Tag Archives: விடாமுயற்சி

உங்கள கேட்க ஆள் இல்லாமல்தான் இப்படி பண்றீங்க!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய த்ரிஷா!..

Trisha: கோலிவுட்டில் உள்ள சினிமா நடிகைகளிலேயே சற்று வீரமான நடிகை என்றால் த்ரிஷாவை கூறலாம். த்ரிஷா தன்னுடைய 16 வயதியிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பிரபலமான அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் த்ரிஷா.

பொதுவாகவே நடிகைகள் இளமை குறைய குறைய சினிமாவில் அவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைய துவங்கிவிடும். அதே போலத்தான் த்ரிஷாவிற்கும் வாய்ப்புகள் குறைய துவங்கின. ஆனாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவிற்கு சினிமாவில் ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது.

trisha

அதற்கு முன்பு த்ரிஷாவை 90ஸ் கிட்ஸ் எப்படி அழகாக பார்த்தார்களோ அதே அழகில் அவரை கண்முன் நிறுத்தினார் இயக்குனர் மணிரத்தினம். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் த்ரிஷாவிற்கு வாய்ப்புகள் வர துவங்கின.

த்ரிஷாவின் பதிவு:

அதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். மேலும் விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. சீக்கிரத்தில் நயன் தாராவின் இடத்தை த்ரிஷா பிடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடிக்கடி த்ரிஷா குறித்து ஏதாவது பிரச்சனை என்பது வந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே மன்சூர் அலிக்கானில் துவங்கி பலரும் த்ரிஷா குறித்து சர்ச்சையை கிளப்பினர்.

ஒவ்வொரு முறை சர்ச்சை கிளம்பும்போதும் அதற்கு எதிராக தனது பதிலை ஆணித்தரமாக முன் வைத்து வந்தார் த்ரிஷா. இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில் அவர் கூறும்போது சமூக ஊடகங்களில் இருக்கும் பலரும் அவமரியாதை செய்வதையே வேலையாக கொண்டுள்ளனர்.

யாரும் அவர்களை அதற்காக எதுவும் செய்ய முடியாது என்கிற தைரியத்தில் இதை செய்கின்றனர் என நேரடியாகவே பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கமல் படத்தை கை மாத்தியாச்சி!.. அடுத்து அஜித்தா!.. நெருக்கடியில் லைகா நிறுவனம் எடுக்கும் முடிவுகள்!..

Lyca Production : தொடர்ந்து பெரிய படங்களாக தயாரித்து வந்ததால் தற்சமயம் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது லைக்கா நிறுவனம். தமிழ் சினிமாவில் பெரும் திரைப்படங்களை எடுக்கும் நிறுவனங்களில் லைக்கா நிறுவனம் முக்கியமான நிறுவனம் ஆகும்.

வெளிநாடுகளில் தொழிலதிபராக இருந்து வரும் சுபாஸ்கரன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் தமிழ் படங்கள் அதிகபட்சம் சன் பிக்சர்ஸ் அல்லது லைக்கா நிறுவனத்தின் மூலமாகத்தான் எடுக்கப்பட்டு வருகின்றன.

lyca

இந்த நிலையில் நிறைய திரைப்படங்களில் ஒரே நேரத்தில் கமிட் ஆனதால் தற்சமயம் சிக்கலில் சிக்கியிருக்கிறது லைக்கா நிறுவனம். அஜித் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடா முயற்சி. இந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்கமாக செலவாகி வருகிறது இதற்கு நடுவே நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

சிக்கலில் லைக்கா நிறுவனம்:

இவை மட்டும் இல்லாமல் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் ஆகிய திரைப்படங்களையும் தயாரித்து வருகின்றன. இந்த மூன்று திரைப்படங்களுக்குமே எக்கச்சக்கமான செலவுகள் ஆகி வருவதால் தற்சமயம் திரைப்படம் தயாரிப்பதிலேயே லைக்கா நிறுவனத்திற்கு தொய்வு ஏற்பட்டுள்ளது என்று கூற வேண்டும்.

indian-2

ஏற்கனவே இந்தியன் திரைப்படத்தின் தயாரிப்பு செலவை தாங்க முடியாமல் லைக்கா நிறுவனம் தற்சமயம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் கூட்டணி போட்டு அந்த படத்தை தயாரித்து வருகிறது. இதற்கு நடுவே விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே வேட்டையன் திரைப்படத்தை முழுவதுமாக தயாரித்து வெளியிட்ட பிறகு அதில் வரும் லாபத்தை வைத்து விடாமுயற்சி படத்தை தொடரலாம் என்று நினைத்தனர்.

