Tag Archives: விடாமுயற்சி

என்ன தமிழ் பற்றுனு வேஷம் போடுறீங்க.. விடாமுயற்சி இயக்குனர் குறித்து பிரபலம் சொன்ன விஷயம்.!

இதற்கு முன்பு பெரிதாக அடையாளம் தெரியாத இயக்குனராக இருந்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அவர் இயக்கிய கலக தலைவன், மீகாமன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் பேசப்படும் படங்களாக இருந்தாலும் கூட அவருக்கு அது தனித்துவமான அடையாளத்தை பெற்று தரவில்லை.

இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம்தான அவருக்கு அதிக பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 6 அன்று விடாமுயற்சி திரைக்கு வர இருக்கிறது.

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக காத்திருக்கும் ஒரு திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக மகிழ் திருமேனி நிறைய பேட்டிகள் அளித்து வருகிறார்.

இப்படியாக ஒரு பேட்டியில் அவர் கூறும்போது எனக்கு தமிழின் மீது பற்று அதிகம். ஒருவேளை நான் இயக்குனராகவில்லை என்றால் இலக்கியவாதி ஆகியிருப்பேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதை விமர்சித்து பேசியுள்ளார் பத்திரிக்கையாளர் பிஸ்மி. அவர் பேசும்போது தமிழ் பற்று அதிகம் உண்டு என கூறுகிறார் மகிழ் திருமேணி. ஆனால் அசர் பைஜானில் படப்பிடிப்பு நடந்தப்போது அவரது திரைப்படத்தில் தமிழர்களையே பெரிதாக வேலைக்கு வைக்கவில்லை.

ஆந்திராவை சேர்ந்தவர்களைதான் வேலைக்கு வைத்திருக்கிறார். அவ்வளவு தமிழ் பற்று உள்ளவர் என்றால் தமிழர்களுக்குதானே அவர் வேலை வழங்கியிருக்க வேண்டும் என கேட்டுள்ளார் பிஸ்மி.

கார் ரேஸில் எனக்கு என்ன வேணும்னாலும் ஆகலாம்… அதிர்ச்சி கொடுத்த அஜித்… படம் நடிப்பது குறித்து ஏ.கே கொடுத்த அப்டேட்.!

தமிழில் மக்கள் மத்தியில் எப்போதுமே பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக அஜித் பார்க்கப்படுகிறார். தனக்கென தனி ரசிகர் மன்றம் வைத்து கொள்ளவில்லை என்றாலும் கூட லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக அஜித் இருக்கிறார்.

அதே சமயம் தொடர்ந்து அவர் இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழாக்கள் போன்ற எதற்குமே வராதது ஒரு அவமதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. ரஜினி, கமல் மாதிரியான பெரிய பெரிய நடிகர்களே ரசிகர்கள் முன்பு தோன்றும்போது அஜித் ஏன் அதை செய்வதில்லை என்றும் சிலர் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இவற்றிற்கு நடுவே அஜித்தின் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றன. ஆனால் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் திரைப்படங்களே வெளி வராமல் இருக்கிறது.

ajith

ஆனால் அதற்கு பிறகு அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துவிட்டார். இதற்கு நடுவே அஜித் கார் ரேஸில் கலந்துக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்தார். ஆனாலும் கார் ரேஸில் கலந்துக்கொள்ளாமலே இந்த திரைப்படங்களை முதலில் நடித்து கொடுத்தார்.

பிறகு அதுக்குறித்து அவர் மகிழ் திருமேனியிடம் சில விஷயங்களை கூறியுள்ளார். என்னை நம்பி தயாரிப்பாளர்கள் காசு போட்டுள்ளனர். ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நான் ரேஸுக்கு போகும்போது எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.

எனவே அதற்கு முன்பே படத்தை முடிக்க வேண்டும். கார் ரேஸில் நான் 100 சதவீதம் ஆக்ஸிலேட்டரை அழுத்த வேண்டும். 2 படம் இருக்கிறது என நினைத்து 90 சதவீதம் மட்டுமே அழுத்தினேன் என்றால் நான் ரேஸிற்கு உண்மையாக இல்லை என ஆகிவிடும் என்று கூறியுள்ளார் அஜித். இந்த விஷயத்தை மகிழ் திருமேனி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒருமுறையும்  அஜித்துக்கு நடக்கும் விசித்திர நிகழ்வு.. இந்த வாட்டியும் நடந்திருக்கு..!

