Connect with us

எந்த ஒரு ஹீரோவாலையும் முடியாது.. கங்குவா படத்துக்காக தினசரி அதை பண்ணுனாரு… சூர்யாவை பார்த்து ஆடிப்போன பிரபலம்.!

News

எந்த ஒரு ஹீரோவாலையும் முடியாது.. கங்குவா படத்துக்காக தினசரி அதை பண்ணுனாரு… சூர்யாவை பார்த்து ஆடிப்போன பிரபலம்.!

Social Media Bar

சூர்யா நடித்து வரும் திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் சூர்யா என்று கூறப்படுகிறது .

சூர்யாவின் வேலை:

வருகிற நவம்பர் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படம் குறித்து நடிகர் நடராஜன் சில அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். படத்தில் சூர்யா ஒரு காட்டுவாசி மாதிரியான வேதத்தில் நடித்திருக்கிறார் என்பதால் மேக்கப் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் தினமும் நான்கு மணிக்கு காலையில் எழுந்து விடுவார்.

ஆறு மணி வரை அவருக்கு மேக்கப் போடப்படும். அதற்குப் பிறகுதான் படப்பிடிப்பு பிறகு சூரியன் மறையும் வரை படப்பிடிப்பு நடக்கும். மாலை ஆன பிறகு 6 மணியிலிருந்து எட்டு மணி வரை திரும்ப மேக்கப் கலைப்பதற்கு இரண்டு மணி நேரமாகும்.

இது எல்லாம் முடித்த பிறகு அவர் ஓய்வு எடுப்பார் என்று நினைத்தால் அப்பொழுதுதான் சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார். ஏனெனில் கங்குவா திரைப்படத்தின் கதைப்படி மிகவும் உடல் வலிமை உள்ள ஒரு கதாபாத்திரம் அது.

அதனால் தினசரி உடற்பயிற்சி செய்தாக வேண்டிய சூழ்நிலை சூர்யாவிற்கு இருந்தது. தினமும் இரவு 10 மணி வரை உடற்பயிற்சி செய்துவிட்டு உறங்கச் செல்வார் மீண்டும் காலையில் 4 மணிக்கு எழுந்து விடுவார். எங்கள் படப்பிடிப்பு தளத்திலேயே அந்த அளவிற்கு அதிகமாக வேலை பார்த்தது சூர்யா மட்டும்தான் என்று ஆச்சரியமாக கூறி இருக்கிறார் நடிகர் நடராஜன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top