நடிக்க தெரியாமதான் நம்மக்கிட்ட கதை கேக்குறாங்க!.. ஹீரோ நடிகர்களை கலாய்த்துவிட்ட சுந்தர் சி!..

Director Sundar C : தமிழில் காமெடி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி முதலில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அமைதிப்படை திரைப்படத்திற்கு பிறகு தனியாக படம் இயக்க வேண்டும் என மணிவண்ணனை விட்டு பிரிய முடிவு செய்தார் சுந்தர் சி.

சுந்தர் சியை பொறுத்தவரை தனக்கென ஒரு பாணியை அவர் உருவாக்கி கொண்டார். அதற்கு அவர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்ததே முக்கியமான காரணமாக அமைந்தது. உதவி இயக்குனராக இருந்தப்போது மணிவண்ணனிடம் நிறைய கற்றுக்கொண்டார் இயக்குனர் சுந்தர் சி.

Social Media Bar

மணிவண்ணனை பொறுத்தவரை படத்தின் திரைக்கதையை தாண்டி படப்பிடிப்பில் தனக்கு பிடித்தாற் போல பல காட்சிகளை அவர் சேர்ப்பார். எனவே படம் முடியும் வரை அது எப்படி இருக்க போகிறது என்பது பலருக்கும் தெரியாது.

அதே முறையை இயக்குனர் சுந்தர் சியும் தனது திரைப்படங்களில் பின்பற்றினார். இதனால் சுந்தர் சிக்கும் அவரது திரைப்படங்களில் நல்ல வெற்றி கிடைத்தது. இதுக்குறித்து சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறும்போது இயக்குனர்களிடம் முழுக்கதையையும் கேட்டுவிட்டு படத்திற்கு ஓ.கே சொல்லும் நடிகர்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

படத்தின் கதையில் என்ன இருக்கிறது.. அதை காட்சிப்படுத்துவதில்தான் இருக்கிறது. ஒருவேளை அந்த கதையில் அவர்களால் நடிக்க முடியுமா என்பதை அறிவதற்காக கதை கேட்கிறார்களோ என்னவோ தெரியவில்லை என கூறியுள்ளார் சுந்தர் சி.