Tag Archives: அர்ஜுன்

தல ரசிகர்களுக்கு முழு ட்ரீட்.. வெளியான விடாமுயற்சி ட்ரைலர்… இதுதான் படத்தின் கதை..!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அதிக இடைவெளி விட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் விஜய் படம் இரண்டு வெளியாகிவிட்டது. ஆனால் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வராமல் இருந்தது.

போன வருடத்தின் துவக்கத்திலேயே ஆரம்பமான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக திரையரங்கிற்கு வர இருக்கிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா போன்றொர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் கதை எனன்வென்று ஓரளவு ஊகிக்கப்படுகிறது. காதலித்து வரும் நடிகை த்ரிஷாவுக்கும் அஜித்துக்கும் ஆரம்பத்தில் திருமணம் நடக்கிறது.

அஜர் பைஜானில் சாகசம்:

அதற்கு பிறகு ஒரு வேலையாக அவர்கள் அஜர்பைஜான் நாட்டிற்கு செல்கின்றனர். அஜர்பைஜான் நாட்டை பொறுத்தவரை அங்கு குற்றங்கள் குறைவாக நடக்கும் ஒரு நாடாக இருக்கிறது. ஆனால் உண்மையில் தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் அங்கு குற்றங்கள் நடக்கின்றன.

ஆனால் அந்த நாட்டு போலீஸ் அந்த விஷயத்தை வெளியில் தெரியாமல் மறைக்கின்றனர். அப்படியாக நெடுஞ்சாலையில் குற்றம் செய்யும் கும்பலை சேர்ந்தவராக அர்ஜுன் மற்றும் ரெஜுனா இருக்கின்றனர்.

இந்த நிலையில் தனி ஆளாக இந்த கும்பலிடம் சிக்கும் அஜித் எப்படி தப்பிக்கிறார். இந்த கும்பலை எப்படி வேட்டையாடுகிறார் என்பதே கதையாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் அஜித் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

 

இந்த படத்தின் காபியா அகத்தியா… இரண்டு ஜென்மங்களில் வரும் ஜீவா.. வெளியான ட்ரைலர்.!

உலகளவில் மாயாஜால திரைப்படங்களுக்கு உள்ள வரவேற்பு என்பது எப்பொழுதுமே அதிகமாக தான் இருந்து வருகிறது.

ஏனெனில் மாயாஜால திரைப்படங்கள் என்பது நாம் இதுவரை பார்க்காத புதிய புதிய விஷயங்களை காட்டுபவையாக இருக்கும். மேலும் அந்த வகை திரைப்படங்களில் என்ன வேண்டுமானாலும் கதையில் நடக்கலாம் என்கிற ஒரு விஷயமும் இருக்கும்.

தற்சமயம் தமிழில் உருவாகி வரும் திரைப்படம் அகத்தியர். இந்த திரைப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர்.

கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பா விஜய் இயக்கி வருகிறார். படம் முழுக்க முழுக்க ஒரு மாயாஜால படம் என்று கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு இடத்திற்கு ஜீவா செல்கிறார்.

ஆனால் போன ஜென்மத்தில் ஜீவாதான் அந்த இடத்தில் உரிமையாளராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நிலையில் அங்கு ஒரு பேய் இவர்களால் உருவாகி இருக்கிறது.

அது அதை அவர்களை வரவிடாமல் தடுக்கிறது. இவ்வாறு தான் படத்தின் கதை செல்கிறது. இது ட்ரெயிலரின் வழியாக மட்டுமே அறிந்த கதையாகும். ஆனால் இந்த கதையை பார்க்கும் ரசிகர்கள் பலரும் கூறும்பொழுது உலகளவில் நிறைய திரைப்படங்கள் இந்த மாதிரி வந்து விட்டன.

முன் ஜென்மத்தில் நாம் செய்த தவறு காரணமாக இந்த ஜென்மத்தில் பேய் வந்து நம்மை பழிவாங்குவதாக அந்த கதை அம்சங்கள் இருக்கும். அதே வகையில்தான் அகத்தியர் திரைப்படத்தின் கதையும் அமைந்திருக்கிறது சமீபத்தில் ஹிந்தியில் வெளியான பூல் புலாயா 3 திரைப்படத்தில் கூட கதை அம்சம் இதே மாதிரி தான் இருந்தது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

சரக்கு… ஆட்டம் பாட்டம்!.. வரவேற்பையே மாற்றி அமைத்த அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும்!..

