Cinema History
அந்த சிவாஜி படத்தால் மார்க்கெட் அவுட் ஆக இருந்தேன்!.. உள்ளே புகுந்து கலைத்துவிட்ட நடிகை!..
சிவாஜி கணேசன் திரைப்படங்கள் என்றாலே அதில் சிவாஜியுடன் நடிக்கும் நடிகைகளுக்குதான் பெரும் போராட்டம் என கூற வேண்டும். ஏனெனில் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு இணையான ஒரு நடிப்பை நடிகைகளால் வெளிப்படுத்த முடிவதில்லை.
இதனாலேயே சிவாஜி கணேசனோடு நடிக்கும்போது அதிக சிரமத்தோடு அப்போதைய நடிகைகள் நடித்து வந்தனர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் பிரபல நடிகையான சௌகார் ஜானகி சிவாஜி கணேசனோடு தனது அனுபவம் குறித்து கூறியிருந்தார்.
சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சௌகார் ஜானகி நடித்தார். அந்த திரைப்படத்தில் அவருக்கு கொஞ்சம் வில்லி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே புதிய பறவை திரைப்படத்தில் அப்படி நடித்ததால் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

அதே சமயம் கிடைத்த வாய்ப்பையும் தட்டி கழிக்க முடியாது. எனவே ட்ரிக்காக ஒரு காரியம் செய்தார் சௌகார் ஜானகி. வில்லியாக இருக்கும் அதே சமயம் கொஞ்சம் காமெடியான கதாபாத்திரமாகவும் அதை மாற்றினார். அப்படி செய்யும்போது ஒட்டுமொத்தமாக அந்த கதாபாத்திரத்தை மக்கள் வெறுக்க மாட்டார்கள் என்பது சௌக்கார் ஜானகியின் கணிப்பாக இருந்தது.
அதே போலவே உயர்ந்த மனிதன் படம் வெளியானப்போது அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
