Connect with us

அது முழுக்க முழுக்க என் கதை.. சொர்க்கவாசல் திரைப்படம் குறித்து இயக்குனர் குற்றச்சாட்டு..!

sorgavasal

Tamil Cinema News

அது முழுக்க முழுக்க என் கதை.. சொர்க்கவாசல் திரைப்படம் குறித்து இயக்குனர் குற்றச்சாட்டு..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகராக ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருந்து வந்துள்ளன. ஆனால் ரன் பேபி ரன் திரைப்படத்திற்கு பிறகு அவர் சீரியஸான திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து வருகிறார்.

ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் படங்களை விடவும் அவர் இயக்கும் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அவர் இயக்கிய வீட்ல விஷேசம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து திரைப்படம் இயக்கி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி இதற்கு நடுவே திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் சொர்க்கவாசல்.

sorgavasal

sorgavasal

சொர்க்கவாசல் திரைப்படம்:

இந்த திரைப்படத்தில் இவர் கைதியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை சித்தார்த் விஸ்வநாத் என்பவர் இயக்கியிருக்கிறார். செல்வராகவன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கிருஷ்ணகுமார் ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அவர் கூறும்போது  சைதாப்பேட்டை கிளைச்சிறையில் கைதிகளுடன் நான் சந்தித்த அனுபவங்களை கிளைச்சிறை என்னும் தலைப்பில் கதையாக எழுதினேன்.

அதன் முழு திரைக்கதையும் ட்ரீம் வாரியர் நிறுவனத்திடம் இருக்கிறது. இந்த நிலையில் என்னுடைய கதை சொர்க்கவாசல் என்று படமாக்கப்பட்டுள்ளது என அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

To Top