Tag Archives: அஜித்குமார்

வெளியான AK Anthem பாடல்.. பட ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களுக்கு ட்ரீட்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஐந்து டாப் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முக்கிய நடிகராக நடிகர் அஜித்குமார் இருப்பார்.

அஜித் குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்ளாத நடிகராக இருந்தாலும் கூட தமிழில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரு நட்சத்திரமாக அவர் இருந்து வருகிறார்.

அதேசமயம் தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு, ”திரைப்படங்கள் மீது அதிக ஆர்வம் காட்டாமல் வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறி வருபவராக அஜித் இருந்து வருகிறார்”.

ajith

சமீபத்தில் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு கொடுத்த அறிவுரை அதிக ட்ரெண்டாகி வந்தது. இந்த நிலையில் தற்சமயம் அஜித்குமார் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

இந்த திரைப்படத்திலும் கார் தொடர்பான காட்சிகள் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்திற்காக அதிக காத்திருப்புடன் இருக்கின்றனர் இந்த நிலையில் சமீபத்தில் அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொண்டதை போற்றும் வகையில் லைக்கா நிறுவனம் அஜித்திற்காக ஒரு பாடல் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த பாடல் வரவேற்பை பெற்று வருகிறது.

முன்பதிவுலேயே போட்ட காசை எடுத்த விடாமுயற்சி..! இத்தனை லட்சம் டிக்கெட் விற்பனையா?

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரு படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது.

பைக் ரேஸ், சுற்றுலா என பல இடர்பாடுகளுக்கு நடுவேதான் விடாமுயற்சி திரைப்படம் உருவானது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது.

ஹாலிவுட்டில் வெளியான ப்ரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் ரீமேக்தான் விடாமுயற்சி என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ப்ரேக் டவுன் திரைப்படத்தில் நெடுஞ்சாலையில் காணாமல் போன தனது மனைவியை கண்டுப்பிடிப்பதே கதையாக இருக்கிறது.

அதே போல கதைதான் விடாமுயற்சியின் கதையும் இருக்கும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. பொங்கலுக்கு வெளியாக இருந்த விடாமுயற்சி திரைப்படம் காலதாமதம் காரணமாக வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஓ.டி.டி மற்றும் சேட்டிலைட் உரிமம் வழியாக நல்ல தொகையை பெற்றுள்ளது விடாமுயற்சி. அதனை தொடர்ந்து இன்று டிக்கெட் புக்கிங்கில் மட்டும் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக்கிங் ஆகி உள்ளது.

எனவே இதன் மூலமே படத்திற்கு போட்ட காசை எடுத்துவிட்டனர் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

நாயை பத்தி வேணும்னா சொல்றேன்.. அஜித்தை பத்தி எல்லாம் சொல்ல முடியாது.. அஜித் தம்பியின் உண்மை முகம்.!

நடிகர் அஜித்குமார் தொடர்ந்து தமிழ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து வரும் நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் சினிமாவை விடவும் அஜித் தொடர்ந்து தனது கனவான கார் ரேஸின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் அடுத்து அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

அஜித்தின் தம்பியான அனில் குமார் பற்றி பலருக்கும் தெரியாது. அனில் குமாருக்கு இந்த பிரபலமாவதன் மீது எல்லாம் பெரிதாக ஈர்ப்பு கிடையாது. எனவே அவர் தொடர்ந்து பேட்டிகள் போன்ற எந்த ஒரு விஷயத்திலும் பங்கெடுப்பது கிடையாது.

அதே சமயம் அவர் விலங்குகள் மீது பிரியம் கொண்டவர். சமீபத்தில் நாய்களுக்கு ஆதரவாக அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் பேசிய அனில் குமார். நாய்கள் நம்மீது அளவற்ற அன்பை செலுத்துகின்றன. என் வீட்டிற்கு ஒரு நாய் திடீரென வந்தது.

ajith

அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடலாம் என ஒருவாரம் பார்த்தேன். ஆனால் யாரும் வரவில்லை. இப்போது அதை நான் வளர்த்து வருகிறேன். நாய்களை நாம் தத்தெடுப்பதில்லை. அவைகள்தான் நம்மை தத்தெடுக்கின்றன.

