தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட், திரைக்கதை எழுத்தாளர் என்று பல துறைகளில் பணிபுரிந்து தற்சமயம் வளர்ச்சி பெற்ற நடிகராக இருப்பவர் மணிகண்டன்.
கிட்டத்தட்ட மணிகண்டன் 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் போராடி வந்ததன் பலனாக தற்சமயம் பிரபலமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார். குட் நைட் திரைப்படத்திற்கு பிறகு மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் தற்சமயம் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த திரைப்படத்தை youtube குழுவான நக்கலைட்ஸ் டீம் இயக்கி இருக்கிறது இந்த படம் பெற்ற வரவேற்பை அடுத்து மணிகண்டன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
actor-manikandan
மேலும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் மணிகண்டன். இந்த நிலையில் வீட்டில் தனக்கு இருக்கும் பொழுது போக்கு ஒன்றை சமீபத்தில் அவர் பகிர்ந்து இருந்தது அதிக ட்ரெண்டாகி வருகிறது.
அதில் கூறிய மணிகண்டன் எனக்கு பொம்மை கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டில் எனது அறை முழுவதும் பொம்மை கார்களை தான் வாங்கி வைத்திருப்பேன் வீட்டிற்கு வரும் சிறுவர்கள் அதை விளையாட எடுத்து கேட்டால் கொடுக்க மாட்டேன்.
எனக்கு அப்பொழுது அதிக கோபம் வந்துவிடும் என்று கூறி இருக்கிறார் மணிகண்டன். மேலும் நமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை என்றுமே தொலைத்து விடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார் மணிகண்டன்.
ஜெய் பீம், குட் நைட் என இரண்டு திரைப்படங்களிலுமே தனது தனிப்பட்ட நடிப்பை காட்டி அதன் மூலம் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் மணிகண்டன். இதனாலேயே நடிகர் மணிகண்டன் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படமும் அதிக வரவேற்பை பெற துவங்கியுள்ளது. யூ ட்யூப் சேனலான நக்கலைட்ஸ் சேனலின் துணையோடு உருவான திரைப்படம்தான் குடும்பஸ்தன்.
குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாகி தற்சமயம் எதிர்பார்த்ததைவிடவும் பெரிய வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளே 1 கோடி வரை வசூல் செய்து கொடுத்தது.
ஆனால் போக போக இந்த படத்தின் வசூல் என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் 12 கோடி வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது குடும்பஸ்தன்.
ஏனெனில் இந்த படத்தின் பட்ஜெட் 3 கோடி ரூபாய் மட்டுமே என கூறப்படுகிறது. ஆனால் படம் தயாரிப்பு செலவை விடவும் 3 மடங்கு அதிக லாபத்தை பெற்று கொடுத்துள்ளது. இது இல்லாமல் ஓ.டி.டி சேட்டிலைட் ரைட்ஸ் மூலம் இன்னமுமே லாபம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூ ட்யூப்பில் பிரபல நிறுவனமான நக்கலைட்ஸ் குழுவின் முயற்சியில் குறைந்த பட்ஜெட்டில் உருவான திரைப்படம் குடும்பஸ்தன். குடும்பஸ்தன் திரைப்படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடித்திருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் இன்னும் பலர் நடித்திருந்தனர். பொதுவாகவே நடிகர் மணிகண்டன் சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்த கூடியவர். அப்படிப்பட்டவருக்கு தீனி போடும் வகையில் இந்த கதாபாத்திரம் அமைந்திருந்தது.
கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியான குடும்பஸ்தன் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. எனவே முதல் நாள் 1 கோடி வசூல் செய்திருந்தாலும் போக போக இந்த படத்தின் வசூல் என்பது அதிகரித்தது. அதனை தொடர்ந்து நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்தது.
தற்சமயம் வரை இந்த திரைப்படம் மொத்தமாக 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. வெளியான ஐந்தே நாட்களில் 10 கோடி ரூபாய் என்பது இந்த படத்திற்கு பெரிய வெற்றியாகும். ஏனெனில் படத்தின் பட்ஜெட்டே 3 இல் இருந்து 4 கோடிக்குள்தான்.
