Tag Archives: karthi

இந்த வருடத்தின் இறுதிக்குள் கைதி 2 படம் துவங்கும்! –  வெளிவந்த தகவல்கள்!

தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் யாவுமே நல்ல ஹிட் கொடுத்த திரைப்படங்களாகவே இருந்தன.

பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என வரிசையாக ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறார். இதற்கடுத்து அவர் நடிக்க இருக்கும் திரைப்படம் கைதி 2. இந்த படத்திற்கு ஏற்கனவே ஏகப்பட்ட வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் தற்சமயம் லியோ படத்தை இயக்கி வருகிறார். நான்கு மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளார் லோகேஷ். படத்தை வருகிற அக்டோபர் 19 வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நவம்பர் மாத துவக்கத்தில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கலாம் என லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த வேகத்தில் போனால் 2024 இல் விக்ரம் 3 இன் படப்பிடிப்பே துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா கார்த்தியை வச்சி அதிரிபுதிரியான படம் எடுக்க இருந்தேன்! – லோகேஷ் எடுக்க இருந்த திரைப்படம்!

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை நான்கு திரைப்படங்களே எடுத்திருந்தாலும் இயக்குனர்களில் தற்சமயம் பெரும் மார்க்கெட் உள்ள ஆளாக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் அனைத்து படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்கள். தற்சமயம் அவரது திரைப்படங்களில் சூர்யா கார்த்தி இருவருமே நடித்துவிட்டனர். ஆனால் இதற்கு முன்பே இவர்கள் இருவரையும் வைத்து தனி படம் செய்வதற்கு லோகேஷ் ஆசைப்பட்டாராம்.

லோகேஷ் மலையாளத்தில் மிகவும் ரசித்து பலமுறை பார்த்த திரைப்படம் ஐய்யப்பனும் கொசியும், இந்த படத்தில் பிஜு மேனன் போலீசாகவும், பிரித்திவிராஜ் இராணுவ அதிகாரியாகவும் இருப்பார். இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ சண்டையை வைத்து படத்தின் கதை செல்லும்.

இந்த படம் தெலுங்கிலும் ரானா டகுபதி மற்றும் பவண் கல்யாணை வைத்து படமாக்கப்பட்டது. இதே படத்தை தமிழில் இயக்கலாம் என லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டார். சூர்யாவை போலீஸ் கதாபாத்திரத்திலும், கார்த்தியை இராணுவ வீரன் கதாபாத்திரத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டார்.

இதற்காக இவர்கள் இருவரிடமும் பேசி அனுமதியும் பெற்றுவிட்டார். ஆனால் அதற்குள் படம் எடுப்பதற்கான தமிழ் உரிமையை வேறு இயக்குனர் வாங்கிவிட்டார். அதனால் இதை லோகேஷ் கனகராஜால் படமாக்க முடியாமல் போயிற்று.

லோகேஷ் கனகராஜ் மட்டும் எடுத்திருந்தால் அய்யப்பனும் கொசியும் திரைப்படம் தமிழில் சிறப்பான படமாக வந்திருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

புது கெட்டப்பில் கார்த்தி!  –  எதிர்பார்ப்பை தூண்டும் அடுத்த படம்!

வர வர தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் ரசிகர்களிடையே ஹிட் கொடுக்க கூடிய கதைகளை தேடி நடிக்கிறார். ஏற்கனவே மூன்று திரைப்படங்கள் வரிசையாக ஹிட் கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி.

போன வருடம் வெளியான, விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் மூன்று திரைப்படங்களுமே கார்த்திக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படங்கள். இதனால் இயற்கையாகவே நடிகர் கார்த்தி திரைப்படங்கள் மீது தற்சமயம் ரசிகர்களுக்கு ஆவல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அவர் நடித்த மூன்று திரைப்படங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத வெவ்வேறு வகையான கதைகளாகும். இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் படம் ஜப்பான்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ராஜ் முருகன் இருக்குகிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ் திரைப்படங்களில் அரசியலில் பேசும் முக்கியமான இயக்குனர்களில் ராஜ் முருகனும் ஒருவர்.

