Connect with us

எனக்கு பதிலா தயவு செஞ்சு அந்த பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்க… எம்.ஜி.ஆர் மனைவியிடம் கெஞ்சிய நடிகை.. இவங்கக்கிட்ட கத்துக்கணும்!.

sn lakshmi MGR

Cinema History

எனக்கு பதிலா தயவு செஞ்சு அந்த பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்க… எம்.ஜி.ஆர் மனைவியிடம் கெஞ்சிய நடிகை.. இவங்கக்கிட்ட கத்துக்கணும்!.

Social Media Bar

Actress SN Lakshmi and MGR : பொதுவாக சினிமாவில் நடிகர்களுக்கு மத்தியில் தான் எப்போதும் போட்டியிருந்து வரும் ஆனால் சமீப காலங்களாக நடிகைகளுக்கு இடையேயும் போட்டிகள் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

நடிகைகளில் யார் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, யார் அதிக பட வாய்ப்பு பெரும் நடிகை என்கிற போட்டி எல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த மாதிரியான போட்டி பழைய சினிமாக்களில் கருப்பு வெள்ளை காலத்தில் இல்லை என்று கூறலாம்.

அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வும் நடந்திருக்கிறது தமிழ் சினிமாவில் அம்மாவாக நடிக்கும் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை எஸ் என் லட்சுமி. வானத்தைப்போல திரைப்படத்தில் கூட விஜயகாந்துக்கு (Vijayakanth) பாட்டியாக இவர் நடித்திருப்பார். பல படங்களில் இவரை அம்மா கதாபாத்திரத்தில் பார்க்க முடியும்.

mgr-2
mgr-2

மிக இளம் வயதிலேயே எம்.ஜி.ஆருக்கு (MGR) அம்மாவாக நடித்திருக்கிறார் எஸ் என் லெட்சுமி இதனால் தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். அதே சமகாலத்தில் தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர் நடிகை பண்டேரி பாய்.

ஆனால் தமிழில் அவருக்கு 1960 கால கட்டங்களில் குறைவாகவே வாய்ப்புகள் கிடைத்து வந்தன. பண்டேரி பாய்க்கும் எஸ் என் லட்சுமிக்கும் (SN lakshmi) இடையே நல்ல பழக்கம் இருந்ததால் அவர் இப்படி வாய்ப்பு இல்லாமல் தவிப்பது எஸ் என் லட்சுமிக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

எனவே அவர்  எம்.ஜி.ஆர் மனைவியிடம் சென்று எம்ஜிஆரிடம் கூறி பண்டரி பாய்க்கு அம்மா கதாபாத்திரத்தை சில படங்களில் வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அதற்கு எம்.ஜி.ஆர் மனைவி அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமே பரவாயில்லையா என கேட்டு இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த எஸ் என் லட்சுமி எனக்கு நான்கு படங்களுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறார் என்றால் பண்டேரி பாய்க்கு நான்கு படங்களுக்கு வாய்ப்பு வாங்கி தர சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அந்த நல்ல எண்ணத்தை பார்த்த எம்.ஜி.ஆர் அவரை பாராட்டியது மட்டும் இன்றி தெய்வத்தாய் (deivathai) என்னும் திரைப்படத்தில் பண்டரி பாய்க்கு வாய்ப்பும் பெற்றுக் கொடுத்தார்.

To Top