சமீபத்தில் பிரபலங்களுக்கு நடந்த திருமணங்களில் தம்பி ராமையா மகனுக்கும், அர்ஜுன் மகளுக்கும் இடையே நடந்த திருமணம் பெரிதாக பேசப்பட்டது. அதேபோல நடிகர் பிரேம்ஜிக்கு நடந்த திருமணம் பெரிதாக பேசப்பட்டது.

பொதுவாகவே இப்பொழுது திருமணம் செய்யும் பிரபலங்கள் எல்லாம் மிகவும் எளிமையாக திருமணங்களை செய்ய தொடங்கியிருக்கின்றனர். நடிகர் பிரேம்ஜியும் மிகவும் எளிமையாகதான் அவரது திருமணத்தை செய்திருந்தார்.

எளிமையான திருமணம்:

அதேபோல நடிகர் அர்ஜுனும் திருமணத்தை எளிமையாகதான் நடத்தி இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து வரவேற்பையாவது பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற திட்டமிட்டு இருந்தார் அர்ஜுன்.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் கடந்த ஜூன் 10 ஆம் தேதி  அர்ஜுன் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடந்தது. கடந்த ஜூன் 14ஆம் தேதி இவர்களின் வரவேற்பு நடந்தது.

மது அருந்திய பிரபலங்கள்:

வரவேற்பில் அனைவருக்கும் மது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது பொதுவாக வரவேற்புகளில் மது வழங்க மாட்டார்கள். ஆனால் இது பிரபலங்கள் கூடும் வரவேற்பு ஆகும். அதிகபட்சம் சினிமா பிரபலங்கள் அனைவரும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்.

அவர்கள் எங்கு சென்றாலும் முக்கிய வழக்கமாக மது அருந்துவதை கொண்டிருப்பதால் வரவேற்பில் மது வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாட்டிலை ஓபன் செய்து கேளிக்கையை துவங்கிய உமாபதி தொடர்ந்து ஐஸ்வர்யாவுடன் நடனமாடி அசத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று ஒரு பக்கம் அவர்களை பலர் வாழ்த்தி வந்தாலும் கூட இன்னொரு பக்கம் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் இப்படி வரவேற்பில் மது வழங்குவது சரியா என்று கேட்டு மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர் 

திருமணம் முடிந்ததுமே தம்பி ராமய்யா போட்ட கண்டிஷன்!.. அதிருப்தியில் அர்ஜுன்..

தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலங்களாகவே பயணித்து வருபவர் தம்பி ராமய்யா. படங்களில் நடித்தது மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார் தம்பி ராமய்யா. ஆனால் இவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதையே முக்கிய தொழிலாக்கி கொண்டார். இதனையடுத்து வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்தார். சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமய்யா மகன் உமாபதிக்கும் இடையே திருமணம் நடைப்பெற்றது.

தம்பி ராமய்யா கண்டிஷன்:

திரைப்பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்துக்கொண்டனர். நடிகர் விஷால், சமுத்திரக்கனி, விஜயக்குமார், போன்ற சில முக்கிய பிரபலங்கள் இவர்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர். அர்ஜுன் அவரே கட்டிய அந்த ஆஞ்சினேய கோவிலில்தான் இந்த திருமணத்தை நடத்தினார்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு என்னதான் ஐஸ்வர்யா கதாநாயகியாக இருக்கிறார் என்றாலும் இனி திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க கூடாது என கூறியுள்ளார் தம்பி ராமய்யா. ஐஸ்வர்யாவும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

ஆனால் அர்ஜுன் மற்றும் பெண் வீட்டாருக்கு இந்த விதிமுறை கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஐஸ்வர்யா இதற்கு மறுப்பு தெரிவிக்காத காரணத்தினால் இது பெரும் பிரச்சனை ஆகவில்லை.