இவர் ஏற்கனவே இயக்கிய குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய படங்கள் வலுவான அரசியலை பேசிய திரைப்படங்களாகும். எனவே இந்த படமும் கண்டிப்பாக ஏதாவது ஒரு அரசியலை பேசும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜப்பான் படத்தின் போஸ்டரை பொறுத்தவரையில் இந்த படத்தில் கார்த்தி ஒரு காமெடி கதாபாத்திரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பல இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடிய பிரபலமான பாடல்? – எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை போலவே பாடல்களுக்கும் கூட எல்லா காலங்களிலும் முக்கியத்துவம் இருந்துள்ளது. இளையராஜா காலங்களில் அவர் இசைக்காக ஓடிய திரைப்படங்கள் ஏராளம்.

இசையமைப்பாளர்களுக்கும் இடையே கூட போட்டிகள் நிலவி வருவதாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம் உண்டு. ஆனால் இசையமைப்பாளர்கள் இடையே பெரிதாக போட்டிகள் இருந்தது கிடையாது.

தமிழ் சினிமாவில் சில பாடல்கள் தனித்துவமானதாக இருக்கும். வேறு எந்த பாடலையும் விட அந்த பாடலில் புதிதாக ஒன்று முயற்சிக்கப்பட்டிருக்கும். அப்படி பல இசையமைப்பாளர்கள் இணைந்து பாடிய ஒரு பாடல் தமிழ் சினிமாவில் உண்டு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் பிரியாணி. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் எதிர்த்து நில் என்கிற பாடலை பிரபல இசையமைப்பாளர்களான டி.இமான், ஜி.வி.பிரகாஷ், தமன், விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா ஐந்து பேரும் இணைந்து பாடியுள்ளனர்.

இப்படி பல இசையமைப்பாளர்கள் இணைந்து பாடிய முதல் பாடல் இதுதான் என கூறப்படுகிறது.

2022 இல் வசூல் சாதனை செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனின் சம்பளம் துவங்கி, இயக்குனரின் சம்பளம் வரை அனைத்தும் படத்தின் வசூலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என்பது திரையுலகில் முக்கியமான விஷயமாக உள்ளது.

இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் செய்த டாப் 10 திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.

10.விருமன்

2டி எண்டர்டெயின்மெண்ட் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி சங்கர் எடுத்திருந்தனர். இயக்குனர் முத்தையா இந்த படத்தை இயக்கியிருந்தார்.

குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் நல்ல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படமாக  விருமன் உள்ளது.

09.லவ் டுடே

இந்த வருடம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக லாபம் பார்த்த திரைப்படம் லவ் டுடே. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி அவரே நடித்திருந்த படமாக லவ் டுடே உள்ளது.

படத்தின் கதைப்படி இரு காதலர்கள் ஒரு நாளைக்கு இருவரது மொபைல் போன்களையும் மாற்றி கொள்கின்றனர். அதனால் அவர்களுக்குள் ஏற்படும் விரிசல்களை மையமாக வைத்து கதை செல்கிறது.

ஐந்து கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது.

08.வெந்து தணிந்தது காடு

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்தார். ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

மும்பைக்கு கூலி வேலைக்கு செல்லும் கதாநாயகன் எப்படி அங்கு கேங்ஸ்டர் ஆகிறான் என்பதாக கதை செல்கிறது. இந்த படம் 80 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்தது.

07.சர்தார்

தமிழில் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரைப்படமெடுக்கும் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார்.

சர்தார் என்னும் உளவாளி நாட்டிற்காக ஒரு உளவு வேலைக்கு செல்கிறார். அதில் தண்ணீர் தொடர்பான கார்பரேட் சதியை கண்டறியும் சர்தார் பிறகு அதை எப்படி தடுக்கிறார் என கதை செல்கிறது.

இந்த படம் 90 கோடி வசூல் சாதனை படைத்தது.