நாய்களுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு என்பது 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது. எனவே தெரு நாய்களை பார்த்தால் கல்லை கொண்டு அடிக்காதீர்கள். அதனால் பயமடையும் நாய்கள் இன்னமும் மோசமாக நடந்துக்கொள்ளும்.

ஒவ்வொருவரும் அவர்களது வீட்டில் ஒரு நாயையாவது வளர்க்க முடியும். மனிதர்கள் அதிகமாக இருந்ததால் பூமியில் பெரும்பான்மையான வாழ்விடங்களை நாம் எடுத்துக்கொண்டோம். அதிலிருந்து விலங்குகளுக்கு கொஞ்சம் கொடுக்கலாம் என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவரிடம் பேசிய பத்திரிக்கையாளர்கள் அஜித் குறித்து கேள்வி கேட்டனர். உடனே அனில் குமார் நாய்களை பற்றி மட்டும் கேள்விகளை கேளுங்கள்.

மத்த பிரபலங்கள் செய்யாத அந்த விஷயங்களை அஜித் செய்ய காரணம் இதுதான்!.. விளக்கும் பயில்வான் ரங்கநாதன்!..

Actor Ajith: தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு அதிகமான வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்றவு ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து திருப்பூரில் கார்மென்ஸில் பணிபுரிந்து வந்த அஜித்திற்கு அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் கிடைத்தது. அதுவும் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புதான்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அவருக்கு கிடைக்கும் என்பதை அவரே எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம். ஏனெனில் அமராவதி திரைப்படத்திற்கு பிறகு ஒரு பேட்டியில் பேசிய அஜித் திரும்பவும் சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸ் துவங்கி விட்டு திருப்பூர் செல்ல வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று கூறியிருந்தார்.

அஜித்தின் பழக்கம்

ஆனால் அஜித்தின் வாழ்க்கை அதன் பிறகு முழுமையாக மாறிவிட்டது.  இந்த நிலையில் அஜித்தின் ஒரு பழக்கம் குறித்து பயல்வான் ரங்கநாதன் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பொதுவாகவே இந்திய அளவில் பிரபலங்கள் என்பவர்கள் குடும்பத்திற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

சிவாஜி கணேசனில் துவங்கி இப்போது இருக்கும் நடிகர்கள் வரை நடிப்புக்காக குடும்பத்திற்கு அதிக ஈடுபாடு அளிக்காமல் விட்டுவிடுவார்கள். ஆனால் அதிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட ஒரு நடிகர் என்றால் அது நடிகர் அஜித் மட்டும் தான்.

தனது மகனின் பள்ளி ஆண்டு விழாவிற்கு கூட தவறாமல் செல்லக்கூடியவர் அஜித். அதே போல தனது குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா செல்வது தனது குடும்ப உறுப்பினர்களுடன் விழா நடத்துவது என்று எப்போதுமே தனது குடும்பத்துடன் இணைந்தே இருப்பவர் நடிகர் அஜித். தற்சமயம் கூட அவரது மகனின் பிறந்தநாளை வெகுவாக கொண்டாடியிருந்தார். தமிழ் சினிமாவில் வேறு எந்த பிரபலமும் அஜித் மாதிரி கிடையாது என்று கூறுகிறார் ரங்கநாதன்.

அஜித் ரசிகர்களை பார்த்தால் ஆட்டு மந்தைகளான்னு சந்தேகமா இருக்கு!… ஓப்பன் டாக் கொடுத்த பிரபல பத்திரிக்கையாளர்!..

Actor Ajith: தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அவர் ரசிகர்களுக்காக எதுவுமே செய்யாதபோதும் கூட எப்போதுமே ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக அஜித் எந்த ஒரு சினிமா தொடர்பான விழாக்களுக்கும் வருவதில்லை. அதே போல விருது வழங்கும் விழாக்களுக்கும் வருவதில்லை.

இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் சில விஷயங்களை கூறியிருந்தார். அஜித் சினிமாவில் நல்ல பழக்கத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஒரு முறை ஏ.எம் ரத்னம் என்கிற தயாரிப்பாளருக்காக படம் நடித்து கொடுக்கவிருந்தார். அதற்காக 10 லட்ச ரூபாயை அட்வான்ஸ் தொகையாக அவர் கொடுத்தார்.