வடிவேலு அஜித் காம்போவில் எழுதின சிறப்பான கதை!.. அஜித் ஒத்துக்கல!.. இயக்குனர் சொன்ன படம் எது தெரியுமா?

சில திரைப்படங்கள் சில கதாநாயகர்களுக்கு கிடைக்காமல் போகும்போது சே அவங்க நடிச்சிருந்தா நல்லாயிருக்குமே என பலருக்கும் தோன்றும். அப்படியான சம்பவங்கள் பெரும் நடிகர்களுக்கு நிறையவே நடந்துள்ளது என கூறலாம்.

அந்த வகையில் நடிகர் அஜித்திற்கும் நிறைய வாய்ப்புகள் கை மீறி சென்றுள்ளது. உதாரணமாக பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த படம் தாமதமானதால் அஜித் அதிலிருந்து விலகினார். அதன் பிறகுதான் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்தார்.

இந்த நிலையில் தமிழில் சுந்தர் சியிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர் இயக்குனர் சுராஜ். சுந்தர் சியை போலவே இவரும் காமெடி திரைப்படங்கள் இயக்குவதில் பிரபலமானவர். இந்த நிலையில் அவரது திரைப்படங்களின் வெற்றியை பார்த்து நடிகர் அஜித்தே அவரது திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார்.

ajith

அதனை தொடர்ந்து அஜித்தின் நிர்வாகி சுராஜை தொடர்புக்கொண்டு அஜித் உங்கள் படத்தில் நடிப்பதற்கு ஆசைப்படுகிறார். உங்களிடம் அவருக்கு தகுந்தாற் போல கதை எதாவது உள்ளதா என கேட்டுள்ளனர். அந்த சமயத்தில் கை வசம் வைத்திருந்த போலீஸ் கதையை அஜித்திடம் கூறினார் சுராஜ்.

அந்த கதையை கேட்ட அஜித்திற்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு வாரம் முன்புதான் அவர் க்ரீடம் என்கிற திரைப்படத்தில் நடிக்க துவங்கியிருந்தார். அதிலும் அவர் போலீஸாவதுதான் கதையாக இருந்தது. எனவே அந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டார் அஜித்..

அதன் பிறகு அர்ஜூனிடம் அந்த கதையை கூறினார் சுராஜ். நான் டி.எஸ்.பி மாதிரியான பெரிய போலீஸாக எல்லாம் நடித்துள்ளேன். ஆனால் கான்ஸ்டபிளாக இதுவரை நடித்ததில்லை என சிரித்த அர்ஜுன் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். மருதமலை என்கிற பெயரில் வெளியான அந்த திரைப்படம் க்ரீடம் திரைப்படத்தை விடவும் அதிக வரவேற்பை பெற்றது.

தன் மேனஜருக்கு கூட கொடுக்காத சலுகையை அர்ஜுனுக்கு காட்டிய சத்யராஜ்!..

தமிழ் சினிமாவில் பைசா பாக்கியில்லாமல் கொடுத்த காசை வசூல் செய்யும் சில நடிகர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் சம்பள பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வாராம்.

படத்திற்கான முழு தொகையையும் வாங்கி கொண்டுதான் நடிக்கவே துவங்குவார் சத்யராஜ் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சம்பள விஷயத்தில் மிகவும் கரரான ஆளாக அவர் இருந்துள்ளார். அவரது மேனஜர் சத்யராஜை வைத்து நடிகன் மாதிரியான சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

sathyaraj

அந்த திரைப்படங்களில் நடித்து சத்யராஜும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தனது சொந்த மேனஜர் படம் தயாரித்தப்போதும் கூட சம்பள பணத்தை சரியாக பெற்றுக்கொண்டார் நடிகர் சத்யராஜ்.

இப்படி இருக்கும் நிலையில் தற்சமயம் சத்யராஜ் அர்ஜுன் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் அர்ஜுனின் மகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு 50 லட்சம்தான் சம்பளமாக வாங்கியுள்ளாராம் சத்யராஜ்.