ஆனால் ஜூலை மாதத்திற்கு பிறகு அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறியிருப்பதால் அதற்கு முன்பு விடாமுயற்சி திரைப்படத்தை முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தற்சமயம் போனி கபூரிடம் இதற்காக உதவி கேட்டிருக்கிறதாம் லைக்கா நிறுவனம். எனவே இதில் இணை தயாரிப்பாளராக போனிகபுரும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ளன.

தீபாவளி வரைக்கும் அஜித் படத்தின் படப்பிடிப்பு கிடையாது!.. ரஜினியால் தடைப்பட்டு போன விடாமுயற்சி படப்பிடிப்பு!.

Vidamuyarchi : தமிழ்சினிமாவில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இருந்து வருகிறது. லைக்கா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். அதனால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு அவரால் எளிமையாக தயாரிப்பு செலவுகளை செய்ய முடிகிறது.

சினிமாவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒரு பெரும் படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அது நல்ல வெற்றியை கொடுக்கவில்லை என்றால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல படத்திற்கான கால்ஷீட் தாண்டி அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் அது தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் இந்த இரண்டு பிரச்சனைகளையும் சந்தித்து வரும் நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருக்கிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான லால் சலாம் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அந்த படத்திற்கு தயாரிப்பு செலவு செய்த தொகையை கூட திரைப்படம் வசூல் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

சிக்கலில் லைகா நிறுவனம்

இதிலேயே லைக்கா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தை படமாக்குகிறேன் என்று வெகு நாட்களாக அந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஆனால் இன்னமும் படப்பிடிப்பை முடித்த பாடில்லை.

Vettaiyan

அதே போல கிட்டத்தட்ட 8 மாதங்களாக வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தீபாவளிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெருந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது லைகா நிறுவனம்.

இதனையடுத்து வேட்டையன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என நம்பியுள்ளது லைகா. எனவே முதலில் தீபாவளிக்கு வேட்டையன் திரைப்படத்தை வெளியிடுவோம். பிறகு அந்த லாபத்தை வைத்து விடாமுயற்சி படப்பிடிப்பை நடத்தலாம் என முடிவெடுத்துள்ளனர்.

தயாரிப்பாளருக்காகதான் அந்த முடிவை எடுத்தேன்!.. அஜித் பத்திரிக்கைகள் முன்னாடி வராததுக்கு இதுதான் காரணம்!..

Actor Ajith : தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும் கூட அவர் ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடிப்பது என்பதே கடினமான விஷயமாக இருக்கிறது.

ஏனெனில் சினிமாவை தாண்டி தற்சமயம் உலகைச் சுற்றி வருவதிலையே அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். இதற்காக சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெற்று பல நாடுகளுக்கு தனது இரு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து வருகிறார். அஜித்.

இதற்கு நடுவில்தான் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஜித் பல வருடங்களாக எந்த ஒரு பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுப்பது கிடையாது. எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கோ விருது வழங்கும் விழாவிற்கோ அவர் வந்ததே கிடையாது.

ajith-1

இதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு எந்த வித விருதுகளும் வழங்கப்படுவதும் கிடையாது இது குறித்து அஜித்துடன் பணிபுரிந்த இயக்குனர் சரண் கூறும் பொழுது எப்படி ஒரு மனிதன் சினிமாவில் இப்படி வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு பிரபலமாக இருக்க முடியும் என்று முதலில் நான் யோசித்தேன்.

பிறகு இது குறித்து நான் அஜித்திடம் கேட்ட பொழுது ஒரு தயாரிப்பாளருக்கு விசுவாசமாகத்தான் இதை நான் செய்கிறேன் என்று அஜித் கூறினார். ஏனெனில் எந்த ஒரு பொதுவெளிக்கும் வராமல் திரையில் நான் வெளிப்படும் பொழுது மக்களுக்கு அது ஆரவாரமான விஷயமாக இருக்கும் அதனால் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

என்னை எப்போதும் மக்களால் பார்க்க முடிந்தால் திரைப்படங்களில் அவர்களுக்கு எதிர்பார்ப்பு குறைந்து விடும் எனவேதான் நான் வெளியில் வருவதில்லை என்று அஜித் கூறியதாக இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் பத்திரிகைகள் தொடர்ந்து அஜித்தை விமர்சித்து எழுதியதால்தான் அஜித் அவர்களுக்கு முன்பு தோன்றுவதில்லை என்பது மக்கள் கருத்தாக இருக்கிறது.