இந்த நிலையில் திரைப்பட ஊழியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் இறங்கினர் திரைப்பட சங்க ஊழியர்கள். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும், அஜித்தும் ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

இதனால் கோபமான தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் அஜித்திடம் அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்டுள்ளார். அப்போது கையில் பணம் இல்லாத அஜித் இதற்காக பல திரை பிரபலங்களிடம் அலைந்தும் பணம் கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு சேட் ஒருவர்தான் அவருக்கு அந்த பணத்தை கொடுத்துள்ளார்.

இதனால்தான் திரைத்துறை மீது மிகுந்த கோபத்திற்கு உள்ளானார் அஜித் என கூறுகிறார் அந்தணன். ஆனால் அதே சமயம் அஜித் ரசிகர்களுக்கும் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுத்தது கிடையாது. தமிழ் சினிமாவிலேயே ரசிகர்களுக்காக ஒரு விழா கூட நடத்தாத நடிகர் அஜித் மட்டும்தான்.

அப்படி இருந்தும் கூட இவர்கள் எல்லாம் தல தல என பின்னால் சுற்றுவதை பார்க்கும்போது இவர்கள் ரசிகர்களா ஆட்டு மந்தைகளா என்கிற சந்தேகம் வருகிறது என்கிறார் அந்தணன்.

மலை பாதையில் போய் காணாமல் போன அஜித்!.. பதறி போய் கதறி அழுத ஷாலினி… சிக்கலில் சிக்கிய இயக்குனர்!.

Ajithkumar: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். தமிழில் தொடர்ந்து இவர் வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் காதல் செய்து திருமணம் செய்துக்கொண்ட ஜோடிகளில் அஜித் ஷாலினியும் முக்கியமானவர்கள். அஜித்திற்கு ஷாலினிக்கும் இடையே அமர்களம் திரைப்படத்தின்போதே காதல் ஏற்பட்டது.

ஆனால் அந்த படத்தின் இயக்குனரான சரணிற்கு இந்த காதல் விவகாரங்கள் அப்போது தெரியாது. அவர் வழக்கமாக மற்ற நடிகர்களை வேலை வாங்குவது போலவே இவர்கள் இருவரையும் நடிக்க வைத்து கொண்டிருந்தார். ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே ஷாலினி அஜித்தின் பெரும் ரசிகராக இருந்தார்.

அதனாலேயே அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு மலைப்பகுதியில் படப்பிடிப்பு ஒன்று நடத்த வேண்டி இருந்தது. அதற்காக படப்பிடிப்பு குழுவினர் கிளம்பியப்போது அஜித்தும் சரணும் ஒரு காரில் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.

amarkalam

ஷாலினி மற்றும் மற்ற படக்குழுவினர் ஏற்கனவே அங்கு வந்திருந்தனர். இந்த நிலையில் வெகு நேரமாகியும் சரணையும் நடிகர் அஜித்தையும் காணவில்லை. எனவே அவர்களுக்கு போன் செய்து பார்த்துள்ளார் ஷாலினி ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அது ஆபத்தான மலைப்பாதை என்பதால் நேரம் ஆக ஆக ஷாலினிக்கு அதிக கவலை வர துவங்கியுள்ளது. பிறகு தாமதமாக அஜித்தும் சரணும் படப்பிடிப்பு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அப்போது அங்கு கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டிருந்தார் ஷாலினி. கோபமாக வந்த ஷாலினி எதற்காக அஜித் என்னிடம் ஒருமுறை கூட இடையில் போன் செய்து பேசவில்லை என கடிந்துக்கொண்டார்.

அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் இந்த அளவு நெருக்கம் உள்ளதா என அறிந்திருக்கிறார் இயக்குனர் சரண். இந்த நிகழ்வை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

அஜித்தை பழிவாங்காமல் விட மாட்டேன்!.. லண்டனுக்கு ப்ளைட் ஏறிய வெங்கட்பிரபு!.. இதுதான் சம்பவமா?..