06.டான் மற்றும் மாநாடு

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தயாரான திரைப்படம் டான். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையை நகைச்சுவையாக கூறும் திரைப்படம் டான்.

மாநாடு திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபுவால் எடுக்கப்பட்ட முதல் தமிழ் டைம் லூப் திரைப்படமாகும். ஒரு மாநாட்டில் பெரிய மத கலவரம் நடக்க இருக்கும், அதை டைம் லூப் சக்தியை பயன்படுத்தி கதாநாயகன் எப்படி தடுக்கிறார் என்பதே கதை.

இந்த இரண்டு படங்களுமே 100 கோடி வசூல் செய்த படங்களாக உள்ளன.

05.திருச்சிற்றம்பலம்

நடிகர் தனுஷ் சிம்பிளான டெலிவரி பாயாக நடித்த படம் திருச்சிற்றம்பலம், படத்தில் ஒரு சண்டை காட்சிகள் கூட கிடையாது என்றாலும் எதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாய் படம் இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.

thiruchitrambalam poster

காதலிக்க ஒரு பெண்ணை தேடி வரும் கதாநாயகன், அதே சமயம் சிறு வயது முதல் அவருக்கு தோழியாக இருக்கும் கதாநாயகி, இவர்களின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் செல்கிறது.

இந்த படம் 90 முதல் 100 கோடி ஹிட் அடித்ததாக கூறப்படுகிறது.

04.வலிமை

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. பல காலங்களாக ரசிகர்கள் காத்திருப்புக்கு பிறகு இந்த படம் வெளியானது.

படத்தின் கதைப்படி ஊருக்குள் திருட்டை செய்வதற்கு ஒரு பைக்கர் கும்பல் கிளம்பியுள்ளது. அந்த கும்பலை பிடிப்பதற்கு ஐ.பி.எஸ் அதிகாரியான கதாநாயகன் முயற்சிப்பதே கதை.

இந்த படம் கிட்டத்தட்ட 163 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது.

03.பீஸ்ட்

தளபதி விஜய் நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பீஸ்ட்.

தீவிரவாதிகளால் சூழப்படும் சூப்பர் மார்க்கெட், அங்கு மாட்டிக்கொண்டு இருப்பவர்களில் ராணுவ வீரரான கதாநாயகனும் மாட்டிக்கொள்கிறார். அவர் அனைவரையும் காப்பாற்றுவதே படக்கதை

மொத்தம் 227 கோடிக்கு ஓடியுள்ளது பீஸ்ட்

02. விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். கைதி படத்தின் அடுத்த பாகமாக விக்ரம் எடுக்கப்பட்டது.

போதை பொருள் கடத்து கும்பலை எதிர்த்து நிற்கும் ஏஜெண்ட் விக்ரம் மற்றும் அவரது அணியை வைத்து கதை செல்கிறது. கமல்ஹாசன் எதிர்பார்த்ததை விடவும் இந்த படம் நல்ல வசூல் தந்தது.

மொத்தமாக 420 கோடி வசூல் செய்தது விக்ரம்.

01.பொன்னியின் செல்வன்

இந்த வருடம் வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன். ராஜ ராஜ சோழன் குறித்து கல்கி எழுதிய புனைவு நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

சோழர்களை வீழ்த்துவதற்கு நடக்கும் சூழ்ச்சி. அதனை கண்டறிந்து சோழர்களிடம் சொல்ல பயணப்படும் வந்தியதேவன். ஆகிய விஷயங்களை கொண்டு இந்த படம் செல்கிறது.

கிட்டத்தட்ட 500 கோடி வசூல் செய்தது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

சர்தார் வேஷத்தில் வந்த ரித்து? –  ப்ரோமோஷனுக்காக செய்த கொடுமை!

கார்த்தி நடிப்பில் தற்சமயம் வெளியாகி சிறப்பான ஹிட் கொடுத்த திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இருவேடத்தில் நடித்திருந்தார். பொதுவாக ஸ்பை திரைப்படம் என்றாலே அதிகமாக மிகைப்படுத்தப்பட்டுதான் காமிக்கப்படும்.