தற்சமயம் மார்க்கெட் விலைப்படி சத்யராஜ் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறாராம். இந்த நிலையில் அர்ஜுன் தனது நண்பன் என்கிற காரணத்தால் இந்த அளவிற்கு குறைவான தொகைக்கு நடித்து கொடுத்துள்ளார் சத்யராஜ்.

அந்த படத்தோட பேருக்கு ஏன் சர்ச்சையை கிளப்பினாங்கன்னு இன்னமும் எனக்கு தெரியல!.. நல்ல பேர்தானப்பா!.. வருந்திய அர்ஜுன்..

Actor Arjun : தமிழில் ஆக்ஷன் கிங், தென்னிந்திய புரூஸ்லீ என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கான வரவேற்பு என்பது எக்கச்சக்கமாக இருந்தது என்று கூறலாம்.

இளமை காலங்களில் அவரது சண்டை காட்சிகள் பிரபலமானதாக இருந்தன ஒருமுறை நடிகர் சிவாஜி கணேசனே அர்ஜுனின் சண்டை காட்சிகளை பார்த்து வியந்து அவரை பாராட்டியதாக அர்ஜுன் ஒருமுறை கூறியிருக்கிறார்.

Arjun At The ‘Kolaigaran’ Press Meet

அந்த அளவிற்கு அர்ஜுனுக்கு மார்க்கெட் இருந்தது போகப் போக அவருக்கான மார்க்கெட் குறைய தொடங்கியது. ஆனாலும் இப்போது வரை தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் அர்ஜுன்.

பெயரில் வந்த பிரச்சனை:

இவர் நடிப்பது மட்டுமின்றி இயக்குனராகவும் இருந்திருக்கிறார் இயக்குனராக இவர் இயக்கிய திரைப்படம்தான் ஜெய்ஹிந்த்.இந்த திரைப்படம் குறித்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் அர்ஜுன்.

அவர் இயக்கிய ஜெய்ஹிந்த் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற திரைப்படமாக இருந்தது. அந்த திரைப்படத்தை வெளியிட இருக்கும் பொழுது வரிவிதிப்புகளில் சில பிரச்சினைகள் இருந்தன. ஏன் இப்படி பிரச்சினைகள் இருக்கின்றன என கேட்ட பொழுது ஜெய் ஹிந்த் என்பது தமிழ் பெயர் கிடையாது.

????????????????????????????????????????????????????????????

தமிழ் பெயர் அல்லாத திரைப்படங்களுக்கு வரி விஷயத்தில் எந்த மாற்றமும் செய்து தர மாட்டோம் என்று கூறிவிட்டனர். அப்பொழுது பேசிய அர்ஜுன் ஜெய்ஹிந்த் என்பது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கூறக்கூடிய கூற வேண்டிய ஒரு முக்கியமான வசனம் ஆகும்.

அதை நீங்கள் மொழிவாரியாக பிரித்து பார்க்க கூடாது என்று அர்ஜுன் கூறியும் கூட அவர்கள் கேட்கவில்லை இதனை பேட்டியில் கூறும் அர்ஜுன் இப்போது வரை அந்த திரைப்படத்தின் பெயருக்கு அவ்வளவு விமர்சனங்கள் வந்தது எதற்காக என்று எனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார் அர்ஜுன்.

தயாரிப்பாளர் செய்த அலப்பறையால் பட வாய்ப்பை இழந்த சரத்குமார்!.. கடைசியில் அர்ஜுன் நடிச்சி ஹிட்!.

Sarathkumar Arjun : தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட்டில் படம் எடுத்து பெரிய வெற்றியை கொடுக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர் பெரும்பாலும் சங்கர் இயக்கம் திரைப்படங்களுக்கு தென்னிந்திய சினிமாவில் அதிக வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருப்பதுண்டு.