Ajith vengat prabhu : தமிழ் சினிமாவில் பெறும் கதாநாயகர்களை வைத்து நல்ல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. பொதுவாக பெரும் இயக்குனராக ஆன பிறகு பலரும் கொஞ்சம் திமிராக நடந்துக்கொள்வார்கள்.

ஆனால் வெங்கட்பிரபுவை பொருத்தவரை அவர் சாதாரணமாக ஏதோ பக்கத்து வீட்டு ஆளிடம் பேசுவது போல்தான் அனைவரிடமும் பேசுவார். அதனாலேயே வெங்கட் பிரபு மக்களுக்கு நெருக்கமான ஒரு இயக்குனர் என கூறலாம்.

டிவி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் யூ ட்யூப் பேட்டிகளாக இருந்தாலும் வெங்கட் பிரபு கலந்து கொள்ளும் பொழுது அது மிக சுவாரசியமாக இருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் வெங்கட் பிரபு முதன் முதலாக விஜய்யை வைத்து தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கோட்.

வெங்கட் பிரபு படங்கள் இயக்கும்போது அதில் பெரிதாக மெனக்கட்டு வேலை செய்ய மாட்டார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. மேம்போக்காக படங்களை படம் பிடித்து முடித்து விடுவார் என்று கூறுவார்கள். ஆனால் தற்சமயம் ஒரு பாடலுக்காக யுவன் சங்கர் ராஜாவும் வெங்கட் பிரபுவும் லண்டனுக்கு ரெக்கார்ட் செய்ய சென்றுள்ளனர்.

ஏனெனில் அந்த பாடல் சிறப்பாக வரவேண்டும் என்றும் அதற்கான உபகரணங்கள் லண்டனில் தான் உள்ளன என்றும் கூறி யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபுவையும் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். ஒரு பாடலுக்காக எதற்கு வெங்கட் பிரபு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று பலரும் பேசும் பொழுது இது பற்றி சில செய்திகள் வெளி வருகின்றன.

அதாவது மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித் வெங்கட் பிரபுவிற்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை. பலமுறை அஜித்திடம் வாய்ப்பு கேட்ட பொழுதும் வெங்கட் பிரபுவிற்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டார் அஜித். இந்த நிலையில் விஜய் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான ஒரு திரைப்படத்தை எடுத்து விட முயற்சி செய்கிறார் வெங்கட்பிரபு.

இந்த படம் மூலமாக விடாமுயற்சி திரைப்படத்தை தோற்கடிப்பதன் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபிக்க நினைக்கிறார் வெங்கட் பிரபு என ஒரு பேச்சு உள்ளது.

சும்மா உக்காந்து இருக்குறதுக்கு 50 லட்சமா!.. விடாமுயற்சி படப்பிடிப்பு பரிதாபங்கள்!..

Vidamuyarchi Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தில் நடிக்காமல் உலகச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார் அஜித். அதனை அடுத்து ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பல நாடுகளையும் சுற்றி வந்தார் அஜித்.

சொல்ல போனால் நடிப்பை காட்டிலும் அஜித்திற்கு இப்படி பயணம் செல்வதில்தான் ஆர்வம் அதிகம் என்றாலும் தன்னுடைய தொழிலையும் கொஞ்சம் பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடித்துக் கொண்டு வருகிறார்.

இதனால் சினிமாவில் இருக்கும் போட்டியில் இருந்து அஜித் விலகிவிட்டார் என்று கூறவேண்டும் ஏனெனில் இந்த இடைவெளியில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து அது வெளியாகி வெற்றியும் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

vidamuyarchi

இந்த படம் பெரும் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. 12ஆம் தேதி படப்பிடிப்பிற்காக அங்கு அனைவரும் சென்று விட்டனர். இருந்தாலும் படப்பிடிப்பு துவங்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் அங்கு சென்றவர்கள் அனைவரும் இன்னும் நடிக்க துவங்கவில்லையாம்.

இருந்தாலும் அவர்களுக்கான சம்பளம் மட்டும் கொடுக்கப்பட்டு வருகின்றன ஒரு நாளைக்கு செலவு மட்டும் 50 லட்சம் வரை ஆகிறது என்று கூறப்படுகிறது இது ஒரு படபிடிப்பிற்கான அதிகபட்ச செலவாகும். எனவே இந்த வேலையும் பார்க்காமலேயே அங்கு சென்ற நடிகர்கள் தினசரி சம்பளம் வாங்கி வருகின்றனர். இவ்வளவு செலவுகள் செய்து அந்த படம் வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற சூழ்நிலை தற்சமயம் உருவாகியுள்ளது.