1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அஜித். அப்போது துவங்கி இப்போது வரை அஜித்துக்கு சினிமாவில் இருக்கும் மார்க்கெட் என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தப்பாடில்லை.

இத்தனைக்கும் அஜித்துக்கு என்று ரசிகர் மன்றங்கள் கிடையாது. அவர் எந்த பொது நிகழ்சிக்கும், விருது வழங்கும் விழாக்களுக்கும் வருகை தர மாட்டார். அப்படி எல்லாம் இருந்தும் கூட அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் குறைவதே இல்லை.

சமீபத்தில் அஜித் கார் ரேசில் கலந்துக்கொண்டப்போது கூட அவருடைய ரசிகர்கள் அங்கும் வருகை புரிந்திருந்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒருமுறையும் அஜித்துக்கு ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் நடந்து வருவதாக  அஜித் ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதன்படி இது 2005 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக துவங்கியது. 2005 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஒரே திரைப்படம் ஜீ திரைப்படம் மட்டும்தான். இந்த திரைப்படம் பிப்ரவரி 11 அன்று வெளியானது. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்தார்.

அடுத்து 10 வருடங்கள் கழித்து 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி என்னை அறிந்தால் திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷாதான் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு மீண்டும் 10 வருடங்கள் கழித்து 6 பிப்ரவரி 2025 அன்று விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷாதான் நடித்துள்ளார்.

இதில் இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் இந்த மூன்று படங்களுமே பொங்கலுக்கு திட்டமிடப்பட்டு பிறகு சில காரணங்களால் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. எனவே அஜித்துக்கு 10 வருடத்திற்கு ஒருமுறை இப்படி நடப்பது விசித்திரமாக உள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.

வானத்தையே கிழிச்சிட்டு எவன் குதிச்சாலும்.. நம்பிக்கை விடாமுயற்சி.. பாடல் வரிகளிலேயே ஹேட்டர்ஸை வச்சி செய்த அஜித்.!

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வரும் ஒரு திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்திற்கு உருவாகி வருகிறது.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே படம் குறித்து மக்களின் ஆவல் அதிகரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார். இதனால் அதிகப்பட்ச பாடல்கள் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதே போல படத்தின் பாடலாக முதலில் வெளியான சவாத்திகா பாடல் அதிக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரைலரும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இந்த நிலையில் அந்த ட்ரைலரில் நம்பிக்கை விடாமுயற்சி என்கிற பாடல் ஓரமாக ஓடி கொண்டிருந்தது.

இந்த நிலையில் அந்த பாடல்களுக்காக ரசிகர்கள் வெகுவாக காத்திருக்க துவங்கினர். இதற்கு நடுவே அந்த பாடலும் தற்சமயம் வெளியாகியுள்ளது. எப்போதுமே அனிரூத் ரஜினிகாந்திற்குதான் சிறப்பாக இசையமைப்பார் என்று ஒரு பெயர் உண்டு.

ஆனால் அதே போல சிறப்பான இசையை அஜித்துக்கும் அமைத்துள்ளார் அனிரூத். எவ்வளவுதான் சாதனைகளை செய்தாலும் நடிகர் அஜித்தை இகழ்ந்து பேசுபவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என கூறும் விதத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது.

அஜித்தின் விதிமுறையை மீறி சம்பவம் செய்த பிரதீப் ரங்கநாதன்.. ரிலீஸ் தேதியில் வந்த பிரச்சனை.!

சில பிரபலங்கள் மட்டுமே சினிமாவில் ஒரே படத்திலேயே அதிக வரவேற்பை பெறுவார்கள். அப்படியாக தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு வரவேற்பு அதிகரித்தது. அதனை தொடர்ந்து அவரே இயக்கி கதாநாயகனாக நடித்த படம் லவ் டுடே.

லவ் டுடே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து படம் இயக்குவதை விடவும் இப்போது படங்களில் நடிப்பதன் மீது ஆர்வம் காட்டி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.கே எனும் படத்தில் நடித்து வருகிறார்.

pradeep ranganathan

மேலும் டிராகன் என்னும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த டிராகன் திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் அந்த தேதியில் விடாமுயற்சி வெளியாவதால் பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு டிராகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி வைத்துள்ளனர்.

