Tag Archives: ஏ.ஆர் முருகதாஸ்

படத்துக்கு ஒதுக்குன காசுல முக்கால்வாசி எஸ்.கேவுக்கே போயிட்டே!.. படம் நல்லா வருமா?.. முருகதாஸ் படத்தில் பிரச்சனை..

Sivakarthikeyan : அயலான் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது என கூறப்படுகிறது. படத்திற்கான மற்ற வேலைகள்தான் தற்சமயம் போய்க்கொண்டிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராக இருக்கிறது.

கிட்டத்தட்ட துப்பாக்கி மாதிரியான ஒரு சீரியஸான திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் சம்பளத்திற்கே எக்கசக்கமான தொகை செலவாகிவிட்டதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

Sivakarthikeyan-2

இந்த படத்திற்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை 70 கோடி எனக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கும் பொழுது 70 கோடி என்பது பெரிய தொகையாகும். ஆனால் அதில் 30 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக போய்விட்டதாம்.

மேலும் ஏ.ஆர் முருகதாஸுக்கு 20 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கின்றனர். இதிலேயே 50 கோடி போய்விட்டது. இது இல்லாமல் அனிருத்திற்கு 7 கோடி ரூபாய் இசையமைப்பதற்கு சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

57 கோடி ரூபாய் போக மீதி இருக்கும் 13 கோடி ரூபாயில் மற்றவர்களுக்கு சம்பளத்தை கொடுத்து படத்தையும் எடுத்து முடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆக மொத்தம் படத்தின் தயாரிப்பு செலவு என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது அதைவிட சிவகார்த்திகேயனின் சம்பளம் அதிகமாக இருக்கிறது இது சரியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் சினிமா பத்திரிக்கையாளர்கள்.

படம் எடுக்குறேன்னு எங்க வயித்துல அடிக்காதீங்க!.. சிவகார்த்திகேயன் செயலால் கோபமான சினிமா தொழிலாளர் சங்க ஊழியர்கள்!..

Sivakarthikeyan: அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.

இதற்கு நடுவே தனது 22 ஆவது திரைப்படத்தின் படவேளையிலும் இறங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்குதான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

ஏனெனில் பொதுவாகவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படங்கள் சமூக அரசியல் பேசும் படமாக இருக்கும். மேலும் அந்த கதாநாயகர்களுக்கு பெரும் ஹிட் கொடுக்கும் படமாக அமைந்துவிடும். எனவே ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் வலம் வருவதற்கு ஒரு முக்கிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பிலேயே பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பதால் அவர் தெலுங்கில் இருந்தே படத்தில் பணிப்புரிவதற்கு ஆட்களை அழைத்து வந்துவிட்டார்.

இதனால் கோபமான தமிழ் சினிமா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கோபமடைந்தனர். ஏனெனில் தமிழ்நாட்டில் எடுக்கும் திரைப்படங்களில் பணிப்புரிவதற்கான வாய்ப்புகளை தென்னிந்திய ஊழியர் சங்கத்தை சேர்ந்த தமிழ் ஊழியர்களுக்குதான் தர வேண்டும்.

ஆனால் அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் இப்படி வெளியில் இருந்து ஆள் அழைத்து வருவது சரி கிடையாது என்பதே அவர்களது கோபமாக உள்ளது.

விஜய் ஸ்டைலிலேயே சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை!.. இயக்குனர் எடுத்த திடீர் முடிவு.. அப்ப அடுத்த விஜய் நம்ம எஸ்.கேதான் போல!.

Sivakarthikeyan : டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை கண்டது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகமாக்கினார் என்று பேச்சுக்கள் உள்ளன.

ஆனால் அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தற்சமயம் அவர் நடித்த மாவீரன் மற்றும் அயலான் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹீரோ கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும்.

பொதுவாகவே சிவகார்த்திகேயன் சிறுவர்களுக்கான திரைப்படங்களை எடுத்து வருவதால் இந்த திரைப்படங்களுக்கு சிறுவர் சிறுமியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் சிறுவர்களுக்காக படம் எடுப்பது கிடையாது என்பதால் சிவகார்த்திகேயன் அந்த விஷயத்தை தொடர்ந்து செய்து வருகிறார்.