சென்னை வந்தும் கேப்டன் சமாதிக்கு வராத அஜித்!.. கேப்டன் செய்த பழைய பஞ்சாயத்துதான் காரணமா?

Ajithkumar and Vijayakanth :  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டங்களில் எல்லாம் இவர் அனைத்து விழாக்களுக்கும் வந்துக்கொண்டுதான் இருந்தார்.

ஆனால் விழாவிற்கு வரும் அஜித் தன்னை அறியாமலேயே சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தை பேசுவதால் அவர் பேசுவதே சர்ச்சையாகி வந்தது. இதனால் ஒரு அளவிற்கு மேல் பொது இடங்களுக்கே வருவதை நிறுத்திக்கொண்டார் அஜித்.

நல்லதுக்கு வரவில்லை என்றாலும் கெட்டதுக்கு வரவேண்டும் என்று ஒரு பழமொழி தமிழ் சமூகத்தில் உண்டு. ஆனால் நடிகர்களின் இறப்பிற்கு கூட அஜித் வருவதில்லை. அதிலும் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகரான விஜயகாந்த் இறப்பிற்கு கூட அஜித் வராதது பலருக்கும் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

ajith-1

இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து சென்னை வந்த அஜித் இன்னமும் கூட விஜயகாந்த் குடும்பத்தாரை சந்திக்கவில்லை. விஜயகாந்தின் கல்லறைக்கும் செல்லவில்லை. இது திரைத்துறையில் உள்ள பலரையுமே கோபமடைய செய்துள்ளது.

நடிகர் சங்க நிதிக்காக மலேசியாவில் விஜயகாந்த் ஸ்டார் நைட் என்னும் நிகழ்ச்சியை நடத்தியப்போது அதில் ரஜினி கமல் கூட கலந்துக்கொண்டனர் ஆனால் அஜித் வரவில்லை. இதனால் கடுப்பான விஜயகாந்த் அஜித்தை வீட்டிற்கு அழைத்து திட்டியிருந்தார்.

அந்த கோபம் இன்னமும் அஜித்திற்கு இருக்கிறது போல அதானால்தான் அவர் விஜயகாந்தின் கல்லறையை பார்க்க வரவில்லை என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போன சமீரா ரெட்டி!.. ஹிந்தி அவங்க வாழ்க்கையில் விளையாடிட்டு!..

Actor Ajith : ஒரு நடிகையின் வாழ்க்கையை பொறுத்தவரை அவர்களின் சினிமா வாழ்க்கையையே மாற்றும் சக்தி பெரும் நடிகர்களின் திரைப்படங்களுக்கு உண்டு. பெரும் நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது கதாநாயகிகளுக்கு பெரிதான ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கும். அப்படியாக நடிகை சமீரா ரெட்டிக்கு அஜித்துடன் நடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே வாய்ப்பு கிடைத்தும் அவரால் நடிக்க முடியாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது.

2001 இல் நடிகர் அஜித் நடித்து பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் சிட்டிசன். சிட்டிசன் திரைப்படத்திற்கான கதாநாயகிகளுக்கான தேடல் நடந்த பொழுது முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்தது நடிகை சமீரா ரெட்டியைதான். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் சரவண சுப்பையாவிற்கு சிட்டிசன்தான் முதல் திரைப்படம்.

அவருக்கு சுத்தமாக ஹிந்தியே தெரியாது ஆனால் சமீரா ரெட்டிக்கு தமிழே தெரியாது. இந்தியும் ஆங்கிலமும் மட்டும் தான் தெரியும் இதனால் சமீரா ரெட்டியுடன் பேசுவது என்பதே இயக்குனருக்கு கடினமான விஷயமாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில் இவரை வைத்து எப்படி முழு படம் எடுக்க முடியும் என்று யோசித்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த படத்தில் வரும் பூக்காரா பாடலை பாடுவதற்காக பாடகி வசுந்தரா தாஸ் வந்திருந்தார். அவர் ஏற்கனவே ஹே ராம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனவே அவரிடம் பேசி அந்த திரைப்படத்தில் அவரை கதாநாயகி ஆக்கினார் இயக்குனர். கடைசியில் ஹிந்தி நடிகை என்பதால் சமீரா ரெட்டி அஜித்துடன் நடிக்கும் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

அஜித்துக்காக எழுதின ஒரு பாட்டு!.. இலங்கை தமிழர்களை வெகுவா பாதிச்சிட்டு!..

