Connect with us

டுவிஸ்ட்டில் முடிந்த ஸ்குவிட் கேம் 2.. அடுத்த எபிசோட் எப்போ வருது..!

Hollywood Cinema news

டுவிஸ்ட்டில் முடிந்த ஸ்குவிட் கேம் 2.. அடுத்த எபிசோட் எப்போ வருது..!

Social Media Bar

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற வெப் தொடர்களில் பிரபலமானது ஸ்குவிட் கேம் என்கிற தொடர். இதன் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் டப்பிங்கில் வெளிவந்தப்போது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த தொடரை பொறுத்தவரை Seong Gi-hun என்கிற கதாநாயகன் ஒரு விளையாட்டில் கலந்துக்கொள்வான். அந்த விளையாட்டில் 400க்கும் அதிகமான நபர்கள் விளையாடுவார்கள். சீனாவில் குழந்தைகள் விளையாடும் சின்ன சின்ன விளையாட்டுகள் அங்கு இருக்கும்.

அதில் ஜெயிப்பவர்கள் அடுத்த விளையாட்டுக்கு செல்வார்கள். தோற்பவர்கள் கொல்லப்படுவார்கள். இந்த நிலையில் 6 விளையாட்டிலும் ஜெயிப்பவர்களுக்கு பெரிய பரிசு தொகை 100 மில்லியன் கொரியன் யான் கொடுக்கப்படும்.

முதல் பாகத்தில் அந்த விளையாட்டில் கதாநாயகன் ஜெயித்துவிடுவார். ஆனால் அதை வைத்து அவரால் நிம்மதியாக வாழ முடியாது. எனவே இந்த விளையாட்டை நடத்துபவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார் கதாநாயகன்.

அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளே இரண்டாவது சீசன். இதன் கதை சுறு சுறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் 7 ஆவது எபிசோடில் முக்கியமான கட்டத்தில் கதை முடிந்துவிட்டது. இதனால் அடுத்த எபிசோடுகள் வருமா? என்கிற கேள்வி மக்களுக்கு இருந்தது.

ஏனெனில் Money heist சீரிஸ் வந்தப்போது இப்படிதான் தாமதமாக அடுத்த எபிசோடுகள் வந்தன. ஆனால் Squid Game ஐ பொறுத்தவரை அடுத்த வருடம்தான் மீத கதைகள் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Bigg Boss Update

To Top