Sivakarthikeyan-2

இந்த நிலையில் இதுவரை காமெடி கதாநாயகனாக இருந்து வந்த சிவகார்த்திகேயன் இனிமேல் சீரியஸான ஒரு ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் விஜயும் தற்சமயம் அரசியலுக்கு செல்ல இருப்பதால் விஜய்யின் இடத்தை பிடிப்பதற்காக சிவகார்த்திகேயன் முயற்சிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியே இல்லாத ஒரு திரைப்படம் என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்து ஏ.ஆர் முருகதாஸின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட கத்தி, துப்பாக்கி மாதிரியான கதையை கொண்ட திரைப்படம் என கூறப்படுகிறது. எனவே விஜய் ஸ்டைலிலேயே அடுத்து திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜயும் கூட ஆரம்பத்தில் குழந்தைகளுக்காக சில திரைப்படங்கள் நடித்தார் அதையே சிவகார்த்திகேயனும் பின்பற்றுகிறார் என்று கூறப்படுகிறது.

அஜித், விக்ரம், சிம்பு எல்லோரும் நிராகரித்த கதை!.. ஆனா செம ஹிட்டு.. எந்த படம் தெரியுமா?

Actor Ajith : தமிழில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித்துக்கு அடையாளமாக பல திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் தீனா திரைப்படமும் முக்கியமானது. தீனா திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான் இயக்கினார்.

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து இன்னொரு படம் எடுக்க வேண்டும் என்பது ஏ.ஆர் முருகதாஸின் ஆசையாக இருந்தது. எனவே அதற்காக ஒரு கதையை முடிவு செய்தார். பிறகு அந்த கதையை அஜித்திடம் கூறினார். ஆனால் அஜித்திற்கு அந்த கதை பிடிக்கவில்லை வேறு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார் அஜித்.

ஆனால் இந்த கதை ஒரு நல்ல வெற்றியை கொடுக்கும் என்பது ஏ.ஆர் முருகதாஸின் எண்ணமாக இருந்தது. ஆனால் அஜித் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் பிறகு சிம்பு விக்ரம் போன்ற நடிகர்களிடமும் அந்தக் கதையை கூறினார் ஏ.ஆர் முருகதாஸ்.

அவர்களுக்கும் அந்த கதை பிடிக்கவில்லை பிறகு நடிகர் மாதவனிடமும் இந்த கதை சென்று இருக்கிறது மாதவனும் அந்த கதையை ஒப்புக்கொள்ளாத காரணத்தால் இறுதியில் சூர்யாவிடம் சென்று இந்த கதையை கூறியுள்ளார்.

கேட்கவே இந்த கதை வித்தியாசமாக இருக்கிறது எனவே நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சூர்யா. ஏனெனில் அப்பொழுது சூர்யா வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். எனவே அவருக்கு இந்த கதையில் நடிப்பது பிடித்திருந்தது. பிறகு கஜினி என்று வெளியான அந்த திரைப்படம் தமிழில் பெரும் வெற்றியை கண்டது.

அதனை தொடர்ந்து அந்த திரைப்படம் பாலிவுட்டிலும் நடிகர் அமீர்கானை வைத்து படமாகப்பட்டது. இந்த படத்திற்கு முன்பு ரமணா, தீனா என்று பல வெற்றி படங்களை ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்த போதும் கூட அவருக்கு இத்தனை நடிகர்கள் வாய்ப்பு கொடுக்காமல் போனது அவர்களின் துரதிஷ்டம் தான்.

அந்த படத்துக்கு ரஜினி தேவையில்லாத ஆள்!.. அதுக்கு பதிலா விஜயகாந்தை நடிக்க வைங்க!. மாஸ் ஹிட் கொடுத்த படம்!.

Vijayakanth Rajinikanth : சினிமாவில் திரைப்படங்கள் கைமாறுவது என்பது சகஜமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் அப்படி கை மாறுவதன் மூலமே சில படங்கள் சிறப்பான ஒரு வெற்றியை கொடுத்து விடுகின்றன. ஏ.ஆர் முருகதாஸ் ஒரு சமயம் புரட்சிகரமான திரைப்படம் ஒன்றை எடுக்க நினைத்தார்.