Actor Ajith : தமிழ் திரைப்பட பாடல்களை பொறுத்தவரை நிறைய திரைப்பட பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறலாம். இன்னமும் பல அம்மன் கோவில்களில் தமிழ் சினிமாவில் வரும் அம்மன் பாடல்கள் ஒளிபரப்பப்படுவதை பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு மனிதர்களின் வாழ்க்கையில் சினிமா கலந்து உள்ளது என்று கூறலாம். ஒரு திருமண விசேஷத்தில் துவங்கி காது குத்து கல்யாணம் இறப்பு என அனைத்திற்கும் சினிமாவில் பாடல்கள் இருக்கின்றன.

ஆனால் புரட்சியாளர்களுக்கு ஏற்ற பாடல்களும் தமிழ் சினிமாவில் உண்டு ஆம் அஜித் நடித்து வெளியான முக்கியமான திரைப்படம் சிட்டிசன். சிட்டிசன் திரைப்படத்தில் பழைய கதை வரும்பொழுது அதில் அஜித் ஒரு புரட்சிகரமான பாடலை பாடுவது போன்ற காட்சி இருக்கும்.

மேற்கே உதித்த சூரியனை என்கிற அந்த பாடல் அப்போது பலருக்கு பிடித்த பாடலாக இருந்தது. முக்கியமாக இலங்கையில் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வெகுவாக ஈர்த்தது.

அதனை தொடர்ந்து அந்தப் பாடலை தங்களுக்கான பாடலாக்கி அதை பல இடங்களில் பயன்படுத்தியும் கொண்டனர் விடுதலை புலிகள். இயக்குனர் சரவண சுப்பையா இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு சிட்டிசன் திரைப்படம் தான் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொழுது தேவா இதில் நான் போடும் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார் அதன்படியே அந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பாடல்களாக அமைந்தன.

பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ!.. மகிழ் திருமேனிக்கு வார்னிங் கொடுத்த அஜித்!..

Actor Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதும் இருசக்கர வாகனத்திலேயே சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற யோசனையுடன் தனது பயணத்தை தொடங்கினார் அஜித். இதற்கு நடுவே இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்திற்காக விடாமுயற்சி படத்தின் கதையை எழுதி வைத்துவிட்டு காத்திருந்தார்.

அஜித் வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு இடையில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து விட்டது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்திற்கு போட்டியாக அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க துபாயில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் கதை தான் நிர்ணயித்த மாதிரி செல்ல வேண்டும் என்பது மகிழ் திருமேனியின் ஆசையாக இருக்கிறது. ஆனால் பெரிய கதாநாயகர்களை பொருத்தவரை படத்தில் அவர்களுக்கு தகுந்தார் போல மாற்றங்களை அவர்கள் ஏற்படுத்துவார்கள்.

ajith-1

ஆனால் அஜித் அந்த மாதிரியான விஷயங்களை செய்வதற்கு மகிழ் திருமேனி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கொஞ்சம் பிரச்சனை இருந்து வருகிறதாம். மேலும் பிப்ரவரி மாதம் வரையில்தான் விடா முயற்சிக்கான கால் சீட்டை கொடுத்திருக்கிறார் அஜித்.

ஆனால் ஜனவரியை வந்துவிட்ட நிலையில் படத்திற்கான படப்பிடிப்பை தான் முடித்திருக்கிறார் மகிழ்திருமேனி. எனவே அவரை அழைத்து அடுத்த மாதத்திற்கு மேல் என்னால் ஒரு நாள் கூட கால் சீட்டு கொடுக்க முடியாது அதற்குள் மொத்த படத்தையும் எடுத்து விடுங்கள் என்று எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார் அஜித்.