Connect with us

லேட்டா வர்றியா! தப்பாச்சே! – முதுகில் ஒரு அடி- அஜித்தின் உண்மை முகம் என்ன தெரியுமா?

Tamil Cinema News

லேட்டா வர்றியா! தப்பாச்சே! – முதுகில் ஒரு அடி- அஜித்தின் உண்மை முகம் என்ன தெரியுமா?

Social Media Bar

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் தல அஜித். சினிமாவில் பெரும் ரசிக வட்டாரத்தை ரசிக மன்றமே இல்லாமல் வைத்திருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டும்தான். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளார்.

அஜித் அனைவருக்கும் உதவக்கூடியவர் என்று பெயர் பெற்றவர். சினிமா பிரபலங்கள், கலைஞர்கள் பலரே அஜித் மற்றவர்களுக்கு எந்த அளவிற்கு உதவக்கூடியவர் என்பதை கூறியுள்ளனர்.

அப்படி அஜித்தை பற்றி கேள்விப்படும் நிகழ்வுகளில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று உண்டு. ஒருமுறை அஜித் படப்பிடிப்பிற்கு வந்திருந்த போது அனைவரும் மேக்கப் போட்டு தயாராகி கொண்டிருந்தனர். அஜித்தும் மேக்கப் போட்டு தயாராக வேண்டும். ஆனால் அவர் தயாராகாமலே அமர்ந்திருந்தார்.

ஏனெனில் அவருக்கு மேக்கப் போடும் இளைஞன் இன்னும் வரவில்லை. சிறிது நேரம் கழித்து தாமதமாக அந்த இளைஞன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தான். அவனை பார்த்த அஜித் ஏன் இவ்வளவு தாமதம். மற்றவர்கள் எல்லாம் ஏற்கனவே மேக்கப் போட்டு தயாராகிவிட்டனர். உன்னால்தான் எனக்கு தாமதம் என கோபப்பட்டார் அஜித்.

உடனே அந்த இளைஞன் , ஐயா நான் பஸ் பிடித்துதான் இங்கு வரணும். ரெண்டு பஸ் மாறி வர்றதுக்குள்ள தாமதமாயிடுச்சு. என கூறியுள்ளார். இதை கேட்டதும் அஜித் உடனே அவரது உதவியாளை அழைத்து பேசியுள்ளார். அன்று மாலைக்குள் படப்பிடிப்பு தளத்தில் புது மோட்டார் பைக் வந்து இறங்கியது. அதை அந்த இளைஞனிடம் கொடுத்த அஜித் இனி படப்பிடிப்பிற்கு நேரத்திற்கு வர வேண்டும் என கூறினார்.

இதனால் மனம் நெகிழ்ந்து போன இளைஞன் அவரது காலில் விழ சென்றுள்ளான். உடனே அவனது முதுகில் ஒரு அடி கொடுத்த அஜித் இதெல்லாம் எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார்.

அஜித்தோடு வேலை பார்த்த ஒரு நடிகர் இதை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

To Top