ஏனெனில் பெரிய பட்ஜெட் என்பதையும் தாண்டி அவரது திரைப்படங்களில் சமூகம் சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் பேசப்பட்டிருக்கும். மேலும் அவரது திரைப்படங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெறக்கூடியவை. அந்நியன், சிவாஜி மாதிரியான திரைப்படங்கள் வெளியான காலகட்டத்தில் ஷங்கருக்கு இருந்த மதிப்பே தனி என்று கூறலாம்.

director shankar

ஷங்கர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் ஜென்டில்மேன் திரைப்படம் கூட அரசியல் பேசும் ஒரு திரைப்படமாகதான் இருந்தது. இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சரத்குமார்தான். சரத்குமாருக்கு தகுந்தார் போல ஏற்கனவே திரைக்கதை முதல் எல்லாமே எழுதப்பட்ட நிலையில் திடீரென சரத்குமாருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

விலகிய சரத்குமார்:

இதனை அடுத்து அந்த திரைப்படத்திலிருந்து விலகினார் சரத்குமார். இது ஷங்கருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. படத்தின் மொத்த காட்சிகளையும் சரத்குமாரை வைத்து கற்பனை செய்து இருந்தார் ஷங்கர். இந்த நிலையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஒரு குழப்பத்தில் இருக்கும் பொழுதுதான் பக்கத்து திரையரங்கில் அர்ஜுன் நடித்த ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

sarathkumar

அதனை சென்று பார்த்த ஷங்கர் அர்ஜுன் ஓரளவு இந்த திரைப்படத்திற்கு சரியாக இருப்பார் என்று முடிவு செய்தார். பிறகு அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் பெரும் வெற்றியை கொடுத்தது. ஆனால் சரத்குமார் அப்படிப்பட்ட பெரும்படத்தின் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். ஒருவேளை சரத்குமார் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் முதல்வன் திரைப்படத்திலும் நடிப்பதற்கு சரத்குமாருக்கு வாய்ப்பு கிடைத்து இருந்திருக்கும்.

அந்த ரகசியம் எப்படி வெளியானுச்சுன்னு எனக்கும் தெரியல!.. இயக்குனர்தான் சொல்லணும்!.. அர்ஜுனுக்கு நடந்த சம்பவம்…

Actor Arjun : தமிழ் சினிமாவில் பல வருடங்களாகியும் வயதாகாமல் இருக்கும் சில நடிகர்களில் நடிகர் அர்ஜுனும் ஒருவர். தென்னகத்து புரூஸ்லி ஆக்ஷன் கிங் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் அர்ஜுன். அவரது இளமை காலங்களில் நிறைய படங்களில் சிறப்பாக சண்டை காட்சிகளில் நடித்திருப்பார்.

அதனால்தான் அவருக்கு அந்த ஆக்ஷன் கிங் என்கிற பெயரே வந்தது அப்போதிலிருந்து இப்போது வரை சரியாக உடற்பயிற்சி செய்து வயது தெரியாமல் தன்னை காட்டி வருகிறார் அர்ஜுன். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் இன்னமும் கிடைத்து வருகிறது. 1990 க்கு பிறகு அர்ஜுனுக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

Arjun At The ‘Kolaigaran’ Press Meet

அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் முதல்வன், ஜென்டில்மேன், ஜெய் ஹிந்த் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்கள் சினிமாவிற்கு வர துவங்கிய பிறகு அர்ஜுனுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

அர்ஜுனுக்கு நடந்த சம்பவம்:

இருந்தாலும் கிரி, மருதமலை, ஏழுமலை போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார் அர்ஜுன். இந்த நிலையில் அர்ஜுனுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக மங்காத்தா திரைப்படம் அமைந்தது. மங்காத்தா திரைப்படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருந்தார் அர்ஜுன்.

அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் அவருக்கு கிடைத்ததால் தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கிரி திரைப்படத்தில் உள்ள காமெடிகள் குறித்து அர்ஜுன் பேசும்போது நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அர்ஜுனை பொருத்தவரை கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் என்று தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முக்கிய காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது கிரி திரைப்படத்தில் தனது அக்கா குறித்த ரகசியத்தை வடிவேலு கூறிய பிறகு மறுநாளே அது ஊருக்கே தெரிந்திருக்கும். ஆனால் அர்ஜுன் இரவு முழுவதும் வடிவேலுவுடன் தான் உறங்கி இருப்பார். பிறகு எப்படி அந்த செய்தி வெளியே வந்தது என்று அந்த படம் வெளியான பிறகு பலரும் அர்ஜுனிடம் கேட்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் இயக்குனரே அந்த காட்சிக்கு விளக்கம் கொடுக்கவில்லை. அதனால் எனக்கு அந்த செய்தி எப்படி வெளியில் வந்தது என்பது தெரியாது என்று தனது பேட்டியில் கூறியிருக்கிறார் அர்ஜுன். மேலும் திரைப்படங்களில் காமெடி நடிகர்களுடன் நடிக்கும் போது அர்ஜுனுக்கு அதிகமாக சிரிப்பு வந்துவிடும் இதன் காரணமாக அந்த காட்சிகள் திரும்பத் திரும்ப எடுக்கப்படும் என்று அவர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

