலும் அமீர் கானும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து நடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.