இதனை ஒரு பதிவாக போட்ட பிரதீப் ரங்கநாதன் “ தல வந்தா தள்ளி போய்தான ஆகணும்.” என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் அஜித் ரசிகர்கள். அஜித் தன்னை அஜித் என்கிற பெயரை தவிர வேறு எந்த பெயரும் சொல்லி அழைக்க வேண்டாம் என கூறிவிட்டார்

ஆனால் இன்னமும் நீங்கள் அவரை தல என கூறி பதிவிட்டுள்ளீர்களே? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த சிக்கல் தீருற வரைக்கும் விடாமுயற்சி ரிலீஸ் கஷ்டம்தான்.. ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்த சம்பவம்..!

அஜித் ரசிகர்கள் மட்டும் பல காலங்களாக தொடர்ந்து தல படத்தின் அப்டேட் வேண்டும் என்று காத்துக்கொண்டிருப்பது நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. இதே மாதிரியான விஷயம் வலிமை படத்தின்போது நடந்ததையும் பலரும் அறிவர்.

இந்த நிலையில் அதே மாதிரியான பஞ்சாயத்துதான் இப்போது விடாமுயற்சி படத்திற்கும் நடந்துள்ளது. அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என பலரும் காத்திருந்தனர்.

vidamuyarchi

ஆனால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று படத்தின் ட்ரைலர் வெளியானது. படம் வருகிற பிப்ரவரி 6 அன்று வெளியாகும் என தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படமானது ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் கதையை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.

ஆனால்  அதற்கான காப்புரிமையை இவர்கள் பாராமௌண்ட் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திடம் வாங்காமல்  விட்டுவிட்டனர். எனவே இந்த பிரச்சனை தீரும் வரையில் படம் வெளியாவதில் சிக்கல்கள் இருக்கும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

தல ரசிகர்களுக்கு முழு ட்ரீட்.. வெளியான விடாமுயற்சி ட்ரைலர்… இதுதான் படத்தின் கதை..!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அதிக இடைவெளி விட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் விஜய் படம் இரண்டு வெளியாகிவிட்டது. ஆனால் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வராமல் இருந்தது.

போன வருடத்தின் துவக்கத்திலேயே ஆரம்பமான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக திரையரங்கிற்கு வர இருக்கிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா போன்றொர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் கதை எனன்வென்று ஓரளவு ஊகிக்கப்படுகிறது. காதலித்து வரும் நடிகை த்ரிஷாவுக்கும் அஜித்துக்கும் ஆரம்பத்தில் திருமணம் நடக்கிறது.

அஜர் பைஜானில் சாகசம்:

அதற்கு பிறகு ஒரு வேலையாக அவர்கள் அஜர்பைஜான் நாட்டிற்கு செல்கின்றனர். அஜர்பைஜான் நாட்டை பொறுத்தவரை அங்கு குற்றங்கள் குறைவாக நடக்கும் ஒரு நாடாக இருக்கிறது. ஆனால் உண்மையில் தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் அங்கு குற்றங்கள் நடக்கின்றன.

ஆனால் அந்த நாட்டு போலீஸ் அந்த விஷயத்தை வெளியில் தெரியாமல் மறைக்கின்றனர். அப்படியாக நெடுஞ்சாலையில் குற்றம் செய்யும் கும்பலை சேர்ந்தவராக அர்ஜுன் மற்றும் ரெஜுனா இருக்கின்றனர்.

இந்த நிலையில் தனி ஆளாக இந்த கும்பலிடம் சிக்கும் அஜித் எப்படி தப்பிக்கிறார். இந்த கும்பலை எப்படி வேட்டையாடுகிறார் என்பதே கதையாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் அஜித் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

 

விடாமுயற்சி போனா என்ன? நான் வரேன்.. லைகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் இயக்குனர்..

இந்த புத்தாண்டு என்பது பொதுவாக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தாலும் கூட அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இது கவலையளிக்கும் ஒரு புத்தாண்டாக அமைந்துவிட்டது.

புத்தாண்டில் முதல் நாளிலேயே விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று அறிவித்தது லைகா நிறுவனம். இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்கள் அஜித் ரசிகர்கள்.