அப்படியிருக்கும்போது இந்த வசூலே கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் மணிகண்டன். பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு எல்லாம் வரவேற்புகள் அதிகமாகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட நடிப்பு திறனே ஆகும்.
ஜெய் பீம் திரைப்படத்திலேயே மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மணிகண்டன். இந்த நிலையில் அவருக்கு அந்த படத்தின் மூலம் அதிக பாராட்டுகள் கிடைத்தன. மேலும் அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்க துவங்கின.
இந்த நிலையில்தான் அவர் குட் நைட் திரைப்படத்தில் நடித்தார். குட் நைட் திரைப்படம் நல்ல படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன்.
தற்சமயம் அவர் குடும்பஸ்தன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். குடும்பஸ்தன் திரைப்படமும் குட் நைட் மாதிரியே குடும்பங்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் மணிகண்டன் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாமே அவருக்கு நல்லப்படியான கதை களமாக அமைந்துவிடுகிறது.
இதனால் மக்களும் அவரது படத்திற்கு நம்பி வர துவங்கியுள்ளனர். இந்த நிலையில் முதல் நாளே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற துவங்கியது குடும்பஸ்தன் திரைப்படம். முதல் நாளே இந்த படம் 80 லட்ச ரூபாய் வசூல் செய்திருந்தது.
இந்த நிலையில் 3 நாட்கள் முடிவில் மொத்தமாக 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குடும்பஸ்தன் திரைப்படம். இந்த படத்தின் பட்ஜெட்டே 4 கோடி ரூபாய் தானாம். ஏற்கனவே போட்ட காசுக்கு அதிகமாக லாபம் ஈட்டி தந்துள்ளது குடும்பஸ்தன் திரைப்படம்.
நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. அவர் நடித்த குட் நைட் திரைப்படமே நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதனை தொடர்ந்து அடுத்து லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். அந்த திரைப்படம் அவருக்கு ஓரளவுதான் வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிப்பில் குடும்பஸ்தன் என்கிற படம் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படமும் குட் நைட் போலவே ஒரு குடும்ப படமாக அமைந்துள்ளது. திருமணம் ஆகி நிறைய கமிட்மெண்ட்டில் இருக்கும் மணிகண்டனுக்கு இடையில் ஒரு பத்து மாதம் வேலை இல்லாமல் போகிறது. அதனை சரி செய்ய என்ன செய்கிறார் என்பதே கதையாக இருக்கிறது.
சாமானிய மனிதன் ஒரு குடும்பத்தை நடத்த படும் அவஸ்தைகளை விவரிக்கும் வகையில் இதன் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை நக்கலைட்ஸ் யூ ட்யூப் சேனல் டீம்தான் படமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளே 80 லட்ச ரூபாய்க்கு ஓடியுள்ளது. படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவு, மேலும் ஒரு மாதத்திலேயே இந்த கதையை படமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக இந்த வசூலே படத்திற்கு நல்ல வசூலாகதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மணிகண்டன். மணிகண்டனை பொறுத்தவரை அவர் தனக்கென தனி நடிப்பை கொண்டவராக இருந்து வருகிறார். இதனாலேயே அவரது படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தது. அந்த படம் மூலம் படத்தின் கதாநாயகிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து அடுத்து மணிகண்டன் நடித்த திரைப்படம் லவ்வர். லவ்வர் திரைப்படத்தில் குட் நைட் திரைப்படத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். அந்த படம் கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூட படத்திற்கு கொஞ்சம் வரவேற்பு இருக்கவே செய்தது.
இந்த நிலையில் மீண்டும் குடும்ப ஆடியன்ஸை கவர் செய்யும் வகையில் குடும்பஸ்தன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். திருமணமாகாமல் ஜாலியாக இருக்கும் பசங்களுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் அவர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.
அவர்கள் வாழ்க்கை எவ்வளவு மோசமாகிறது என்பதை காமெடியாக சொல்லும் கதையாக இந்த படத்தின் கதையானது இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
அந்த ட்ரைலருக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips