தமிழ் சினிமாவில் தொடர்ந்து தற்சமயம் திரைப்படங்களாக நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
அதனால் கதை தேர்ந்தெடுப்பதிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழில் வெற்றி வாகை சூடி வரும் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார் நடிகர் சிம்பு. இந்த நிலையில் தற்சமயம் சிம்பு டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்.
அதில் அவர் பேசும்போது எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்திற்கு ஏன் சந்தானம் தேவை என்பது குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது வர வர தமிழ் சினிமாவில் மிக சீரியஸான திரைப்படங்களாக வருகின்றன.
மக்களும் அந்த மாதிரியான திரைப்படங்களை அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் நல்ல ஜாலியான திரைப்படங்களும் வர வேண்டும். இப்போதெல்லாம் அந்த மாதிரி திரைப்படங்கள் குறைந்துவிட்டன. சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி என்றொரு திரைப்படம் பார்த்தேன்.
நன்றாக இருந்தது. அந்த மாதிரியான திரைப்படங்களும் வர வேண்டும் அதனால்தான் எங்கள் படத்திற்கு சந்தானம் தேவை என கூறியுள்ளார் நடிகர் சிம்பு. இதன் மூலம் எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.