Tamil Cinema News
வெளியான AK Anthem பாடல்.. பட ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களுக்கு ட்ரீட்.!
தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஐந்து டாப் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முக்கிய நடிகராக நடிகர் அஜித்குமார் இருப்பார்.
அஜித் குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்ளாத நடிகராக இருந்தாலும் கூட தமிழில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரு நட்சத்திரமாக அவர் இருந்து வருகிறார்.
அதேசமயம் தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு, ”திரைப்படங்கள் மீது அதிக ஆர்வம் காட்டாமல் வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறி வருபவராக அஜித் இருந்து வருகிறார்”.
சமீபத்தில் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு கொடுத்த அறிவுரை அதிக ட்ரெண்டாகி வந்தது. இந்த நிலையில் தற்சமயம் அஜித்குமார் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
இந்த திரைப்படத்திலும் கார் தொடர்பான காட்சிகள் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்திற்காக அதிக காத்திருப்புடன் இருக்கின்றனர் இந்த நிலையில் சமீபத்தில் அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொண்டதை போற்றும் வகையில் லைக்கா நிறுவனம் அஜித்திற்காக ஒரு பாடல் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த பாடல் வரவேற்பை பெற்று வருகிறது.