பொதுவாகவே அஜித் திரைப்படம் என்பது குறிப்பிட்ட நாளுக்குள் வெளியாகாது என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது. கடைசியாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது.

அதற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக திரைப்படம் என்று எதுவும் அஜித் நடிப்பில் வெளியாகாமலே இருந்து வருகிறது. இந்த நிலையில் நாம் விடாமுயற்சி திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அதுவும் இப்பொழுது வெளியாகது என்று கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு நடுவே அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் இந்த விஷயம் தற்சமயம் லைக்கா நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனெனில் இன்னும் இரண்டு மாதங்களில் விடாமுயற்சி திரைப்படத்தை வெளியிடலாம் என்பதே லைக்கா நிறுவனத்தின் எண்ணமாக இருந்தது குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் பட்சத்தில் இன்னும் விடா முயற்சி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி போகும் என்பது லைக்காவின் தற்போதைய கவலையாக இருப்பதாக கூறப்படுகிறது.

திடீரென உடல் எடையை குறைத்த தல அஜித்… இதுதான் காரணம்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வெற்றி படங்களை கொடுக்கும் ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வசூல் வருவதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள்தான்,  தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு சில முக்கிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.

இந்த நிலையில் அடுத்து அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படத்தில் பார்க்கும் பொழுது அஜித் அதிகமாக உடல் எடையை குறைத்து இருப்பது தெரிகிறது.

உடல் எடையை குறைக்க காரணம்:

ajith

திடீரென்று அஜித் உடல் எடையை குறைப்பதற்கு என்ன காரணம் என்கிற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக தான் அவர்கள் உடல் எடையை குறைத்து வருகிறார் என்று ஒரு பக்கம் பேசப்பட்டது.

ஆனால் உண்மையில் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு அஜித்துக்கு பெரிதாக ஆர்வமில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு வருடத்திற்கு ஒரு திரைப்படம் அவர் நடித்தால் அதுவே பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது.

எனவே அவர் தொடர்ந்து கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் அதற்காகத்தான் உடல் எடையை குறைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜோசியம் பார்த்தே எல்லாத்தையும் முடிவு செய்யும் அஜித்… கடுப்பான நெட்டிசன்கள்.!

அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய வெற்றி படங்கள் தான் என்று கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக அஜித் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படியான வரவேற்புகள் இருந்தாலும் கூட அஜித்தின் திரைப்படங்கள் தொடர்ந்து திரைக்கு வருவது கிடையாது. சில நேரங்களில் ஒரு வருடம் கூட அஜித்தின் திரைப்படம் வெளியாகாமல் இருந்து கொண்டிருக்கிறது.

அப்படியாக 2023க்கு பிறகு இன்னமும் அஜித்தின் திரைப்படம் என்று ஒரு திரைப்படம் கூட திரையில் வெளியாகவில்லை. ஆனால் அஜித் தொடர்ந்து விடாமுயற்சி என்கிற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

அஜித்தின் விடாமுயற்சி:

ajith

அந்த படப்பிடிப்பு முடிந்து அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் விடாமுயற்சி வெளியாகாமல் இருந்தது இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

வெளியான உடனே அந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாகவே விடாமுயற்சி திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் 28ஆம் தேதி இரவு வெளியான விடாமுயற்சி டீசர் சரியாக இரவு 11.08 மணிக்கு வெளியானது.

ஏன் இப்படி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் டீசரை வெளியிட வேண்டும் என்பது பலரது கேள்வியாக இருந்தது. ஆரம்பம் முதலே அஜித்துக்கு ஜோசியம் மீது அதிக நம்பிக்கை உண்டு. படத்தின் டீசரை வெளியிடுவது முதல் படத்தை வெளியிடுவது வரை அனைத்தையும் ஜோசியக்காரர்களிடம் கேட்டு நல்ல நாளில் மட்டுமே வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இப்படி மூடநம்பிக்கைக்கு ஆதரவாக இருக்கிறாரே என்று அஜித் குறித்து பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

விடாமுயற்சிக்கு முன்னாடி இந்த ஹாலிவுட் படத்தை பாத்துருங்க.. இதோட கதைதான் விடாமுயற்சி.!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு வருடங்களாகவே நடந்து வந்தது. இதனாலேயே கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அஜித் நடிப்பில் பெரிதாக திரைப்படங்களே வெளிவராமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பலருமே இதுக்குறித்து அதிருப்தி அடைந்து வந்தனர். ஏனெனில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வந்தது. இதற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கிய மீகாமன் திரைப்படமே நல்ல ஆக்‌ஷன் ப்ளாக் திரைப்படமாக இருந்தது.