மிகவும் அட்வான்ஸான ஆயுதங்கள், அரசுகளின் ஆதரவு. அதிலும் ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் உளவு துறை ஏஜெண்ட் கூறினால் ஏவுகணையே அனுப்பும் அரசு.

ஆனால் உண்மையில் உளவாளி என்பவன் யாருக்கும் தெரியாமல் சாமானியன் போல செயல்படுபவன். அப்படியான ஒரு கதையை மிக இயல்பாக இயக்கியிருந்தார் இயக்குனர் பி.எஸ் மித்ரன். இந்த திரைப்படத்தில் யூ ட்யூப் பிரபலமான சிறுவன் ரித்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தான்.

சர்தார் கதாபாத்திரத்திற்கு தற்சமயம் உள்ள தொழில்நுட்பம் குறித்து எதுவுமே தெரியாது. அதை எல்லாம் விளக்கும் கதாபாத்திரமாக ரித்து நடித்திருந்தான். தற்சமயம் ஆஹா ப்ரோமோஷனுக்காக ரித்து தனது யூ ட்யூப் சேனலில் கார்த்தியுடன் சேர்ந்து ஒரு வீடியோ தயார் செய்துள்ளான்.

அதில் அவன் இரட்டை வேடத்தில் தோன்றி நகைச்சுவை செய்துள்ளான். 

கார்த்தி எப்ப வருவாரு? வாசலில் காத்துக் கிடந்த பாலிவுட் நடிகர்!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்தி. தொடர்ந்து பையா, சிறுத்தை என பல ஹிட் படங்களில் நடித்து வந்தவர் இடையே சில சுமார் படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேடித் தேடி நடிப்பதால் கார்த்தியின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கார்த்தியின் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது.

கார்த்தியின் புகழ் பாலிவுட் வரை பரவியுள்ளது. சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளார் கார்த்தி. அங்கு வேறொரு படப்பிடிப்பு பணிக்காக பாலிவுட் இளம் நடிகர் வருண் தவான் சென்றுள்ளார். கார்த்தி வந்திருப்பதை அறிந்த வருண் தவான் அவரை பார்ப்பதற்காக ஷெட் வாசலிலேயே காத்திருந்தாராம்.

கார்த்தி வெளியே வந்ததும் அவருடன் பேசியவர், அவரது கைதி படம் தனக்கு பிடிக்கும் என கூறி செல்பியும் எடுத்துக் கொண்டாராம். தற்போது கைதி படம் இந்தியிலும் ரீமேக்காகி வருவது குறிப்பிடத்தக்கது.

பொன்னி நதி பாக்கணுமே! – திரையில் வராத காட்சிகளுடன் வெளியான முழு பாடல்!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் தமிழில் உள்ள பெரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருந்தார். பொன்னியின் செல்வன் புத்தகம் மொத்தம் 5 பாகத்தை கொண்டது. அதில் இரண்டு பாகங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மிகவும் வேகமாக செல்லும் படமாக பொன்னியின் செல்வன் இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் படத்தை முடிப்பதே கடினமான காரியமாக இருந்திருக்க வேண்டும்.

இதனால் படத்தில் வரும் பாடல்கள் பலவற்றையும் குறைத்துவிட்டனர். ஆடியோவாக நாம் கேட்கும்போது இருக்கும் முழு பாடலும் வீடியோவாக வரவில்லை. அந்த வகையில் பொன்னி நதி பாக்கணுமே என்ற ஏ.ஆர் ரகுமான் பாடிய பாடலும் கட் செய்யப்பட்டே படத்தில் இடம் பெற்றது.

இந்நிலையில் 5 நிமிடம் கொண்ட முழு வீடியோ பாடல் தற்சமயம் யூ ட்யூப்பில் வெளியாகியுள்ளது. படத்தில் நாம் காணாத பல காட்சிகள் இந்த பாடலில் இடம் பெற்றிருப்பதை காண முடிகிறது.

