Tamil Cinema News
முன்பதிவுலேயே போட்ட காசை எடுத்த விடாமுயற்சி..! இத்தனை லட்சம் டிக்கெட் விற்பனையா?
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரு படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது.
பைக் ரேஸ், சுற்றுலா என பல இடர்பாடுகளுக்கு நடுவேதான் விடாமுயற்சி திரைப்படம் உருவானது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது.
ஹாலிவுட்டில் வெளியான ப்ரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் ரீமேக்தான் விடாமுயற்சி என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ப்ரேக் டவுன் திரைப்படத்தில் நெடுஞ்சாலையில் காணாமல் போன தனது மனைவியை கண்டுப்பிடிப்பதே கதையாக இருக்கிறது.
அதே போல கதைதான் விடாமுயற்சியின் கதையும் இருக்கும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. பொங்கலுக்கு வெளியாக இருந்த விடாமுயற்சி திரைப்படம் காலதாமதம் காரணமாக வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஓ.டி.டி மற்றும் சேட்டிலைட் உரிமம் வழியாக நல்ல தொகையை பெற்றுள்ளது விடாமுயற்சி. அதனை தொடர்ந்து இன்று டிக்கெட் புக்கிங்கில் மட்டும் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக்கிங் ஆகி உள்ளது.
எனவே இதன் மூலமே படத்திற்கு போட்ட காசை எடுத்துவிட்டனர் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