படத்தின் கதை:

இந்த நிலையில் சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் கதை ஹாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு வெளியான ப்ரேக்டவுன் திரைப்படத்தின் தழுவல்தான் இந்த திரைப்படம். ப்ரேக்டவுன் திரைப்படத்தின் கதையை பொறுத்தவரை ஒரு திருமணமான தம்பதிகள் ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்து வருகின்றனர். அப்போது கதாநாயகனின் மனைவி காணாமல் போகிறார். அதை வைத்து படத்தின் கதை செல்கிறது.

இதை அடிப்படையாக கொண்டுதான் விடாமுயற்சி படத்தின் கதையும் அமைந்துள்ளது.

வெளியான விடாமுயற்சி டீசர்.. காணாமல் போகும் அந்த நபர்.. இதுதான் கதை.. கவனிச்சீங்களா?

The teaser of the long-awaited film Vidamuyarchi starring actor Ajith has been released.

2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் திரைக்கு வராமல் இருந்து வந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடிவடைய போகும் இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் தற்சமயம் வெளியாகியிருக்கிறது.

விடாமுயற்சி திரைப்படத்தின் படபிடிப்பு பல மாதங்களாக நடந்தது. இதனால் ரசிகர்கள் பலருமே எப்பொழுது படம் வரும் என்று ஏக்கத்தில் இருந்தனர். ஆனால் அந்த ஏக்கத்தை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் டீசர் அமைந்திருக்கிறது.

கிட்டத்தட்ட இந்த திரைப்படம் பார்ப்பதற்கு ஹாலிவுட் திரைப்படம் போல இருக்கிறது. முழுக்க முழுக்க நெடுஞ்சாலைகயில் நடக்கும் ஒரு கதையாகதான் இந்த படத்தின் கதை இருக்கிறது. அஜித் மட்டுமே தனியாக நின்று போராடும் ஒரு கதைக்களமாக படத்தின் கதைகளம் அமைந்திருக்கிறது.

படத்தின் கதை:

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது பிரேக் டவுன் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் கதைதான் இந்த படம் என்று கூறப்பட்டு வந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் இதன் டீசர் அமைந்திருக்கிறது பிரேக் டவுன் திரைப்படத்தைப் பொறுத்தவரை கதாநாயகனும் அவருடைய மனைவியும் ஒரு காரில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருப்பார்கள்.

அப்பொழுது நெடுஞ்சாலையில் கார் பஞ்சாராகிவிடும். எனவே அங்கு உதவி செய்ய வரும் லாரி ட்ரைவர் டவுனுக்கு சென்று வண்டி அனுப்புவதாக கூறுவார். எனவே கதாநாயகனின் மனைவியும் அந்த நபருடன் செல்வார். பிறகு அவரது மனைவியை பற்றிய தகவலே கிடைக்காது.

அப்பொழுது நெடுஞ்சாலையில் சில மர்ம நபர்கள் கதாநாயகனின் மனைவியை கடத்தி விட்டனர் என தெரிய வரும். அவர்கள் கொடுக்கும் சில வேலைகளை செய்து முடிக்க வேண்டும் மேலும் ஒரு பெரிய தொகையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் மனைவியை விடுவோம் என்று அவர்கள் கூறி விடுவார்கள்.

இந்த நிலையில் திடீரென்று காணாமல் போன மனைவியை இந்த நெடுஞ்சாலைக்குள்ளாகவே எப்படி கதாநாயகன் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் பிரேக் டவுன் திரைப்படத்தின் கதையாக இருக்கும். கிட்டத்தட்ட அதே கதை அம்சத்தை கொண்டிருக்கும் ஒரு கதையாக விடாமுயற்சி இருக்கும் என்று டீசர் மூலம் தெருகிறது இந்த டீசர் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.