நல்லது செய்றதுக்காக எல்லாரும் அரசியலுக்கு வரணும்னு அவசியம் இல்ல – கெத்து காட்டி பேசிய தல அஜித்!.

Actor Ajith: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் அஜித்தும் முக்கியமானவர். சினிமாவில் பல காலங்களாக அஜித் ஒரு செல்வாக்குமிக்க நடிகராக இருந்து வருகிறார். சினிமா நடிகராக இருந்து ஒரு பேட்டி கூட கொடுப்பதில்லை என்றாலும் கூட அஜித் படத்திற்கான வரவேற்பு என்பது மட்டும் குறைவதே இல்லை.

அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஆதரவையும் கொண்டுள்ளார் அஜித். துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு திரைப்படங்கள் நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி விட்டு உலகை சுற்ற சென்றுவிட்டார் அஜித். அதனால் அவரது அடுத்த படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிகிறது. அடுத்ததாக அஜித் எந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பற்றி இன்னும் பெரிதாக தகவல்கள் வரவில்லை.

ajith

இந்த நிலையில் தற்சமயம் விஜய் அரசியலுக்கு வந்துள்ள செய்திதான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ளார். இந்த கட்சி வருகிற 2026 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார் விஜய்.

இந்த நிலையில் தற்சமயம் அஜித் அரசியல் குறித்து பேசியிருந்த ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது அதில் அஜித் பேசும்போது அனைவருமே அரசியலுக்கு வந்துதான் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

ஒவ்வொரு குடிமகனும் தங்களது பணியை சரியாக செய்தாலே நாடு நல்லப்படியாக இருக்கும் என கூறியிருந்தார். இந்த வீடியோவை தற்சமயம் விஜய் ரசிகர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

சும்மா உக்காந்து இருக்குறதுக்கு 50 லட்சமா!.. விடாமுயற்சி படப்பிடிப்பு பரிதாபங்கள்!..

Vidamuyarchi Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தில் நடிக்காமல் உலகச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார் அஜித். அதனை அடுத்து ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பல நாடுகளையும் சுற்றி வந்தார் அஜித்.

சொல்ல போனால் நடிப்பை காட்டிலும் அஜித்திற்கு இப்படி பயணம் செல்வதில்தான் ஆர்வம் அதிகம் என்றாலும் தன்னுடைய தொழிலையும் கொஞ்சம் பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடித்துக் கொண்டு வருகிறார்.

இதனால் சினிமாவில் இருக்கும் போட்டியில் இருந்து அஜித் விலகிவிட்டார் என்று கூறவேண்டும் ஏனெனில் இந்த இடைவெளியில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து அது வெளியாகி வெற்றியும் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

vidamuyarchi

இந்த படம் பெரும் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. 12ஆம் தேதி படப்பிடிப்பிற்காக அங்கு அனைவரும் சென்று விட்டனர். இருந்தாலும் படப்பிடிப்பு துவங்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் அங்கு சென்றவர்கள் அனைவரும் இன்னும் நடிக்க துவங்கவில்லையாம்.

இருந்தாலும் அவர்களுக்கான சம்பளம் மட்டும் கொடுக்கப்பட்டு வருகின்றன ஒரு நாளைக்கு செலவு மட்டும் 50 லட்சம் வரை ஆகிறது என்று கூறப்படுகிறது இது ஒரு படபிடிப்பிற்கான அதிகபட்ச செலவாகும். எனவே இந்த வேலையும் பார்க்காமலேயே அங்கு சென்ற நடிகர்கள் தினசரி சம்பளம் வாங்கி வருகின்றனர். இவ்வளவு செலவுகள் செய்து அந்த படம் வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற சூழ்நிலை தற்சமயம் உருவாகியுள்ளது.

பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ!.. மகிழ் திருமேனிக்கு வார்னிங் கொடுத்த அஜித்!..