அப்படியாக அவர் கதை எழுதி முடிக்கும் போது அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் படத்தின் கதைப்படி கதாநாயகனுக்கு எந்த ஒரு கமர்சியலான காட்சிகளும் கிடையாது எனக் கூறலாம்.

மிகவும் சாந்தமான ஒரு நபராகதான் அவர் இருப்பார். ஆனால் அவர் மனதிற்குள் ஒரு கோபம் இருந்து கொண்டே இருக்கும் எப்போதாவது ஒருமுறைதான் படத்தில் அந்த கோபமே அவரது முகத்தில் வெளிப்படும் மற்ற நேரங்களில் எல்லாம் மிகவும் சாந்தமாக இருக்கக்கூடிய ஆசிரியர் பணியில் இருக்கக்கூடிய ஒரு மனிதர்.

அதுதான் ரமணா திரைப்படத்தின் கதை. ரமணா திரைப்படத்தின் கதையை இப்படி வடிவமைத்த பொழுது அதில் கதாநாயகன் போடும் உடை கூட மாடலாக இருக்கக் கூடாது மிகவும் டீசண்டாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்படி இருக்கும் பொழுது இந்த கதாபாத்திரம் கண்டிப்பாக ரஜினிகாந்திற்கு சரியாக இருக்காது ரஜினி என்றாலே ஸ்டைல் என்னும் பொழுது அவருக்கு ஸ்டைலான உடைகளை கொடுக்க வேண்டி இருக்கும்.

எனவே இந்த படத்திற்கு அவர் தேவையில்லாத ஒரு நடிகர் என்று கூறிய படத்தின் ஒளிப்பதிவாளர் அதற்கு பதிலாக விஜயகாந்தை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்ற பொழுது இயக்குனர் முருகதாஸிற்கு சற்று யோசனையாக தான் இருந்தது. ஆனால் விஜயகாந்தின் நடிக்க வைத்த பிறகு அந்த சாந்தமான கதாபாத்திரத்திற்கும் சரி கோபமான கதாபாத்திரத்திற்கும் சரி விஜயகாந்த் சரியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

படிப்பு முக்கியமில்லன்னு சொல்றவங்களை நம்பாதீங்க!.. ஜோவிகாவை நேரடியாக தாக்கிய ஏ.ஆர் முருகதாஸ்!.. அட கொடுமையே…

Director AR Murugadoss: தமிழில் வெற்றி படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.ஆர் முருகதாஸ். அவர் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படமானது அனைவரும் ஏ.ஆர் முருகதாஸை திரும்பி பார்க்க வைக்கும் திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸிற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது. தொடர்ந்து பல வகையான கதை அம்சங்களை கொண்டு படங்களை இயக்க துவங்கினார் ஏ.ஆர் முருகதாஸ். அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய இரு திரைப்படங்கள் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கு இடையே ஒரு பேட்டியில் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது சமீபத்தில் படிப்பு முக்கியம் கிடையாது படிப்பு இல்லாமல் சாதித்தவர்களும் இருக்கிறார்கள் என காமராஜரையும் சச்சின் டெண்டுல்கரையும் காட்டுகிறார்கள். அப்படி பேசுபவர்களை நம்பாதீர்கள்.

Director AR Murugadoss Stills

இதுக்குறித்து ஒரு வீடியோவில் என் நண்பர் அருமையாக கூறியிருப்பார். படிக்காமல் சாதித்தவன் 10 பேரை நீங்கள் காட்டினால் படித்து சாதித்த 100 பேரை என்னால் காட்ட முடியும் என்பார். எனவே ஒரு வழக்கறிஞராகவோ அல்லது டாக்டராகவோ நீங்கள் ஆக வேண்டும் என நான் கூறவில்லை.