ரஜினியின் அடுத்த படத்தில் கூட்டு சேரும் ஆக்‌ஷன் கிங்!.. மங்காத்தா லெவல் இருக்குமோ..

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்சமயம் கேரளாவில் நடைப்பெற்று வருகிறது.

என்கவுண்டருக்கு எதிராக இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த திரைப்படம் குறித்து இப்போதே மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் எப்படியும் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிகர் அர்ஜூனும் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறகனவே அர்ஜுன் லியோ திரைப்படத்தில் நடிப்பதே அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதில் அவரே ரஜினிகாந்த் படத்திலும் நடிக்கிறார் என்னும் செய்தி இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை மங்காத்தா திரைப்படத்தில் வருவது போல ரஜினியும் அர்ஜுனும் காம்போ போட்டு நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

இயக்குனரே சொன்னாலும் விஜய் செஞ்ச அந்த விஷயத்தை அர்ஜூன் செய்ய மாட்டார்!.. அப்படி ஒரு கொள்கை..

தமிழில் வெகு காலங்களாக நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் சினிமாவிற்கு மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். அவர் சினிமாவிற்கு வந்தது முதல் இப்போது வரை தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் காரணத்தினால் அவரது வயது பெரிதாக வெளியில் தெரியாது.

இப்போதும் கூட சண்டை காட்சிகளில் பறந்து பறந்து சண்டை போடும் அளவிற்கு அவரது உடலை சரியாக வைத்துள்ளார் அர்ஜுன். மங்காத்தா திரைப்படம் அர்ஜுனுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரத் துவங்கின சில திரைப்படங்களில் அவருக்கு வில்லன் வாய்ப்புகளும் வந்தன.

ஹீரோ மாதிரியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்சமயம் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .இவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது கெட்ட வார்த்தை மற்றும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளை பேசமாட்டேன்.

ஏனெனில் குடும்பங்கள் அனைவரும் சேர்ந்துதான் ஒரு திரைப்படத்தை பார்ப்பார்கள். அவர்கள் முகம் சுளிக்கும் வகையில் எந்த ஒரு காட்சியும் எனது நடிப்பில் இருக்கக் கூடாது என்று நான் நினைப்பேன். எனவே இயக்குனரே சொன்னாலும் கூட அந்த மாதிரியான காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் அர்ஜுன். தற்சமயம் விஜய் லியோ படத்தின் டிரைலரில் கெட்ட வார்த்தை பேசி நடித்திருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் இந்த நேரத்தில் அர்ஜுனின் இந்த பேட்டி வைரல் ஆகி வருகிறது..

அர்ஜுனும் விஜய்யும் அண்ணன் தம்பியா!.. லியோவில் லோகேஷ் வைத்த சர்ப்ரைஸ்..

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு முன்பு அவர் கொடுத்த ஹிட் படங்களே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் நிறைய முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். அதில் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் லியோ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கள் வந்ததிலிருந்து ஒரு புதிய அனுமானம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அர்ஜுனின் பெயர் ஹரால்டு தாஸ் என்பது அவரது பிறந்தநாள் அன்று வெளியான வீடியோ மூலமாக தெரிந்தது.

இந்த நிலையின் லியோவின் இரண்டாவது பாடலில் விஜய்யின் பெயர் லியோதாஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே லியோ தாஸும் ஹெரால்டு தாஸும் அண்ணன் தம்பிகளாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம் வந்துள்ளது. அப்படியே இருக்கும் பட்சத்தில் இந்த படம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பலரும் இதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.