Actor Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதும் இருசக்கர வாகனத்திலேயே சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற யோசனையுடன் தனது பயணத்தை தொடங்கினார் அஜித். இதற்கு நடுவே இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்திற்காக விடாமுயற்சி படத்தின் கதையை எழுதி வைத்துவிட்டு காத்திருந்தார்.

அஜித் வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு இடையில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து விட்டது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்திற்கு போட்டியாக அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க துபாயில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் கதை தான் நிர்ணயித்த மாதிரி செல்ல வேண்டும் என்பது மகிழ் திருமேனியின் ஆசையாக இருக்கிறது. ஆனால் பெரிய கதாநாயகர்களை பொருத்தவரை படத்தில் அவர்களுக்கு தகுந்தார் போல மாற்றங்களை அவர்கள் ஏற்படுத்துவார்கள்.

ajith-1

ஆனால் அஜித் அந்த மாதிரியான விஷயங்களை செய்வதற்கு மகிழ் திருமேனி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கொஞ்சம் பிரச்சனை இருந்து வருகிறதாம். மேலும் பிப்ரவரி மாதம் வரையில்தான் விடா முயற்சிக்கான கால் சீட்டை கொடுத்திருக்கிறார் அஜித்.

ஆனால் ஜனவரியை வந்துவிட்ட நிலையில் படத்திற்கான படப்பிடிப்பை தான் முடித்திருக்கிறார் மகிழ்திருமேனி. எனவே அவரை அழைத்து அடுத்த மாதத்திற்கு மேல் என்னால் ஒரு நாள் கூட கால் சீட்டு கொடுக்க முடியாது அதற்குள் மொத்த படத்தையும் எடுத்து விடுங்கள் என்று எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார் அஜித்.

விடாமுயற்சியின் கதை இதுதான்… அந்த ஹாலிவுட் பட கதை மாதிரி இருக்கே!..

Actor Ajith Vidamuyarchi :  துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி இந்த படம் தூங்குவதற்கு முன்பே படத்திருக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டு விட்டது.

வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்த திரைப்படம் லியோ. லியோ படமும் தற்சமயம் வெளியாகி அதற்கு அடுத்த படத்திற்கு விஜய் நடிக்க சென்ற பின்பும் அஜித் மட்டும் இப்பொழுதுதான் விடாமுயற்சியின் படபிடிப்பிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏனெனில் துணிவு படம் முடிந்து சில நாட்கள் அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விட்டார். இந்த நிலையில் இந்த படத்தின் கதை  தற்சமயம் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. முதலில்  இயக்குனர் மகிழ்திருமேனி அதிக ரத்த காட்சிகளை கொண்ட ஒரு படத்தின் கதையைதான் கூறியுள்ளார்.

ajith-1

ஆனால் அது அஜித்திற்கு பிடிக்கவில்லை அதனை தொடர்ந்து ஒரு குடும்ப கதையை ஒட்டிய ஆக்‌ஷன் கதையை கூறியுள்ளார். அதாவது அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர்.

அப்படி செல்லும் பொழுது ஒரு அடையாளம் தெரியாத குழுவிடம் சிக்கிக் கொள்கிறார் திரிஷா. அவரை விடுவிப்பதற்காக அஜித் எடுக்கும் முயற்சிகளே இந்த படத்தின் கதை ஆகும். படக்கதைப்படி வெளிநாட்டில் அஜித் இருப்பதால் யாரையும் தெரியாது என்பதாலும் தனியாக அவர் போராடுவதே கதையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஏற்கனவே ஹாலிவுட் வந்த கதை தானே தமிழில் கூட இந்த மாதிரி கதைகள் நிறைய வந்துள்ளது என்று பேச்சுக்கள் இருக்கின்றன ஆனால் மகிழ்திருமேனி இயக்கத்தில் அந்த படத்தின் திரைக்கதை வேறு விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறத

விடாமுயற்சியில் இரண்டு அஜித்!.. தளபதி 68 உடன் நேரடி மோதலா?..

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படம் விடாமுயற்சி. இந்த படம் லியோ படத்திற்கு போட்டியாக தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் அஜித் உலக சுற்றுலா சென்றதன் காரணமாக இந்த படம் தாமதமானது.

லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து அந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்சமயம் விஜய்யின் அடுத்த படத்தோடு போட்டி போட முடிவு செய்துள்ளது விடாமுயற்சி குழு. விஜய் அடுத்து வெங்கட் பிரபுவுடன் நடிக்கும் திரைப்படத்தில் மொத்தம் இரண்டு விஜய் கதாபாத்திரங்கள் என கூறப்பட்டுள்ளது.

எனவே கதாநாயகிகளும் இரண்டு பேர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திலும் இரண்டு அஜித் கதாபாத்திரங்கள் என கூறப்படுகிறது. இந்த படத்திலும் இரண்டு கதாநாயகிகள் இருக்கின்றனர்.

எனவே ஒருவேளை விடாமுயற்சி தளபதி 68ம் ஒன்றாக பொங்கலை முன்னிட்டு வெளியானால் அது ஒரு கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே துணிவும் வாரிசு திரைப்படமும் சேர்ந்து வெளியான பொழுது அது தமிழ் சினிமாவிலேயே பெரும் போட்டியை ஏற்படுத்தியது.

இப்படி இவர்கள் இருவரும் போட்டுக் போட்டி போட்டுக் கொள்ளும் நாளில் வேறு எந்த திரைப்படமும் வெளியிட முடியாது என்பதும் முக்கியமான விஷயமாகும். ஆனால் இரண்டு திரைப்படத்திலுமே டபுள் ஆக்டிங் என்னும் பொழுது அது போட்டியை இன்னும் வீரியமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்  அஜித்  ரஜினி நேரடி போட்டி.. பொங்கலுக்கு இருக்கு சம்பவம்!.. இதை எதிர்பார்க்கல..

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான போட்டி நடிகர்களாக விஜய் மற்றும் அஜித் இருவரும் இருக்கின்றனர். கடந்த பொங்கல் அன்று வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிட்டு இருவரும் போட்டி போட்டுக் கொண்டனர்  என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே.

இந்த நிலையில் இந்த போட்டிக்குள் ரஜினியும் தற்சமயம் நுழைந்துள்ளார் ஏனெனில் பல இடங்களில் விஜய்யை சிலர் சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட்டது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே இவர்கள் இருவருக்கும் நடுவில் ரஜினியும் போட்டி போட இருக்கிறார் என்று பேச்சுக்கள் உள்ளன. அதற்கு தகுந்தார் போல மூன்று நடிகர்களுமே தற்சமயம் வரிசையாக படத்தில் கமிட் ஆகியுள்ளனர். விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அதேபோல ரஜினி இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினி மற்றும் விஜய்யின் படப்பிடிப்புகள் தாமதமாக தான் துவங்கின. ஆனால் இயக்குனர் ஞானவேலை பொறுத்தவரை 45 நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

அப்படி முடிக்கும் பட்சத்தில் பொங்கலுக்கு ரஜினியின் திரைப்படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே வரும் பொங்கல் அன்று ரஜினி, விஜய், அஜித் மூவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி போட்டி போட வாய்ப்புள்ளதாக சினி வட்டாரங்களில் பேச்சுக்கள் உள்ளன.

விடாமுயற்சிக்கு வெயிட் பண்ணியே காலாவதி ஆயிடுவேன் போல.. கடுப்பில் இருக்கும் இயக்குனர்…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித் குமார், நடிகர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக அஜித் இருக்கிறார்.

ஆனால் அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வது போல தெரியவில்லை. துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தது லைக்கா நிறுவனம். இந்த படத்திற்கு கதை எழுதினார் விக்னேஷ் சிவன். ஆனால் அஜித்திற்கு அந்த கதை பிடிக்காத காரணத்தால் அவரை படத்தில் இருந்து எடுத்துவிட்டு மகிழ் திருமேணியை இயக்குனராக அறிமுகப்படுத்தினர்.

ஆனால் இந்த சமயம் பார்த்து வெளிநாடுகளுக்கு டூர் சென்ற அஜித்குமார் இப்போது வரை படம் நடிக்கவே வரவில்லை. படக்குழுவில் துவங்கி இயக்குனர் வரை அனைவரும் அஜித்திற்காக காத்துக்கொண்டுள்ளனர்.

எனவே விடாமுயற்சி திரைப்படம் படமாக்கப்படுமா என்பதே தற்சமயம் கேள்விக்குரியான விஷயமாக உள்ளது. ரசிகர்கள் முதல் இயக்குனர் வரை அனைவரும் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.