ஆனால் அவர்கள் கூறுவதை புரிந்துக்கொள்ளவாவது நீங்கள் படித்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகாதான் படிப்பு முக்கியமில்லை என கூறி வந்தார். அதற்கு எதிராகதான் ஏ.ஆர் முருகதாஸ் இப்படி பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

என்னால அஜித்த வச்சி படம் பண்ண முடியாது இயக்குனர் ஆவேசம், இதெல்லாம் ஒரு காரணமாப்பா?…

Ajith and A R Murugathash: தமிழ்திரையிலகில் தல என்று செல்லமாக அழைக்கக் கூடிய நடிகர் அஜித் குமார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போலத் தான் தமிழ்திரையுலகம் பார்க்கிறது.

விஜய்க்கு சரியான போட்டி என்றால் அவர் அஜித் மட்டும்தான். அன்று ரஜினி-கமல் மாதிரி இன்று அஜித்-விஜய். தொழிலையும் தாண்டி இவர்கள் இருவரும் ஒரு நல்ல நண்பர்கள். தமிழகம் மட்டுமல்ல உலக அளவில் விஜய்க்கு இருக்கும் அளவிற்கான ரசிகர் கூட்டம் அஜித்க்கும் உள்ளது.

அஜித் படம் பெரும்பாலும் வெற்றிப்படங்கள். அவருடன் பணியாற்றிய இயக்குனர்கள் ஒவ்வொருவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் அப்படிபட்ட ராசியான கதாநாயகனும் கூட.

அப்படி அஜித்தை வைத்து தீனா என்ற படத்தை ஹிட் கொடுத்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தீனா படம் ஏ.ஆர் முருகதாஸுக்கு முதல் படமும் கூட, அதன்பிறகு இருவரும் இணைந்து மிரட்டல் என்ற படம் பேச்சுவார்த்தை முடிந்து படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது.

முதல் மூன்று நாள் படப்பிடிப்பு ஆரம்பித்த மூன்று நாளில் அஜித்துக்கும், அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அஜித் தயாரிப்பாளரை மாற்றலாம் என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.

அதற்கான பேச்சுவார்த்தை முடிவதற்குள்ளேயே இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் சூர்யாவை வைத்து கஜினி படம் இயக்க சென்றுவிட்டதால் மிரட்டல் படம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தோல்வியிலே முடிந்தது.

அதன்பிறகு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸும், அஜித்தும் இணைந்து பணியாற்றவே இல்லை மேலும் அஜித் மிரட்டல் படம் குறித்து மிகுந்த வேதனையடைந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அப்ப ரமணாவும் முருகதாஸ் படம் இல்லையா!.. காபி அடிச்ச லிஸ்ட் பெருசா போகுதே!..

தமிழில் ஹிட் படங்கள் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படங்களில் பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தவை.

முக்கியமாக அதில் ரமணா திரைப்படத்தை கூறலாம் ரமணா திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸுக்கு பெரும் மாற்றமாக அமைந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார் முருகதாஸ்.

ஆனால் அந்த திரைப்படங்கள் எல்லாம் பெரும் சர்ச்சையை கிளப்பின. முருகதாஸ் இயக்கிய கஜினி என்கிற திரைப்படம் ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் என்கிற இயக்குனரால் எடுக்கப்பட்ட மொமெண்டோ என்கிற படத்தின் நகல் ஆகும்

இதை அந்த இயக்குனரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு முருகதாஸை கலாய்த்து இருந்தார். அதேபோல முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் இயக்குனர் கோபி நாயனார் அவர்களின் கதை என்று கூறப்படுகிறது. இவர் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கியவர். அவரது கதையை எடுத்து தான் முருகதாஸ் கத்தி திரைப்படமாக்கினார் என்றும் பேச்சுக்கள் இருந்தன.

இருந்தாலும் முருகதாஸின் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் ஒரு மாஸ்டர் பீஸாக ரமணா திரைப்படம் இருந்தது. ஆனால் அதுவும் கூட அவர் கதை கிடையாது என்று கூறியுள்ளார் இயக்குனர் நந்தகுமார்.

இயக்குனர் நந்தகுமார் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தயாரிப்பாளரிடம் பேசி எழுதிய கதைதான் ரமணா படத்தின் கதை. அது படமாக்கப்பட்ட பிறகு படம் வெளியாவதில் நிறைய சிரமங்கள் இருந்தன. ஆனால் அந்த படத்திற்காக வெகுவாக உழைத்து இருந்தார் நந்தகுமார்.

