Latest News
பாட்டு பாடுனதுக்கு காசு கொடு… விஜய் படத்தை தராததால் வன்மம் தீர்த்த சோனி நிறுவனம்!..
Vijay Movies :திரைப்படங்களை பொருத்தவரை பல்வேறு விதமான உரிமங்கள் உருவாகிவிட்டன இவைதான் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தருகின்றன. ஒரு படம் திரையரங்கில் ஓடவில்லை என்றாலும் கூட படத்தின் 50 சதவீத முதலீட்டை சேட்டிலைட் ரைட்ஸ் இசைக்கான உரிமம் ஓடிடிக்கான உரிமம் என்று விற்று அதன் மூலமாக லாபம் ஈட்டிவிடுகின்றன.
அதிலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்சமயம் விஜய் நடித்து யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வாங்குவதற்கு திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் இது குறித்து ஏஜிஎஸ் நிறுவனத்திடமும் பேசி இருந்தது ஆனால் சோனி நிறுவனத்தை விடவும் அதிகமான தொகை கொடுத்து அந்த பாடல்கள் உரிமத்தை வாங்குவதற்கு டி சீரிஸ் நிறுவனம் தயாராக இருந்ததால் தற்சமயம் அவர்களுக்கு படத்தின் பாடல்களுக்கான உரிமத்தை விட்டு இருக்கிறது ஏ.ஜி.எஸ் நிறுவனம்.
இதனால் கோபம் அடைந்த சோனி நிறுவனம் ஒரு பெரிய வேலையை செய்திருக்கிறது, ஏற்கனவே ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான கான்ஜுரிங் கண்ணப்பன் என்கிற திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி என்கிற எஸ்பிபி பாடலை சரண்யா பாடுவது போன்ற காட்சி இருக்கும்.
அந்த பாட்டிற்கான உரிமம் சோனி நிறுவனத்திடம் இருக்கிறது. எனவே தங்களிடம் அனுமதி வாங்காமல் அந்த பாடலை திரைப்படத்தில் வைத்ததற்காக மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளது சோனி நிறுவனம்.
பொதுவாக யூடியூப் தளங்களில் சரிகம போன்ற நிறுவனங்கள் அவர்களது பாடல்களை யூட்யூப்பர்கள் பாடுவதற்கே காப்பி ரைட் போட்டு வந்தனர். இந்த நிலையில் அதே முறையை திரைப்படத்திலும் பயன்படுத்தி இருக்கிறது சோனி நிறுவனம் என கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்