யூ ட்யூப்பில் உள்ள வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

கார்த்தி 25 படத்திற்கு பூஜை போட்டாச்சு – படம் பேர் என்ன தெரியுமா?

நடிகர் கார்த்தி வரிசையாக தமிழில் ஹிட் கொடுத்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் நடித்து வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களுமே திரையில் பயங்கரமான வெற்றியை கொடுத்தது.

இதையடுத்து கார்த்தியின் மார்கெட் தற்சமயம் அதிகமாகியுள்ளது. இதனால் நடிகர் கார்த்தி தனது சம்பளத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் கார்த்தி அடுத்ததாக தனது 25 வது படத்திற்கான பூசையை இன்று போட்டுள்ளார். இந்த படத்திற்கு ஜப்பான் என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ராஜ்முருகன் இயக்குகிறார்.

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அனு இம்மானுவேல் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

சர்தார் ஒ.டி.டி ரீலிஸ் எப்போ? – வெளியான தகவல்.!

கார்த்தி நடிப்பில் வெளியாகி அதிரடியான ஹிட் கொடுத்து வரும் திரைப்படம் சர்தார். இரு விதமான விஷயங்களை பேசும் மிக முக்கியமான திரைப்படம் இது.

கமர்ஷியலாக வந்த பல திரைப்படங்களிலேயே கொஞ்சம் எதார்த்தமான கண்ணோட்டத்துடன் வந்த உளவுத்துறை சார்ந்த திரைப்படம் சர்தார் என கூறப்படுகிறது.

வரிசையாக கார்த்திக்கு மூன்றாவது வெற்றி படமாக அமைந்ததால் நடிகர் கார்த்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் உலக அளவில் இருக்கும் நீர் அரசியலையும், பாட்டில் குடிநீரை குடிப்பதால் ஏற்படும் கேடுகள் குறித்தும் இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது.

அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில் படம் எப்போது ஓ.டி.டியில் வரும் என்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. இந்த நிலையில் நவம்பர் இறுதிக்குள் சர்தார் திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஓ.டி.டி நிறுவனமான ஆஹா தளமானது இந்த திரைப்படத்தை வாங்கியுள்ளது.

சர்தார் படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? –  கெத்து காட்டும் சர்தார்..!

வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரைப்படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் பி.எஸ் மித்ரன். இவர் இயக்கிய இரும்புதிரை, ஹீரோ ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

தற்சமயம் இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம்தான் சர்தார். சர்தார் திரைப்படம் ட்ரைலர் வந்தது முதலே பல எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய இரு திரைப்படங்களுமே அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

தற்சமயம் சர்தார் திரைப்படமும் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி என கூறப்படுகிறது. ஆனால் 11 நாளில் படம் 85 கோடி வசூல் செய்துள்ளது. 

100 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை விட சர்தார் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிக்கிற படம் எல்லாம் ரெண்டு பாகம் போகுது.. கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ப்ளீஸ் –  புலம்பும் கார்த்தி

நடிகர் கார்த்தி நடித்து வெளிவரும் படங்கள் எல்லாம் வரிசையாக ஹிட் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதனால் சூர்யாவை விடவும் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் கார்த்தி என கூறப்படுகிறது.

முத்தையா தயாரிப்பில் கார்த்தி நடித்து வெளிவந்த விருமன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது. அதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அதிலும் கூட கதையின் முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரத்தை கார்த்தி ஏற்று நடித்திருந்தார்.

பிறகு தற்சமயம் வந்த சர்தார் படமும் கூட கார்த்திக்கு நல்ல படமாக அமைந்தது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக படம் நடிப்பதிலேயே போய் கொண்டிருப்பதால் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நினைத்திருந்தாராம் கார்த்தி.

ஆனால் அடுத்து கைதி 2, சர்தார் 2 என இரண்டாம் பாகங்களுக்கு நடிக்க தயாராக வேண்டிய சூழலில் இருக்கிறார் கார்த்தி. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கும் இன்னும் சில டப்பிங் வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஓய்வே இல்லை என புலம்புகிறாராம் கார்த்தி