பிறகு அந்த படம் வெளியாகாமலே போய்விட்டது வெகுநாட்கள் கழித்து அதே கதையை முருகதாஸ், ரமணா என்னும் பெயரில் படமாக்கினார். பிறகு இந்த விஷயத்தை அறிந்த விஜயகாந்த் நந்தகுமாருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். என்னை வைத்து ஏதாவது ஒரு படம் எடுங்கள் என்று அவர் கூறிய பிறகு தேர்தல் அதிகாரியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து நந்தகுமார் எடுத்த திரைப்படம்தான் தென்னவன். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித்திற்கும் முருகதாஸிற்கும் நடுவே ஏற்பட்ட தீராத பகை!. இதுதான் காரணமாம்!..

தமிழ் சினிமாவில் ரஜினி விஜய்க்கு பிறகு அதிக ரசிகப்பட்டாளத்தை கொண்டவராக நடிகர் அஜித் இருக்கிறார். இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் போட்டியால் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. அதே போல விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. ஆனால் முன்பெல்லாம் அப்படி இருந்ததில்லை.

அஜித்திற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தீனா. தீனா திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்தது. தீனா படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான் இயக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து கஜினி படத்தை இயக்க இருந்தார் முருகதாஸ். இந்த நிலையில் கஜினி படத்தில் அஜித் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். படத்தின் படப்பிடிப்பும் துவங்கியது. ஆனால் அப்போது படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்ரவர்த்திக்கும் அஜித்திற்கும் இடையே சண்டையானது.

எனவே முருகதாஸிடம் சென்ற அஜித். நீங்கள் இந்த தயாரிப்பாளரை விட்டு வந்துவிடுங்கள். நாம் வேறு தயாரிப்பாளரை வைத்து படம் பண்ணுவோம் என கூறியுள்ளார். இதுக்குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ அஜித்தை விட்டு வாருங்கள் இதே கதையை வேறு ஹீரோ வைத்து எடுப்போம் என கூறியுள்ளார்.

இதனை கேட்டு முருகதாஸும் ஒப்புக்கொண்டார். இறுதியாக அந்த படத்தை சூர்யாவை வைத்து எடுத்தனர். இதனால் முருகதாஸும் அஜித்தும் எதிரிகளாகிவிட்டனர் என கூறப்படுகிறது.

என்னய்யா செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உக்காந்துருக்க.. இயக்குனர் செய்கையால் கடுப்பான வாலி!..

நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவர் பெரும் உயரத்தை தொடுவதற்கு சில முக்கியமான திரைப்படங்கள் அதிகமாக உதவின. அப்படியான திரைப்படங்களில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படம் முக்கியமான படம் ஆகும்.

முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் அஜித் இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் வாலிதான் எழுதினார்.

வாலியிடம் நேரில் சென்று பாடலுக்கான தகவல்களை கொடுத்து பாடல் வரிகளை எழுத சொல்லி இருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். வாலியும் வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில என்று பாடல் வரிகளை எழுதி இருந்தார்.

அதை ஏ.ஆர் முருகதாஸை அழைத்து அவரே பாடியும் காட்டினார். அதைக் கேட்டு அதிர்ச்சியாக அப்படியே அமர்ந்திருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். இரண்டு நிமிஷம் அவர் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்த வாலி என்னையா இது பாட்டு பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லு பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு சொல்லு அதை விட்டுட்டு செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உக்காந்துருக்க என்று கேட்கவும் இல்ல படம் முழுக்க அஜித் வாயில் வைத்து இருப்பார் அது எப்படி உங்களுக்கு தெரிந்தது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

அந்த அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் வரிகளை எழுத கூடியவராக வாலி இருந்திருக்கிறார்.

அடுத்த படம் ஏ.ஆர் முருகதாஸ் கூடதான்.. கன்ஃபார்ம் செய்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் யாவும் நல்ல வரவேற்பையே பெற்றன. அதிலும் மாவீரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இதனை தொடர்ந்து அடுத்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த செய்தியை சிவகார்த்திகேயன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.